How to get rid of wastes in the body 5 amazing

உடல் கழிவுகளை முழுமையாக வெளியேற்ற என்ன செய்ய வேண்டும்(How to get rid of wastes in the body 5 amazing)

பொதுவாக நமது உடலில் இருக்கும் கழிவுகளை முழுமையாக வெளியேற்றினால் போதும், ஆரோக்கியம் எப்பொழுதும் சிறப்பாக இருக்கும். அதை எவ்வாறு வெளியேற்றுவது என்பது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

இங்கிலீஷ் மருத்துவ முறைக்கு முன்பு நாம் அனைவரும் பின்பற்றியது நம்முடைய பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ முறை மட்டுமே.

இது மட்டுமே இயற்கையான முறையில் இருந்து பெறப்படும் மூலப்பொருட்கள் மூலம் எந்த ஒரு வியாதிக்கும் மருந்து கொடுக்கிறது.

ஆனால் ஆயுர்வேத முறை மூலம் ஒரு வியாதி குணம் செய்வதற்கு சிறிது நாட்கள் எடுத்துக்கொள்ளும், ஆனால் இதில் எந்த ஒரு பக்க விளைவுகளும் வராது அது மட்டுமில்லாமல் உடல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கும்.

உடலில் நச்சுக்கள் சேர்ந்தால் அவை ஆரோக்கியத்தில் கண்டிப்பாக குறைபாட்டை ஏற்படுத்தும், இதை எப்படி வெளியேற்றுவது ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நச்சு என்பது நமது உடல் மற்றும் மனதிற்கு உள்நுழைந்து இயல்பான நிலையில் ஒரு சமநிலையின்மை உருவாக்கி உடலில் காலப்போக்கில் நோய்கள் உருவாவதற்கு வழிவகை செய்கிறது.

நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகள், தனிப்பட்ட பொருட்கள், மற்றும் வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள்,சுவாசிக்கும் காற்று, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் பிற இடங்களிலும் காணப்படும் நச்சு.

நீண்ட நாள் மன அழுத்தம், முழுமையாக மறக்கமுடியாத வலி , அனுபவங்கள், கோபம், கட்டுக்கடங்காத உணர்ச்சிகள், எதிர்மறை சிந்தனைகள், போன்றவை 2வது நஞ்சுகளாக இருக்கிறது நமது உடலில்.

How to get rid of wastes in the body 5 amazing

எதற்காக ஆயுர்வேத வழியை தேர்வு செய்ய வேண்டும்

ஆயுர்வேதம் என்பது இயற்கையான மருத்துவ செயல்முறையாக இருக்கிறது, இந்த இயற்கை முறையால் நமது உடல் பக்க விளைவுகள் எதுவும் இல்லாமல் சுத்திகரிக்கப்படுகிறது.

குளிர்காலத்தில் நம்மை உஷ்ணமாகவைத்துக்கொள்ள வழக்கத்துக்கு அதிகமான உணவுகள் எடுத்துக்கொள்வது வழக்கம், இந்த காலத்தில் நமது உடலில் இருந்து நச்சுத்தன்மை அகற்றுவது என்பது முடியாத காரியமாக இருக்கிறது.

ஆயுர்வேதத்தின் நச்சு நீக்கும் முறைகள் பல நூற்றாண்டுகளாக பாதுகாப்பானதாக மக்களால் பேசப்படுகிறது.

நச்சுக்கள் இருப்பதற்கான அறிகுறிகள் உடலில்

உடல் எடை அதிகமாக இருப்பது போன்ற உணர்வு மற்றும் சோம்பல்.

ஒழுங்கற்ற அல்லது சமம் இல்லாத அளவில் பசி எடுப்பது.

பொதுவாக உடல் மற்றும் மூட்டுகளில் அதிகப்படியான வலிகள்.

இந்த அறிகுறிகள் எல்லாம், இறைச்சி, பாலாடைக்கட்டி, இனிப்பு, மற்றும் வறுத்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் உண்டாகிறது.

கரை, முகப்பரு மற்றும் முகத்தில் வெடிப்பு போன்றவை ஏற்பட்டு தோல் பார்க்க மந்தமாக இருக்கும்.

வாயில் சுவை தன்மை மாறுதல், நாக்கில் வெள்ளை நிறத்தில் புள்ளிகள் இருப்பது, வயிறு வீக்கம், வாய்வுத்தொல்லை, வியர்வையில் துர்நாற்றம் வீசுதல், மலச்சிக்கல், போன்றவை இருக்கலாம்.

ஆற்றல் இல்லாமல் இருப்பது, மனம் தெளிவு இல்லாமல் இருப்பது, எப்பொழுதும் சோர்வு, எதிலும் ஆர்வமற்ற உணர்வு, வயிறு, கால்கள், அல்லது உடல் முழுவதும் கனமாக உணர்வது, மூச்சு விடுவதில் சிரமம், சைனஸ் பிரச்சனை, உடலில் தடைபட்ட உணர்வு போன்றவை, கூட உடலில் இருக்கும் நச்சுகளுக்கு முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது.

இரவில் 7 முதல் 8 மணி நேரம் சரியாக தூங்கியும் மறுநாள் உடல் சோர்வு அதிகமாக இருந்தால் அது உடலில் நச்சு இருப்பதற்கான முக்கிய அறிகுறி.

வீட்டில் எளிமையாக இதனை நீக்கலாம்

நீங்கள் இதற்கான செயல்முறைகளை வீட்டில் செய்ய தொடங்கும் பொழுது உங்கள் உணவில் குளிர்ந்த பானங்கள், அதிகப்படியான ஆல்கஹால், புகை பிடிக்கும் பழக்கம், அதிகமான பால் பொருட்கள், இனிப்புகள் பழங்கள், இறைச்சி, மீன், முட்டை, போன்றவற்றை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும்.

செயற்கையான முறையில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, மாவு பொருட்கள், பழைய உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பேக்கரியில் அதிகநாள் வைக்கப்பட்ட உணவுகள், மைக்ரோ ஓவனில் சமைக்கப்பட்ட உணவுகள், புளித்துப் போன ஊறுகாய், மற்றும் வினிகர், புளிக்க வைக்கப்பட்ட உணவுகள், அதிக சூட்டில் வறுக்கப்பட்ட உணவுகளை, முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

உங்களுடைய உணவில் நீங்கள் அதிக அளவில் மஞ்சள் ,சீரகம், கொத்தமல்லி, கடுகு விதைகள், இஞ்சி, போன்ற மூலிகை மற்றும் அதிக மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளவும்.

மேலும் ஆமணக்கு எண்ணெய் சிறிய அளவில் உணவில் சேர்த்து கொண்டால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு பெரும் பங்கு வகிக்கும்.

உங்கள் உணவில் நீங்கள் மற்றொரு விஷயம் கண்டிப்பாக செய்ய வேண்டும். அது என்னவென்றால் துவர்ப்பான உணவு, லேசான காரம் சேர்க்கப்பட்ட உணவுகளை கட்டாயம் சேர்க்க வேண்டும்.

மூலிகை தேநீர் குடிப்பது நல்ல பலனைத் தரும், வேகவைத்த காய்கறி சூப் வகைகள் தவிர்க்காமல் உணவில் எடுத்து கொள்ளுங்கள்.

ஏலக்காய், வெந்தயம், இலவங்கப்பட்டை, பெருசீரகம், இஞ்சி, இந்த மசாலாக்கள் எல்லாம் நமது செரிமானத்தை சரியாக தூண்டுகிறது, உடல் சுத்திகரிப்பு இதனால் அதிகமாகிறது.

உணவை எடுத்துக் கொள்ளும் நேரம்

அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும் பகலில் காபம் உண்டாகும் காலம் காலை  6 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, இந்த நேரத்தில் உடலில் நச்சுக்கள் அதிகரிக்கும் இந்த மாதிரியான நேரத்தில் உணவு உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

இதை இன்றைய காலகட்டங்களில் நிச்சயமாக செய்ய முடியாது, இதற்கு பதிலாக உடலில் உள்ள காபம் குறைக்கும் உதவும் வகையில் உள்ள உணவில் கவனம் செலுத்துங்கள், இந்த நேரத்தில் குளிர்ந்த உணவுப் பொருட்கள், இனிப்பு உணவுகள், பிரெட், வெண்ணெய், சீஸ், போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது உங்களுக்கு நல்லதாகும்.

தண்ணீர் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்

எப்படி ஒரு உணவை சாப்பிட வேண்டும் என்று ஆயுர்வேதத்தில் சில விதிமுறைகள் உள்ளது அது போலவே தண்ணீரை குடிக்கவும் குறிப்பிட்ட அளவு உள்ளது நச்சுக்களை வெளியேற்றும் போது ஒருவர் சராசரியாக 1.5 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியமாகும்.

தண்ணீர் மிதமான சூட்டில் அல்லது சூடாக இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், பொதுவாக வெதுவெதுப்பான நீர் குடிப்பது மிகவும் நல்லது.

சுத்தமான நீரை உறுதி செய்யுங்கள்

நச்சுக்களை வெளியேற்ற நீங்கள் முடிவு செய்த பிறகு நீங்கள் எடுத்துக்கொள்ளும் தண்ணீர் மிக சுத்தமாக இருக்க வேண்டும். அதற்கு இஞ்சி தேனீர், குடிப்பதால் உடலில் நச்சுக்கள் வெளியேற்றுவதை உறுதி செய்யலாம். உடலில் நச்சுக்கள் வெளியேறும் போது நீங்கள் ஹைட்ரேட் ஆக இருப்பது மிக மிக அவசியம்.

இன்றைய ஆங்கில மருத்துவம் மற்றும் பழைய காலத்தில் இருக்கும் பாரம்பரிய மருத்துவம் கூட ஒரே அளவான தண்ணீர் குடிக்க பரிந்துரை செய்கிறது, இதை நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஏனென்றால் உங்களுடைய வயது, உடல் எடை, உங்களுடைய உயரம், போன்றவற்றிற்கு ஏற்ப தினமும் நீங்கள் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தண்ணீர் சரியான அளவில் எடுத்துக் கொண்டால் நமது உடல் சுத்தமாக்குவது மட்டுமில்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

இதனால் செரிமான அமைப்பு சரியான முறையில் இயங்கும், இஞ்சி டீ குடிப்பது ஆங்கில மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவமும் பரிந்துரைக்கிறது.

உங்களுடைய செரிமான அமைப்பை கவனிக்க வேண்டும்

How to get rid of wastes in the body 5 amazing

உங்களுடைய செரிமான அமைப்பு உடலில் சரியாக மற்றும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே உங்களுடைய உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக மற்றும் நல்ல சிந்தனையில் இருக்கும் ஏனென்றால் ஒட்டுமொத்த உடலுக்கு தேவையான ஆற்றலை தயாரிப்பு உங்களுடைய செரிமான அமைப்பு.

ஆரோக்கியமான எண்ணெய் உங்கள் உணவில் பயன்படுத்துங்கள் இதனால் கொழுப்பில் கரையக்கூடிய நச்சுக்கள் வெளியிடுவது எளிதாகிறது, அத்துடன் நமது உடலில் கொழுப்பு மற்றும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன்களை அகற்ற உதவுகிறது.

இன்றைய காலகட்டங்களில் ஆங்கில மருத்துவம் அதிக அளவில் பரிந்துரைப்பது என்னவென்றால், உணவிற்கு பயன்படுத்தும் எண்ணெய் என்பது மிக மிக இயற்கையான மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என பரிந்துரைக்கிறது.

ஏனென்றால் உடல் கொலஸ்ட்ரால், இதயத் தமனிகளில் அடைப்பு, உடல் பருமன், போன்றவற்றிற்கு முக்கியமாக இருப்பது உணவிற்கு பயன்படுத்தும் எண்ணெய் என்று தெரிவிக்கிறார்கள்.

what are the types of foods that affect masculinity

நச்சுக்களை வெளியேற்றுவதற்கான செயல்முறைகள்

நச்சுகளை வெளியேற்ற வேண்டும் என முடிவு செய்தால், தினசரி அட்டவணை நீங்கள் கட்டாயம் உருவாக்க வேண்டும் மற்றும் அதனை பின்பற்ற வேண்டும். காலை எழுந்ததும் முதலில் நீங்கள் தியானம் செய்யவேண்டும், மென்மையான யோகாசனம் மசாஜ் செய்வது உடலுக்கு நல்லது.

Click here to view our YouTube channel

மதியம் உணவு எடுத்துக் கொண்ட பிறகு செரிமானத்தை எளிதாக 10-15 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள், உடலில் உள்ள கெட்ட நீரை வியர்வையாக வெளியேற்றுவதற்கு தகுந்த உடற்பயிற்சியை செய்யுங்கள்.

Best 10 health benefits list for King fish

இரவு உணவு எளிதாக மற்றும் லேசானதாக இருக்கவேண்டும், இளஞ்சூட்டில் ஒரு குளியல் எடுப்பது உங்களுக்கு நல்லது, இரவு உறங்குவதற்கு முன்பு சிறிது நேரம் நடைபயிற்சி செய்யுங்கள், இரவு 10 மணிக்கு முன்பு துங்கி விடுங்கள், காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து விடுங்கள்.

Leave a Comment