How to get white skin tamil beauty tips 2022
முகம் வெள்ளையாக மாற காபி தூள் எப்படி பயன்படுத்துவது இதைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்..!
காபியை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது அந்த வகையில் காபி பிரியர்கள் அதிகமாக இருக்கிறார்கள் காபி ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும்,காப்பி தூளை வைத்து சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க முடியும்.
முகத்தை அழகாக மாற்றுவதற்கு பல்வேறு வழிகள் இருக்கிறது அதில் ஒன்றுதான் காபித்தூள் பயன்படுத்துவது இதனை எளிமையாக நீங்கள் வீட்டில் செய்யலாம்.
எல்லாருக்கும் தங்களுடைய முகத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் அது போல் பளிச்சென்று தோற்றமளிக்க செய்ய வேண்டும் என விருப்பம் இருக்கும்.
அதற்கு சில நபர்கள் பியூட்டிபார்லர் செல்வார்கள் சில நபர்கள் இயற்கையான பொருட்களை வைத்து செய்து விடுவார்கள்.
காபித்தூள் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
குறிப்பு 1
முகத்திற்கு அழகு முகத்தில் தெரியும் அந்த பிரகாசமான சந்தோசமான ஒளிதான் அப்படிப்பட்ட பொலிவான முகத்துக்கு அரைகப் காபி தூளில் சிறிது பாலுடன் சேர்த்து கெட்டியாக பசை கொள்ள வேண்டும்.
இதனை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் இறந்த செல்கள் நீங்கி முகம் பிரகாசமாக மாறிவிடும்.
குறிப்பு 2
உடலிலுள்ள வரட்சியான தோலை நீக்கி சருமத்தை மென்மையாக்கவும் இறந்த செல்களை நீக்கவும் காப்பியை பயன்படுத்தலாம்.
காப்பி சருமத்தை இளமையாக எப்போதும் வைத்திருக்கும் காபி உடன் ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை சேர்த்து உடலில் மசாஜ் செய்ய வேண்டும்.
இதனை உங்களது சருமத்திற்கு ஏற்ப தினமும் கூட செய்யலாம் இவ்வாறு செய்வதினால் உடல் முழுவதும் மென்மையாகவும் வெள்ளையாகும் தோற்றமளிக்கும்.
குறிப்பு 3
காபி பொடியில் சிறிதளவு கரும்பு சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து முகத்திற்கு வட்ட வடிவத்தில் மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க முடியும்.
தலைமுடி பராமரிப்பு குறிப்புகள்
பொலிவிழந்து போன தலை முடியின் வேர்களுக்கு காப்பித்தூள் உயிரை தருகிறது சிறிதளவு காபி தூளை ஈரமான தலையில் தடவி இரண்டு நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
பின்னர் நீங்கள் தினசரி பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு முடியை நன்கு அலசி விட வேண்டும்.
இதனால் இறந்த செல்கள் நீக்கப்படுகின்றன தலைமுடியும் நன்றாக வளர ஆரம்பித்துவிடும்.
நல்லெண்ணெய் ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
கண்களின் வீக்கம் குறைய
காப்பி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மேலும் கண்களுக்கு கீழ் உள்ள வீக்கத்தையும் குறைக்க இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கிறது.
6 best foods increasing your blood cells
நீங்கள் காபி போடும் போது வடிகட்டி காபி தூளை எடுத்து கண்களின் கீழ் உள்ள வீக்கங்கள் மீது போட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால் கண்களில் உள்ள வீக்கம் முழுவதும் குறைந்துவிடும்.