கோழி வளர்ப்பில் அதிக லாபம் தரக்கூடிய வணிகத்தைப் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம் (how to kadaknath poultry farming 5 best tips)
எப்பொழுதும் மிகவும் லாபகரமான தொழில் என்றால் அது விவசாய தொழில் மட்டுமே கடந்த 20 வருடங்களாக அதில் சரியான லாபம் இல்லை என்று சொல்பவர்களே அதிகம். இதனை நிவர்த்தி செய்ய மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது ஆனால் மேலும் மேலும் விவசாயிகளின் பிரச்சினைகள் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதற்கு மத்திய, மாநில ,அரசுகள் தனியாக விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தும் தொலைக்காட்சிகள், இலவச தொலைபேசி எண்கள், மாவட்டம் மற்றும் கிராமம் வாரியாக விவசாயிகளுக்கு உதவுவதற்கு பல்வேறு விவசாயம் சார்ந்த பயிற்சிகளை அளிக்கிறது அதன் விளைவாக நாட்டு மக்களிடம் இயற்கை சார்ந்த உணவு பொருட்களின் நன்மைகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்பில் அதிக லாபம் தரும் தொழில்களில் மிக முக்கியமான தொழில் என்றால் கோழி வளர்ப்பு இப்பொழுது இருக்கும் காலகட்டங்களில் நாட்டுக்கோழிகளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது .
கடக்நாத் கருங்கோழி வளர்ப்பு முறை இப்பொழுது பிரபலமடைந்து வருகிறது இந்தக் கோழியின் பூர்வீகம் மத்தியபிரதேசம் இங்குதான் இதன் வகை கோழிகள் அதிக அளவில் காணப்படுகிறது. அனைத்து விதமான தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் வளரக் கூடியது இந்த கருங்கோழி வளர்ப்பு முறைகளும் அதன் மருத்துவ குண நலன்களும் மற்றும் வர்த்தக முறைகள் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
கருங்கோழி மற்றும் அதன் குணாதிசயங்கள்.
தமிழ்நாட்டில் காணப்படும் நாட்டுக்கோழியை விட இந்தக் கோழியின் எடை குறைவு இந்த கருங்கோழி முழுவதும் கருப்பு நிறத்தில் மட்டும் இருக்கும் மேலும் இறக்கைகள், இறைச்சி, எலும்பு, ரத்தம், என சகலமும் கருப்புதான் இந்தக் கோழியின் மெலனின் என்ற நிறமி அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த கருங்கோழி சேவல் சராசரியாக ஆறு மாதத்திற்கு ஒன்றரை கிலோ முதல் 2 கிலோ வரை வளரக்கூடியது. பெட்டைக் கோழி ஒரு கிலோ வரை வளரும் தன்மை கொண்டது இந்த கருங்கோழி வருடத்திற்கு 100 முதல் 150 முட்டைகள் வரை இடும் தன்மை கொண்டது. இந்த கோழி அடை காக்கும் திறன் மிகவும் குறைவாக உள்ளதால் இந்த கோழி இனம் இப்பொழுது படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது என்று அரசு தெரிவிக்கிறது.
கருங்கோழி எந்த முறையில் வளர்த்தால் பாதுகாப்பாக இருக்கும்.
கருங்கோழி கோழி குஞ்சுகளுக்கு முதல் 20 நாட்களுக்கு தேவையான செயற்கையான வெப்பம் தர வேண்டும் அதற்கு தகரத்தை வட்ட வடிவில் அமைத்து தொங்க விட்டால் போதும் குறைந்தபட்சம் 50 கோழி குஞ்சுகளுக்கு 50 வாட்ஸ் பல்பு போதுமானதாக இருக்கும் கோழிக்குஞ்சுகளின் எண்ணிக்கை அதிகமானால் பல்ப்புகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
குளிர்காலம் அல்லது இரவு நேரங்களில் கோழிக்குஞ்சுகளுக்கு குளிர் காற்று தாக்காத அளவிற்கு மறைப்பு அமைக்கவேண்டும் 20 நாட்களுக்குப் பின்பு குஞ்சுகளை கொட்டகைக்கு மாற்றலாம் நான்குபுறமும் 2 முதல் 4 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பி அதற்கு மேலே வழை அடைத்து கொட்டகை அமைக்கவேண்டும் தரைப்பகுதியில் தவிடு, அல்லது நிலக்கடலை தோலை கொட்டி மெத்தை போன்று அமைக்க வேண்டும்.
பாதுகாப்பு மற்றும் விலை குறைந்த தீவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இரத்தக்கழிச்சல் வராமல் இருப்பதற்கு மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி கோழிக்குஞ்சுகளுக்கு கொடுத்து வரவேண்டும்.
சின்ன வெங்காயம், மஞ்சள்தூள், விளக்கெண்ணை, சேர்த்து கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வசம்பை குஞ்சுகள் குடிக்கும் தண்ணீரில் அடிக்கடி கலந்து விட வேண்டும்.
சந்தைகளில் இயற்கையான முறையில் அழுகிய பழங்களை குறைந்த விலை கொடுத்து வாங்கி கோழிக்குஞ்சுகளுக்கு கொடுக்கலாம்.
சளி பிடிக்காமல் இருப்பதற்கு குளிர்காலங்களில் குறிப்பாக அதிமதுரம் பொடியை கலந்து கொடுக்க வேண்டும்.
கோழி மற்றும் முட்டைகளை விற்பனை செய்வதற்கு சரியான வழிமுறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதிக அளவில் செலவு செய்து சரியான முறையில் கருங்கோழி அதிகளவில் வளர்த்தால் லாபம் கிடைக்கும் இதற்கு சரியான தேர்வு சரியான நேரத்தில் நீங்கள் விற்பனை செய்தால் மட்டுமே கருங்கோழி ஒரு முட்டை ஆரம்ப விலை 40 ரூபாய் தொடங்குகிறது.
நீங்கள் கருங்கோழி பண்ணை அமைக்க விரும்பினால் குறைந்தபட்சம் 100 கோழியில் இருந்து தொடங்குங்கள். கருங்கோழி வளர்ப்பில் முட்டை விற்பனை, குஞ்சுகள் விற்பனை, வளர்ந்த கோழி இறைச்சி விற்பனை, என்று 3 வகையில் வருமானம் ஈட்ட முடியும் உங்களால்.
முட்டை விற்பனை என்று எடுத்துக்கொண்டால் குறைந்தபட்சம் 50 தாய் கோழிகளிடம் இருந்து ஆண்டுக்கு தலா 100 முட்டை என்ற கணக்கில் 5 ஆயிரம் முட்டைகள் கிடைக்கும் சுமார் 5 ஆயிரம் முட்டைகளை 40 ரூபாய் என்ற வீதம் விற்பனை செய்தால் மொத்தம் 200,000 வருமானம் பார்க்கலாம்.
கருங்கோழி குஞ்சு விற்பனை என்றால் ஐந்தாயிரம் முட்டைகளையும் குஞ்சுகளாக பொரிக்க வைக்கையில் 100% குஞ்சுகள் கிடைக்க வாய்ப்பில்லை ஆகவே 75 சதவீதம் என்று வைத்துக் கொண்டாலும் 3500 கோழி குஞ்சுகள் கிடைக்கும் ஒரு கருங்கோழி குஞ்சு 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகிறது.