How to keep a healthy heart tips

How to keep a healthy heart tips

உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்று தெரிந்து கொள்ளுங்கள் (How to keep a healthy heart tips)

இந்தியாவில் 2019ஆம் ஆண்டு மட்டும் 17 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இதய நோயால் மரணம டைந்துள்ளார்கள். இது மேலும் அதிகரித்து வரும் 2030 ஆம் ஆண்டில் இரண்டு கோடிக்கு அதிகமான மக்கள் இருதய நோயால் மரணமடைய வாய்ப்புகள் உள்ளதாக அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

உங்கள் இதயத்தை நீங்கள் எவ்வாறு பாதுகாக்கிறார்கள் என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். இன்றைய காலகட்டத்தில் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ் இதன் காரணமாக பெரும்பான்மையான நாடுகள் ஊரடங்கு உத்தரவு மற்றும் மக்கள் வெளியில் நடமாட்டத்தை குறைக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

உடற்பயிற்சி நிலையம், நடைப்பயிற்சிக்கு தடை செய்யப்பட்டது மருத்துவமனைகளில் நிரம்பி வழியும் கொரோனா நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் இதன் காரணங்களால் இருதய நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவிகள் கிடைப்பது கடினமாகிவிட்டது 2020ஆம் ஆண்டு.

உடல் பலவீனம்.

நீங்கள் அடிக்கடி எந்த ஒரு வேலை செய்யாமலும் விரைவாக  சோர்வாக உணர்கிறீர்கள் என்றாள் உங்கள்  இருதய ஆரோக்கியத்தில் ஏதோ மாற்றம் நடைபெறுகிறது என்று அர்த்தம்.

உறங்கும் போது ஏற்படும் மாற்றம்.

உங்கள் இதயத்தின் ஆரோக்கியம் குறைய தொடங்கினாள் நீங்கள் உறங்கும் போது பல்வேறு வகையான மாற்றங்களை காணலாம் அதில் இரவில் அடிக்கடி விழித்துக் கொள்வது வழக்கத்திற்கு மாறாக மூச்சுவிடுவது

இரவில் காற்று குளிர்ந்த நிலையில் இருப்பதால் காற்றின் அடர்த்தி அதிகமாக இருக்கும்  உங்களுக்கு குறட்டை விடும் பழக்கம் இருந்தால் இதயம் ஆரோக்கியமாக இல்லை எனில் குறட்டை சத்தம் அதிகமாகும்.

உணவு பழக்கவழக்கங்கள்.

How to keep a healthy heart tips

இன்றைய காலகட்டத்தில் மனித உடலில் நோய்கள் உருவாக முக்கிய காரணமாக இருப்பது நமது உணவு பழக்க வழக்கங்கள். உணவின் சுவையை அதிகரிக்க தடைசெய்யப்பட்ட உணவு பொருட்களை பயன்படுத்துவது புகை பிடிப்பது, மது பழக்கம், இரவில் நீண்ட நேரம் கண் விழித்து இருப்பது அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பது இதன் காரணங்களால் இதயத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

நாம் உணவிற்கு நம் நாட்டின் தட்பவெட்பநிலை சூழ்நிலைக்கு ஏற்ற கடலை எண்ணெய் பயன்படுத்தினால் நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். விளம்பரங்களில் வரும் வெளிநாட்டு சமையல் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

ஆரோக்கியமற்ற ரசாயனங்கள் அதிகம் கலந்த பேக்கரி உணவுகளை தினசரி உணவில் எடுத்துக்கொண்டால் இருதய வால்வுகளில் தேவையற்ற கொழுப்புகள் படிய தொடங்கும்.

நெஞ்சு பகுதியில் ஏற்படும் மாற்றம்.

How to keep a healthy heart tips

இதய வால்வுகளில் ரத்தம் செல்லும் போது தடைபட்டால் நெஞ்சுப்பகுதியில் பாரமாகவும் இறுக்கமாகவோ வலியுடன் குண்டூசியால்குத்துவது இதுபோல் அடிக்கடி உணர்ந்தால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

வலது கை தோள்பட்டையில் வலி ஏற்படுதல், அதிக வியர்வை வடிதல் போன்றவைகள் இதயம் ஆரோக்கியமாக இல்லை என்பதை அறிகுறி மூலம் உங்களுக்கு உணர்த்துகிறது.

Ayushman Bharat Yojana 2020 details in Tamil

கொரோனா வைரஸ்.

கொரோனா வைரஸ் இதயத்திற்கு நீண்ட கால மற்றும் குறுகிய கால சேதத்தை ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட இருதய நோய்களை கொண்டவர்களுக்கு இந்த வைரஸ் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

வயதானவர்கள் தான் இந்த பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள் என்ற நம்ப முடியாத சூழ்நிலையில் இன்றைய காலகட்டம் உள்ளது. ஏனென்றால் ஆரோக்கியமான இளைஞர்கள் கூட திடீரென்று மாரடைப்பால் மரணமடைவது மருத்துவத் துறைக்கு புரியாத புதிராகவே உள்ளது twitter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *