How to make aloe vera hair oil best tips 2022
தலைமுடி வளர்ச்சிக்கு வீட்டிலேயே இயற்கையான கற்றாழை ஹேர் ஆயில்..!
பழைய காலத்தில் வாழ்ந்த நம்முடைய மூதாதையர்கள் உடலை மட்டுமல்லாமல் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருந்தார்கள் இதனால் எப்பொழுதுமே அவர்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள்.
இதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டது மட்டுமில்லாமல் விவசாய தொழில் மற்றும் செய்துகொண்டார்கள்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான நபர்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றிவிட்டதால் பல்வேறு வகையான நோய்கள் மக்களைத் தாக்குகின்றன.
இன்றைய இளைய தலைமுறையினரின்ர் மிக முக்கிய பிரச்சினையாக இருப்பது முடி உதிர்வு பிரச்சினை.
இதனை சரி செய்ய பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்தாலும், முழுமையாக சரியாக இயற்கையான வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே நடக்கும்.
இந்த முடி உதிர்வு ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது.
பலருக்கு முடி அதிகமாக கொட்டுவதால் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் நிறைந்த மட்டமான எண்ணெய்யை வாங்கி பயன்படுத்துவதால் அதிக முடி இழப்பு பிரச்சினை ஏற்படுகிறது.
இதற்கு வீட்டிலேயே எளிமையாக சோற்றுக்கற்றாழை மூலம் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தினால், முடி உதிரும் பிரச்சனை நீங்கும், உங்களுடைய பணமும் சேமிப்பாகும்.
கற்றாழை ஹேர் ஆயில் தயாரிக்க தேவையான பொருட்கள்
கற்றாழை – 1 நறுக்கிய
தேங்காய் எண்ணெய் – 1/2 பவுல்
சுடு தண்ணீர் – சிறிதளவு
கற்றாழை ஆயில் செய்முறை விளக்கம்
How to make aloe vera hair oil best tips 2022 கற்றாழை எண்ணெய் தயாரிப்பது அதற்கு முதலில் சுத்தமான ஒரு கற்றாழையை நன்கு கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு சிறிய பவுலில் உருக்கி வைத்துள்ள தேங்காய் எண்ணெய் அதில் சேர்க்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய் சேர்த்த பிறகு அதனுடன் நறுக்கி வைத்துள்ள கற்றாலையை நன்கு சேர்க்கவும்.
அடுத்து சூடான நீரில் கற்றாழை எண்ணெய் வைத்து 10 முதல் 15 நிமிடம் வரை சூடு செய்ய வேண்டும்.
எண்ணெய் ஒரு மரக் கரண்டி பயன்படுத்தி கிளற வேண்டும்.
இப்போது கற்றாழை எண்ணெயை சிறிது நேரம் நன்கு ஆற வைக்கவேண்டும் குளிர்ந்த காற்றில்.
இப்பொழுது இதனை நீங்கள் பயன்படுத்தலாம் ஆறவைத்த பிறகு இந்த எண்ணெயை வடிகட்டி கொள்ள வேண்டும் அந்த ஹேர் ஆயிலை தலையில் நன்றாக மசாஜ் செய்யலாம் 40 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை தலையில் நன்கு ஊற வைக்க வேண்டும்.
அதன்பிறகு மைல்டான ஷாம்புவால் தலையை நன்கு அலச வேண்டும்.
இதனுடைய நன்மைகள் என்ன
How to make aloe vera hair oil best tips 2022 கற்றாழை ஹேர் ஆயில் ஆனது புதிதாக முடி வளர்ச்சி அடைவதற்கு உதவியாக இருக்கிறது.
கற்றாழையில் அதிக அளவில் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் முடி உதிர்வதை முற்றிலும் தடுத்து விடுகிறது.
இந்த ஆயிலை தொடர்ந்து பயன்படுத்துவதால் முடி வளர்ச்சி அடைகிறது.
கூந்தல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கிறது.