How to make Amazing delicious Rava Idli 2023
சுவையான ரவா இட்லி செய்வது எப்படி..!
இட்லி பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள் நம்முடைய கலாச்சாரத்தில் இட்லிக்கு எப்பொழுதும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
ஏனென்றால் நீராவி மூலம் வேகவைப்பதால் இதில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது எளிதில் ஜீரணமாகும் இதனை காலை உணவாகவும் மற்றும் இரவு உணவாகவும் எடுத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.
இன்றைய காலகட்டங்களில் இட்லியை ஆரோக்கியமான உணவாக மாற்றுவதற்கு சில இயற்கை பொருட்கள் சேர்க்கப்படுகிறது,இந்தக் கட்டுரையில் சுவையான ரவா இட்லி செய்வது எப்படி என்று முழுமையாக பார்க்கலாம்.
ரவா இட்லி செய்ய தேவையான பொருட்கள்
ரவா- 1 கப்
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
தயிர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – 1 கப்
ரவா இட்லி செய்முறை எப்படி
How to make Amazing delicious Rava Idli 2023 அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு நெய் ஊற்றி பிறகு முந்திரி சேர்த்து, முந்திரி நன்கு சிவந்து இரண்டாக உடையும் வரை நன்றாக வதக்கவும்.
அதன் பிறகு ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு, ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, சிறிய அளவில் நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், அரை தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு ஒரு கப் ரவா சேர்த்து வதக்கவும், இந்த பொருட்கள் சேர்த்து வைக்கும் பொழுது அடுப்பை குறைந்த தீயில் வைக்கவேண்டும், ரவா சூடு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
How to make Amazing delicious Rava Idli 2023 அதன்பிறகு பாத்திரத்தில் வதக்கிய பொருட்களை மாற்றிக் கொள்ளவும், அதில் தேவையான அளவு உப்பு, நீங்கள் எந்த கப்பில் ரவை சேர்த்திருக்கிறீர்களோ அதில் தயிர் ஒரு கப் சேர்க்கவும், பின் அதில் கொத்தமல்லி இலை சிறிதளவு, வதக்கி வைத்த முந்திரி சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ரவா அளந்த கப்பில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து ஊற வைக்க வேண்டும்.
How to make Amazing delicious Rava Idli 2023 ரவா ஊறியதும் நீங்கள் மாவு இட்லி எப்படி ஊத்தி வைப்பீர்களோ அதேபோல் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
இதற்கு தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, காரச் சட்னி, புதினா சட்னி, மட்டன் குழம்பு, போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.