How to make Ayurvedic Hair Oil best tips 2022
கூந்தல் வளர்ச்சிக்கு ஆயுர்வேதம் சொல்லும் எண்ணெய் வகைகள் என்ன..!
முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் எளிதாக மற்றும் பயனுள்ள தீர்வை ஆயுர்வேதத்தால் வழங்க முடிகிறது, இது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
ஆனால் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் வீட்டில் தயாரிக்கக்கூடிய இந்த எண்ணெய் வகைகள் உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு அபரிதமான வளர்ச்சியை கொடுக்கும்.
என்பதே பயன்படுத்தியதில் தெரிந்துகொள்ளலாம், அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
தலைமுடிப் பிரச்சினை என்பது மாசுபாடு, வாழ்க்கை முறை, உணவு முறை, சரியான பராமரிப்பின்மை, என பல காரணங்களை சார்ந்துள்ளது.
நீங்கள் பயன்படுத்த முடி தயாரிப்புகள் ரசாயனங்களை கொண்டு இருந்தால் இதுவும் தலைமுடிக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
இதை சமாளிக்க சிறந்த வழி வாரத்தில் இரண்டு முறையாவது எண்ணெய் தலைக்கு வைப்பதுதான்.
ஆயுர்வேதத்தின் படி தலைக்கு எண்ணெய் ஆனது பல்வேறு ஆற்றல் நிவாரணங்களை வழங்கக்கூடியது, தலைமுடி உச்சந்தலையில் எண்ணெய் தடவுவது புத்துணர்ச்சியூட்டும் பண்புகளை கொண்டுள்ளது.
மேலும் தலைப்பகுதியில் குவிந்திருக்கும் அதிகப்படியான வெப்பத்தை நீக்கி மன அழுத்தத்தில் இருந்து விடுபட செய்கிறது, இதன் மூலம் உடல் சமநிலையில் இருக்கும்.
ஆயுர்வேத சிகிச்சையில் சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வுகள் இருக்கிறது.
ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் கூந்தல் வளர்ச்சி எண்ணெய் தயாரிப்பு முறை குறித்து பார்க்கலாம் எளிமையாக இதனை வீட்டில் நீங்களே செய்து கொள்ளலாம்.
தேவையான மூலப்பொருட்கள்
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி(குறிப்பாக காம்பு நீக்கி இலைகள் மட்டுமே)
செம்பருத்திப் பூக்கள்
தேங்காய் எண்ணெய் 200 மில்லி அளவு
அத்தியாவசியமான எண்ணெய் சில துளிகள்
வெந்தயம் 3 டீஸ்பூன் அளவு
அகலமான பாத்திரத்தில் அனைத்தையும் கலந்து அத்தியாவசியமான எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து சூடேற்றவும்.
இவை கொதித்ததும் இறக்கி அறை வெப்பநிலையில் குளிர வைத்து கண்ணாடி பாட்டிலில் சேர்க்க வேண்டும், இப்பொழுது இந்த எண்ணெய் தயாராகிவிட்டது.
இதனை பயன்படுத்தும் முறை
இந்த எண்ணெயை தினமும் தலைக்குத் தேய்க்க வேண்டிய அவசியமில்லை வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே தலைக்கு வைத்தால் போதும்.
இந்த எண்ணெயை உச்சந்தலை முதல் முடி வரை நன்றாக தடவி மென்மையாக மசாஜ் செய்யவும் பிறகு மறுநாள் காலையில் ஷாம்பு கொண்டு தலைக்கு குளிக்கவும் அல்லது எண்ணெயை பயன்படுத்திய 3 மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
கறிவேப்பிலை பயன்கள்
கறிவேப்பிலை தலைமுடிக்கு சிறந்த ஊட்டச்சத்து, இது இளநரை வருவதை தடுக்கும், முடி உதிர்தலை கட்டுப்படுத்தும், கூந்தலை கருப்பாக வைக்கும், முடி இலைகளை பலப்படுத்தும்.
செம்பருத்தி பூக்கள்
How to make Ayurvedic Hair Oil இது கூந்தலை மென்மையாக்கி முடிக்கு ஊட்டமளிக்கும், பளபளப்பாக வைத்திருக்க உதவும், முடி வளர்ச்சியை தூண்டும், இதனை ஹேர் பேக்கவும் செய்யலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் பால் முதல், தேங்காய் எண்ணெய் வரை, அனைத்துமே தலைமுடிக்கு சிறந்த ஊட்டசத்தாக இருக்கிறது, தேங்காய் எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை சிறப்பாக மேம்படுத்தும்.
வெந்தயம்
How to make Ayurvedic Hair Oil வெந்தயம் குளிர்ச்சித்தன்மை கொண்டது, இது பொடுகை வெளியேற்றும், கூந்தல் வளர்ச்சிக்கு உதவும், கூந்தலை எப்போதும் பளபளப்பாக வைத்திருக்க உதவும்.
இது முடி வேர்கள் முதல் நுனி வரை பலப்படுத்துகிறது, இதனால் தலைமுடிக்கு வேண்டிய ஒட்டுமொத்த ஊட்டச்சத்தும் எளிமையாக கிடைக்கும்.
தலைமுடி உதிர்வு பிரச்சனையை கட்டுப்படுத்திவிடுகிறது, இந்த எண்ணெயை குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம், சில நாட்களிலேயே இதனுடைய பயன்கள் தெரிய ஆரம்பிக்கும்.