How to make Best Herbal soap at home 2022
தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிப்பு தொழிலில் செய்து அதிகமான லாபத்தைப் பெற முடியும்..!
தேங்காய் எண்ணெயில் இருந்து இயற்கை மூலிகை குளியல் சோப் தயாரிப்பு எப்படி என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம், இந்தத் தொழில் மூலம் நீங்கள் அதிகமான வருமானத்தை பெற முடியும்.
காரணம் இயற்கை குளியல் சோப்புக்கு அதிகமான வரவேற்பு மக்களிடத்தில் இருக்கிறது.
இது ஒரு சிறந்த குடிசைத் தொழிலாக செய்வதினால் மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கும், எனவே தயக்கமில்லாமல் தைரியமாக இந்த தொழில் தொடங்கலாம்.
இந்த தயாரிப்பு தொழிலை பொருத்தவரை வீட்டிலிருந்து கூட செய்யலாம் இதற்கு தனியாக இடம் அமைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
அதேபோல் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய ஒரு சிறந்த தொழிலாக இந்த தயாரிப்பு தொழில் விளங்குகிறது.
தேவையான மூலப்பொருட்கள்
தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர்
காஸ்டிக் சோடா எனப்படும் சோடியம் ஹைட்ராக்சைடு என்ற வேதிப்பொருள் கரைசலை (LYF) ஆங்கிலத்தில் கூறப்படுகிறது சுமார் 350 கிராம்.
தண்ணீர் 370 மில்லி
வாசனைதிரவியம் 20 மில்லி
சோப் தயாரிக்கும் முறை
How to make Best Herbal soap பாதுகாப்பு கவசம் கட்டாயம் அணிய வேண்டும் தண்ணீர் 370 மில்லி எடுத்து ஒரு கடினமான கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி அதனுடன்.
சோடியம் ஹைட்ராக்சைடு 135 கிராம் மெதுவாக கொண்டு சேர்த்துவர மர குச்சியால் நன்கு கலக்கி விடவேண்டும்.
சிறிது நேரத்தில் அதில் வேதியல் வினை நடக்கும் இந்த சமயத்தில் வெளியாகும் வாயுவை கட்டாயம் சுவாசிக்கக் கூடாது, இதன் நிறம் வெண்மையாக மாறி இருக்கும்.
அப்படியே சிறிது நேரம் வைத்து விடவேண்டும் 15 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் தண்ணீர் நிறத்திற்கு மாறிவிடும்.
அதன் பிறகு தேங்காய் எண்ணெய்யை சில்வர் பாத்திரம் அல்லது மின்சார குக்கரில் ஊற்றி சூடு செய்து.
அதனுடன் முன்னால் தயார் செய்து வைத்துள்ள சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலை எண்ணெயில் சேர்த்து நன்கு கலக்கிக்கொண்டு இருக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து கலக்கிக்கொண்டு இருக்கும்போது, எண்ணெய் தன்மை பசை போல் மாறிவிடும், அதுவரை கலக்கி கொண்டே இருக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய் சோப்பு தயாரிக்கும் முறை
How to make Best Herbal soap அதன் பிறகு பசைத்தன்மை அடைந்ததும் பாத்திரத்தை நன்கு மூடி நன்றாக வேகவிடவும் முன்பைவிட மேலும் இறுகி இருக்கும்.
இதற்கு பயன்படுத்தப்படும் அடுப்பின் வெப்பநிலை தொடர்ந்து ஒரே நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும், சுமார் 45 நிமிடம் முதல் 1.30 மணி நேரம் ஆகலாம்.
சோடியம் ஹைட்ராக்சைடு தேங்காயெண்ணையும் ஒன்றோடு ஒன்று கலந்து இருக்க வேண்டும், நீர் துளிகள் எதுவும் இல்லாத அளவிற்கு நன்றாக வெந்து இருக்க வேண்டும்.
இதை உறுதி செய்ய PH பேப்பரில் பசையைத் தடவினால் சிறிது நேரத்தில் நிறம் மாறி அளவு 7முதல் 10 இருக்க வேண்டும்.
கலவை சூடாக மாறியதும் வாசனை திரவியம் தேவைப்படும் அளவிற்கு 15 சொட்டுகள் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்து.
விரும்பும் வடிவத்தில் தயார் செய்து அதனுள் பட்டர் பேப்பர் போட்டு, அதன் மீது இக்கலவையை கொட்டி சமமாக பரப்பி வைக்கவும்.
அதன் பிறகு ஒரு நாள் முழுவதும் அப்படியே இருக்க விட்டு அடுத்த நாள் எடுத்து தேவையான அளவு துண்டுகளாக வெட்டி மீண்டும் 2 நாட்கள் உலர்த்தி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளலாம்.
எவ்வளவு வருமானம் கிடைக்கும்
75 கிராம் கொண்ட ஒரு சோப் தயாரிக்க ஆகும் செலவு ரூபாய் 10 மட்டுமே, வாடிக்கையாளரிடம் நேரடியாக 25 என்று விற்பனை செய்தால், ஒரு சோப்பு க்கு 15 ரூபாய் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
10,000 ரூபாய் இருந்தால் போதும் இந்த தொழிலை நீங்கள் தொடங்கிவிடலாம்.