How to make biscuit in home new idea 2021
வீட்டிலிருந்து சுயதொழில் பிஸ்கட் தயாரிக்கும் முறை தெரிந்து கொள்ளுங்கள்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய முதல் பொருளாக இருக்கிறது பிஸ்கட்.
பிஸ்கட் மக்களிடத்தில் எப்பொழுதும் பிரபலமாக இருந்து வருகிறது, அது மட்டும் இல்லாமல் டீ, காபி, உடன் பிஸ்கட்களை சேர்த்து சாப்பிடுவது பல மக்களின் அன்றாட பழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது.
இந்த பிஸ்கட் சந்தை வாய்ப்பு என்பது வருங்காலத்தில் அதிகமாக இருக்கும் ஏனென்றால் நொறுக்குத் தீனிகளில் அதிக அளவு எண்ணெய் சேர்ப்பது,, உப்பு சேர்ப்பது, மற்றும் சோடியம் போன்ற பொருட்கள் சேர்ப்பதால் உடலுக்கு பல்வேறு வகையான உபாதைகள் உருவாகிறது.
சில மருத்துவர்களும், சில நோயாளிகளுக்கு, பிஸ்கட்களை பரிந்துரைக்கிறார்கள் உணவு பட்டியலில்.
பன்னாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யும் பிஸ்கட்கள் கைபடாத செய்யப்படுகிறது என்று அந்த நிறுவனங்கள் விளம்பரம் செய்கிறது, அதற்கேற்றார்போல் அந்த பிஸ்கட்டின் தரம் மற்றும் சுவை உடலுக்கு கிடைக்க கூடிய ஆற்றல் போன்றவை அமைந்துள்ளது.
இப்பொழுதெல்லாம் சிறிய பெட்டிக் கடை முதல் பெரிய பல்பொருள் அங்காடி வரை அனைத்து கடைகளிலும் பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பிஸ்கட்டுகள் மற்றும் சிறு சிறு குடிசை தொழிலில் ஈடுபடும் நபர்கள் தயாரிக்கும் பிஸ்கட்களும் விற்பனை செய்யப்படுகிறது.
இதை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் நீங்கள் எளிதில் வீட்டிலிருந்து குடிசை தொழில் மூலம் பிஸ்கட்கள் தயாரிக்கலாம், நீங்கள் சரியான முறையில் செய்தால் உங்களிடத்தில் வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
அதுமட்டுமில்லாமல் நீங்கள் உங்களுக்கு என தனியாக ஒரு பெயர் ஏற்படுத்திக்கொண்டு வெளி சந்தையில் உங்களுடைய பிஸ்கட்களை விற்பனை செய்யலாம்.
நீங்கள் பேருந்து நிலையம், ரயில் நிலையம், டீ க்கடைகள், நெடுஞ்சாலை கடைகளில், கிராமங்களில், பள்ளி அருகில், போன்ற இடங்களில் அதிகமாக விற்பனை செய்ய வாய்ப்புகள் இருக்கிறது.
50 முதல் 80 கிலோ மீட்டருக்குள் இருக்கும் இதுபோன்ற கடைகளுக்கு நீங்கள் டெலிவரி செய்வதன் மூலம் அதிகமான லாபம் பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
பிஸ்கட் தயாரிக்கும் முறை
கோதுமை மாவு அல்லது மைதா மாவுடன், சர்க்கரை, பால், வனஸ்பதி, போன்ற மூலப்பொருட்கள் சேர்த்து பிசைந்து சாதாரண வெப்பநிலையில் இரண்டு மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.
பிறகு டவ் மெஷின் மூலம் பூரி மாவு பதத்திற்கு கொண்டுவந்து பிஸ்கெட் மோல்டிங் டிரேக்களில் வைத்து சரியான வெப்பநிலையில் சூடுபடுத்த வேண்டும்.
பதத்திற்கு வந்ததும் எடுத்து ஆறவிட்டு பாக்கெட்களில் பேக்கிங் செய்து விற்பனைக்கு தயார் செய்துவிடலாம்.
பிஸ்கட் தயாரிப்பு தரக்கட்டுப்பாடு செய்வது எப்படி
உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவுக் கலப்படத் தடுப்புத் துறை அலுவலகத்தில் நீங்கள் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் எதற்கு.
பிஸ்கட் தயாரிப்புக்கு தேவையான நிலம் கட்டிட அமைப்பு
இந்தத் தொழிலுக்கு குறைந்த பட்சம் 900 சதுர அடி இடம் தேவைப்படும். பிஸ்கெட் தயாரிக்க 500 சதுர அடி இடமும் மீதம் உள்ள 400 சதுர அடி இடத்தில் பேக்கிங் மற்றும் சில்லறை விற்பனை செய்வதற்கு நீங்கள் பயன்படுத்தலாம் இதற்கு ரூபாய் 2 லட்சம் வரை செலவாகும்.
இதற்கு தேவையான இயந்திரங்கள்
50 டன் உற்பத்தி என்ற இலக்கை நீங்கள் ஒரு ஆண்டுக்கு வைக்கலாம். 330 வேலை நாட்கள் தினமும் குறைந்தது 12 மணி முதல் 14 மணி நேரம் வரை வேலை செய்தால், இந்த இலக்கை நீங்கள் அடைய முடியும்.
இதற்கான இயந்திரங்கள் ஹைதராபாத், புதுடெல்லி, கோவை, ஓசூர், பெங்களூர், போன்ற இடங்களில் கிடைக்கிறது.
நீங்கள் சிறிய அளவில் ஆர்டர் செய்ய நினைத்தால் மாவு பிசைவதற்கு வேலை ஆட்களை நீங்கள் தனியாக வைத்துக்கொள்ளலாம் இதனால் முதலீடு செலவு ஆரம்பத்தில் குறைவாக இருக்கும்.
பிஸ்கட் தயாரிப்பு செலவு மட்டுமில்லாமல் ஃபர்னிச்சர், அளவை சரி பார்க்கும் இயந்திரம், பேக்கிங் செய்ய, ஸ்டோர் செய்து வைக்க, என்ற வகையில் 100,000/- ரூபாய் வரை செலவாகும்.
தினமும் 20 எச்பி மின்சாரமும், 600 லிட்டர் தண்ணீரும் உங்களுக்கு தேவைப்படும்.
இதற்கு தேவையான மூலப்பொருட்கள்
கோதுமை மாவு, மைதா மாவு, ஈஸ்ட், நெய் அல்லது வனஸ்பதி, சர்க்கரை, பால் அல்லது பால் பவுடர், உப்பு மற்றும் உணவு கலர் பவுடர் இவைதான் மூலப்பொருட்கள்.
எல்லாமே தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கக்கூடிய பொருள்தான் அதனால் உற்பத்தியில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது இந்த தொழிலை தொடங்கினாள்.
எங்கள் YouTube சேனலைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இதற்கு தேவைப்படும் வேலையாட்கள்
நீங்கள் வேலை ஆட்களை தேர்வு செய்யும் பொழுது கவனமுடன் இருக்க வேண்டும்.
முன் அனுபவம் உள்ள நபர் -1
உதவியாளர்கள் – 2
விற்பனையாளர் – 1
பிஸ்கட் தயாரிக்கும் முறை தொழில் தூங்குவதற்கு குறைந்தபட்சம் ரூபாய் 200,000/- வரை முதலீடு தேவைப்படும்.
How to making paper plate new business 2021
இந்த தொழில் சிறு தொழிலுக்கு கீழ் வருவதால் மத்திய அரசிடம் மானியம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது அல்லது கட்டாயம் மானியம் கிடைக்கும்.
நீங்கள் வண்ணமயமான கலரில் பிஸ்கட்கள் தயாரித்து விற்பனை செய்தால் உங்களுடைய விற்பனை மிக விரைவில் அதிகமாக நடைபெறும்.
அதுமட்டுமில்லாமல் சுவை மற்றும் மணம் சேர்ப்பதற்கு பழம் சார்ந்த வாசனை திரவியங்கள் சுவை கூட்டுப் பொருட்களை சேர்க்கலாம்.