How to make broth without tomatoes best tips 5
தக்காளிக்கு பதில் என்னென்ன பொருட்களை சமையலுக்குப் பயன்படுத்தலாம் தெரிந்து கொள்ளுங்கள்..!
இப்பொழுது தமிழ்நாட்டில் தக்காளியின் விலை என்பது புதிய உச்சத்தை தொட்டுள்ளது ஒரு கிலோ 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா,மாநிலங்களின் அதிகப்படியான மழை காரணமாக தக்காளியின் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதன் காரணமாக பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் தக்காளி இப்பொழுது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தற்காலிகமானது தான் என்றாலும் இப்பொழுது தொடர் மழையால் மக்கள் அவதிப்பட்டு வரும் இந்த சூழலில் இந்த விலை உயர்வு என்பது சிறிய மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் முடிவடையும் வரை தொடர்ந்து வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி அல்லது மேலடுக்கு சுழற்சி பகுதி அல்லது புயல் உருவாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
இதனால் டிசம்பர் மாதம் முடியும் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கும்.
தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகிப் போவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது, இதன் காரணமாக தக்காளியின் வரத்து டிசம்பர் முடியும் வரை குறைவாக இருக்கும்.
இதன் விலை என்பது வரும் ஜனவரியில் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
தென்னிந்திய முழுவதும் தற்போது தக்காளியின் விலை குறைந்த பட்சம் 100/- ரூபாயை கடந்து விட்டது, தக்காளி விலை ஏறினாலும் தக்காளியின் தனித்துவமான புளிப்பு சுவை வேறு சில பொருட்கள் கொடுக்க முடியும்.
தக்காளி விலை மீண்டும் குறையும் வரை மக்கள் இந்த பொருட்களை சமையலில் பயன்படுத்துவது அவர்களுக்கு நல்லது அது என்ன பொருட்கள் என்று இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
மாங்காய் பொடி
இந்த மாங்காய் பொடி தக்காளி போலவே இனிப்பும், புளிப்பும், சுவை கொண்டதாக இருக்கும் இதனுடைய விலையும் குறைவானது ஆகவே உங்கள் சமையலில் தக்காளிக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் மாங்காய் பொடி சேர்த்து சமைக்கலாம்.
தயிர்
தக்காளிக்கு பதிலாக நீங்கள் சாதாரண தயிர் சேர்க்கலாம் தயிரின் சுவை மசாலா பொருட்களுடன் நன்றாக கலந்து உங்களுக்கு புதிய சுவையை தரும்.
சுவை சரியானதாக இருக்க 2 முதல் 3 நாட்கள் பழமையான தயிர் சேர்க்க வேண்டும், இதனை நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
இது சரியான புளிப்பு சுவையை வழங்கும், தயிர்ரை பயன்படுத்தி மோர் குழம்பு வைத்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும்.
எலுமிச்சை பழம்
எலுமிச்சை பழத்தில் புளிப்பு சுவை அதிகமாக நிறைந்துள்ளது ஆகவே உணவில் தக்காளிக்கு பதிலாக நீங்கள் புளிப்பு சுவை அதிகரிக்க வேண்டும் என நினைத்தால் சிறிதளவு எலுமிச்சை சாறு உபயோகிக்கலாம்.
புளி
தக்காளிக்கு பதிலாக நீங்கள் எப்பொழுதும் புளி பயன்படுத்தலாம் புளிக் குழம்பை கெட்டியாகவும் வைக்க உதவுகிறது, எனவே தக்காளி விலை குறையும் வரை இதனை பயன்படுத்தலாம்.
தக்காளி பயன்படுத்தினால் கிடைக்கக்கூடிய குழம்பின் சுவை புளி பயன்படுத்தும்போது கிடைக்கும்.
செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நெல்லிக்காய்
குளிர்காலம் வந்து விட்டால் தக்காளிக்கு பதிலாக நீங்கள் நெல்லிக்காயையும் பயன்படுத்தி சமையல் செய்யலாம் ஆனால் அது சற்று புளிப்பு கூடுதலாகும் இருக்கும்.
10 amazing benefits of cinnamon water in tamil
எனவே குழம்பில் நெல்லிக்காய் சேர்க்கும் போது நீங்கள் நெல்லிக்காயின் அளவை குறித்து கவனமாக இருக்க வேண்டும்.