How to make hair growth oil in home 2021
இந்த நவீன காலத்தில் ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி இருவருக்கும் இருக்கின்ற பொதுவான ஒரு பிரச்சனை என்றால் அது முடி உதிர்வு பிரச்சினை தான்.
தலை முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் மன அழுத்தம், சுற்றுச் சூழல் பாதிப்பு, முறையற்ற உணவு, ஒழுங்கற்ற உடல் பராமரிப்பு, வெப்பம், என பல காரணங்கள் சொல்லிக் கொண்டு போகலாம்.
இருப்பினும் தலைமுடி ஒழுங்காக பராமரித்து வந்தாலே முடி உதிரும் பிரச்சனை குறைந்து முடி அடர்த்தியாக வளர ஆரம்பித்துவிடும்.
முடி உதிர்வு பிரச்சினை ஏற்பட்டால் பொதுவாக நாம் என்ன செய்வோம் கடையில் விற்கப்படும் கலப்படமான எண்ணெய் வாங்கி பயன்படுத்துவோம் இதனால் பிரச்சினைகள் இன்னும் அதிகமாகும்.
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் வீட்டில் இருந்து தலை முடி பிரச்சனை சரிசெய்யக்கூடிய எண்ணெய் தயாரிக்க முடியும் அதுவும் இயற்கையான முறையில்.
எண்ணெய் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்கள்
மருதாணி ஒரு – கை அளவு
தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் அரை லிட்டர்
மஞ்சள் பொன்னாங்கண்ணி இரண்டு கையளவு
கரிசலாங்கண்ணி ஒரு கையளவு
சிவப்பு செம்பருத்திப்பூ ஒரு கையளவு
அதிமதுரம் – 50 கிராம்
நெல்லிக்காய் – 3
எண்ணெய் தயாரிப்பது எப்படி
முடி நீளமாக வளர எண்ணெய் தயாரிக்கும் முறை நெல்லிக்காயில் இருக்கும் விதையை நீக்கி விட்டு அவற்றை அம்மியில் நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
அதிமதுரம் பல மருத்துவ குணங்களை கொண்டது இருப்பினும் முடி உதிர்வு பிரச்சினைக்கு இது ஒரு சிறந்த மருந்து பொருளாக இருக்கிறது.
இந்த அதிமதுரம் வேர், நாட்டுமருந்துக் கடைகளில், கிடைக்கும் எனவே அவற்றை வாங்கி நீங்கள் தேவைக்கேற்ப வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு கரிசலாங்கண்ணி, மஞ்சள் பொன்னாங்கண்ணி,சிவப்பு செம்பருத்திப் பூ மற்றும் மருதாணி ஆகியவற்றை தனித்தனியாக நன்றாக அரைத்து அதிகம் தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட் போல தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் அடி கனமான வாணலியை வைத்து அதில் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை மிதமான சூட்டில் காய்ச்சவும்.
அதன் பிறகு அரைத்து வைத்திருக்கும் மூலிகை பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும் முதலில் அரைத்து வைத்துள்ள கரிசலாங்கண்ணி இலையை சேர்க்கிறோம் என்றால் அதாவது பேஸ்ட் போல் போட்டு அந்த கலவையை எண்ணெய் முழுவதும் பொரித்து ஆறிய பின்பு மற்ற மூலிகை பொருட்களை தனித்தனியாக சேர்க்கவேண்டும் இதுபோல்.
எண்ணெயில் அனைத்து மூலிகைப் பொருட்களையும் சேர்த்த பிறகு எண்ணெயில் அனைத்து மூலிகை பொருட்களும் அடங்கி இருக்க வேண்டும் அப்பொழுது அடுப்பிலிருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும் நன்கு.
இந்த இயற்கையான எண்ணெய் ஆறியதும் அவற்றை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும் பிறகு குறைந்தது 1 மணி நேரம் வரை சூரிய ஒளியில் வைத்திருக்கவேண்டும் பிறகு இதனை நீங்கள் தினமும் உங்களுடைய தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.
செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக கடுகு எண்ணெய் கூட பயன்படுத்தலாம்.
How to make biscuit in home new idea 2021
இந்த இயற்கையான எண்ணெய் கண்டிப்பாக உங்களுடைய தலைமுடி உதிரும் பிரச்சனை மற்றும் நரைமுடி பிரச்சனையை சரி செய்து விடும்.