How to Make Hibiscus Hair oil Best 3 tips

ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு செம்பருத்தி மூலிகை எண்ணெய் குழந்தைகளுக்கும் ஆண்களுக்கும் பயன்படுத்தலாம் (How to Make Hibiscus Hair oil Best 3 tips)

இன்றைய காலகட்டங்களில் இருக்கும் இளைஞர்களுக்கு முக்கியமான ஒரு பிரச்சினை என்றால் அது முடி பிரச்சினை

குழந்தைகள், வளரும் பருவத்தினர்,  இளம் வயதினர், நடுத்தர வயதினர், என அனைவருமே முடி வளர்ச்சியில் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் ஒருவருக்கு கூந்தல் பராமரிப்பு என்று செயற்கையான பொருட்களை பயன்படுத்துவது இதற்கு முதன்மையான காரணமாக அமைகிறது

குழந்தைகள் வளரும் போது சரியான ஊட்டச்சத்து மிகுந்த  ஒரு எண்ணெய்யை பயன்படுத்துவது அவசியம் இதனால் குழந்தைகளின் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும் முடி அடர்த்தியாக பொலிவுடன் நரைமுடி இல்லாமல் இருக்கும் மேலும் கூந்தலுக்கு வேண்டிய ஊட்டச் சத்தையும் கொடுக்கும் இது செம்பருத்தி எண்ணெய்.

செம்பருத்தி எண்ணெய் எளிதாக தயாரிக்கலாம் வீட்டில்

How to Make Hibiscus Hair oil Best 3 tips

செம்பருத்தி பூக்கள் 50

ஆலிவ் எண்ணெய் கால் லிட்டர்

தேங்காய் எண்ணெய் கால் லிட்டர்

வெந்தயம் 6 டீஸ்பூன் அளவு

இரும்பு வாணலியில் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், சேர்த்து நன்றாக கலக்கவும் பிறகு சூடேற்றவும்   பிறகு இந்த எண்ணெயில் மிதமாக கொதிக்கட்டும் செம்பருத்தி பூவின் மகரந்தத்தை நீக்கிவிட்டு இதழ்களை தனியாக பிரித்து சிறு துண்டாக நறுக்கவும் அல்லது இதழ்களை மிக்ஸியில் அரைத்து எண்ணெயில் சேர்க்கலாம்.

இதனுடன் வெந்தயம் சேர்த்து அடுப்பை அணைத்துவிடவும் எண்ணெய் குளிரவைத்து கண்ணாடி பாட்டிலில் பதப்படுத்தும் இதுபோல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணெய்  வீட்டில் செய்யலாம் தொடர்ந்து இந்த எண்ணெயை மட்டும் பயன்படுத்தவேண்டும் வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை எளிதாக பயன்படுத்தலாம்

பயன்படுத்தும் முறை

How to Make Hibiscus Hair oil Best 3 tips

இந்த எண்ணெயை தினமும் உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் தலைக்கு மசாஜ் செய்து வந்தால் போதும் கூந்தலில் ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சி மேம்படும்

குழந்தைக்கு எண்ணெய் குளியலின் போது இந்த எண்ணெயை பயன்படுத்தலாம் இது குழந்தையின் உடல் சூட்டை குறைக்கும் இந்த எண்ணை பயன்படுத்தும்பொழுது வேறு ஒரு எண்ணெய் பயன்படுத்தக் கூடாது இதனால் வேறு ஒரு பிரச்சினைகள் புதிதாக தோன்ற ஆரம்பிக்கும்.

தினசரி தலைக்கு மசாஜ் இந்த எண்ணையை பயன்படுத்தி செய்தால் ஆயில் பாத் எடுப்பதற்கு என எல்லாவற்றுக்கும் இந்த எண்ணெய் பயன்படுத்தலாம் சிறந்த பலன்கள் விரைவில் கிடைக்கும்

செம்பருத்தி எண்ணெயின் நன்மை குறிப்புகள்

செம்பருத்தி எண்ணெய் முடிக்கு பலத்தை கொடுப்பதால் முடி இழப்பு ஏற்படுவது தவிர்க்கிறது, முடியின் வேர்களை எளிமையாக்குகிறது, இளநரை வராமல் தடுக்கிறது, நரை முடி பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கிறது, முடி அடர்த்தி கூடுகிறது, முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது, பொடுகு பிரச்சனை வராமல் பாதுகாக்கிறது.

வெந்தயம் பயன்படுத்துவதால் முடியை உஷ்ணத்தில் இருந்து தவிர்த்து முடிக்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது இதனால் முடி பளபளப்புடன் இருக்கும் வெந்தயத்தை சூடான எண்ணெயில்  பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு உடல் சூடு சேராமல் இருக்கும்

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

இந்த செம்பருத்தி எண்ணெய் பயன்படுத்துவதால் முடி வறட்சியை தவிர்க்க முடியும், முடி நுனி பிளவு பட செய்யாமல் இருக்க முடிகிறது, உடைக்கின்ற கூந்தலை தடுக்கிறது, இப்படி முடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் செம்பருத்தி மூலிகை எண்ணெய் சரி செய்கிறது இதன்மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெறலாம் நீங்கள்.

TN Grama Bank recruitment 2021 Quick apply

 

Leave a Comment