How to make natural bathing soap in tamil 2021
இயற்கை குளியல் சோப் தயாரிப்பது எப்படி இதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்முடைய இணையதளத்தில் இயற்கையான முறையில் வீட்டில் இருந்து குளியல் சோப் தயாரிப்பது எப்படி என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.
வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் அல்லது வீட்டை பராமரிக்கும் பெண்கள் வீட்டிலிருந்து கிடைக்ககூடிய சிறிது ஓய்வு நேரங்களில் செய்யக்கூடிய ஒரு சிறந்த தொழில் தான் இயற்கை குளியல் சோப் தயாரிக்கும் முறை.
இந்த குடிசைத் தொழில் தொடங்குவதற்கு இடவசதியோ, அதிக முதலீடு மற்றும் வேலை ஆட்கள் தேவை இல்லை.
ஒரு நபர் இருந்தால் போதும் இந்த தொழிலை எளிமையாக தொடங்கிவிடலாம் தற்போது இந்த தொழிலுக்கு அதிக சந்தை வாய்ப்புகள் உருவாகி விட்டது.
அதிக லாபம் பெற முடியும் குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள் கூட இந்த தொழிலை பகுதி நேர வேலையாக செய்து வருமானத்தை பெற முடியும்.
இன்றைய காலகட்டத்தில் இருக்கும் மக்கள் இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய பொருட்களுக்கு அதிக வரவேற்பு கொடுக்கிறார்கள்.
சோப் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்
காய்ந்த ரோஜா – ஒரு கப்
தேங்காய் எண்ணெய் – 200 மில்லி
வாசனை திரவியம் உங்கள் – விருப்பத்திற்கு ஏற்றது
வைட்டமின் ஈ மாத்திரை – 2
முல்தானிமட்டி – 2 டீஸ்பூன்
கற்றாழை ஜெல் – ஒரு கப்
காஸ்டிக்சோடா – ஒரு கப்
பிளண்டர்
தயாரிக்கும் செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி நன்றாக சூடு படுத்திக் கொள்ளவும், அதன் பின் அவற்றில் நீங்கள் வைத்திருக்கும் காய்ந்த ரோஜா பூவை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.
பின்பு அடுப்பிலிருந்து இறக்கி கொதிக்க வைத்த ரோஜாப்பூவை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி ஆற வைக்கவேண்டும்,கொதிக்க வைத்த நீர் நன்றாக ஆறியதும் அவற்றில் காஸ்டிக் சோடாவை சேர்க்க வேண்டும்.
காஸ்டிக் சோடா ஒரு காரத்தன்மை உடையது நெடிய ஏறும் எனவே அவற்றை சேர்க்கும் பொழுது நீங்கள் உங்களுடைய முகத்தில் முக கவசம் அல்லது துணி கொண்டு முகத்தை நன்றாக மூடிக் கொள்ள வேண்டும்.
பின்பு காஸ்டிக் சோடாவில் வெப்பத்தன்மை ஆறியதும் அதில் கற்றாழை ஜெல்லை சேர்க்கவேண்டும், (கற்றாழையில் இருக்கும் தோல் பகுதிகளை நீக்கிவிட்டு அவற்றை மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்)
அதன் பின்பு முல்தானி மெட்டியை கலவையில் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
200 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்து ஒருபிளண்டரை பயன்படுத்தி நன்றாக கலந்து விடவேண்டும் அந்த கலவையில்.
அதன்பின்பு தொடர்ச்சியாக உங்களுக்கு பிடித்த வாசனை திரவியத்தை கலந்து விடவேண்டும் தேவையான அளவிற்கு.
இறுதியாக விட்டமின் ஈ மாத்திரையைக் கலவையில் கலந்து திரும்பவும் பிளண்டரால் நன்கு கலந்து விட்டால் கலவையை தயார் ஆகிவிடும்.
இப்பொழுது டீ கப்பில் இந்த கலவையை ஊற்றி கலவை நன்றாக இறுகும் வரை காத்திருக்க வேண்டும்.
அதன்பின்பு கலவை நன்றாக ஆறியதும் டீ கப்பில் இருந்து சோப்பை தனியாக எடுக்கலாம், இப்பொழுது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட குளியல் சோப் ரெடியாகிவிடும்.
சந்தை வாய்ப்புகள்
இப்பொழுது சந்தையில் விற்கப்படும் குளியல் சோப்புகள் அனைத்திலும் தேவைக்கு அதிகமாக கெமிக்கல்கள் இருப்பதால் தோல் பிரச்சினைகள் அதிகமாக மக்களுக்கு ஏற்படுகிறது.
எனவே அதிக அளவு கெமிக்கல் கலக்காத இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட குளியல் சோப்பை நாம் வீட்டிலிருந்தபடியே தயாரித்து தரமானதாக சந்தையில் விற்பனை செய்தால் அதிக வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
அது மட்டுமில்லாமல் உங்கள் வீட்டு பகுதியில் சிறிய பெட்டிக் கடைகளிலும், சந்தைகளிலும், அதிகளவு விற்பனை செய்து லாபத்தை நன்றாகப் பெறலாம்.
இயற்கை சோப்பு தயாரிக்கும் முறை
சோப் தயாரித்து உடனே பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யக்கூடாது 20 நாட்கள் கழித்து தான் அதனை பயன்படுத்த வேண்டும்.
இரவில் நன்றாக தூக்கம் வர என்ன செயல் செய்ய வேண்டும்
ஏனென்றால் இந்த குளியல் சோப்பு தயாரிக்க பயன்படுத்தியுள்ள காஸ்டிக் சோடாவில் இருக்கும் கெமிக்கல் தன்மை முழுவதும் வெளியேறுவதற்கு குறைந்தது 20 நாட்கள் வரை தேவைப்படும்.
8 Simple Tips to Grow a Mustache Beard Faster
கலவைகளை கைகளில் கலந்து விடக்கூடாது கண்டிப்பாக நீங்கள் கரண்டியால் அல்லது பிளண்டரால் மட்டுமே கலந்து விட வேண்டும் இதனை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.