How to Make paper cups full details 2021

How to Make paper cups full details 2021

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து அதற்கு மாற்றாக பல பொருட்கள் தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்த வண்ணம் உள்ளன.

இந்த பொருட்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு வரவேற்பு ஏற்பட்டுள்ளது, அந்த வகையில் பேப்பர் கப் தயாரிப்பு பற்றி இன்றைக்கு நமது இணையதளத்தில் பார்க்க போகிறோம்.

தமிழக அரசு கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது, இதனால் இப்பொழுது இவற்றின் தேவை அதிகரித்து உள்ளது, எனவே தயக்கமின்றி நீங்கள் இந்த தொழிலை எளிமையாக தொடங்கலாம்.

அதுவும் நீங்கள் வீட்டிலிருந்தே இந்த தொழிலை எளிமையாக செய்யலாம்

How to Make paper cups full details 2021

தேவைப்படும் இயந்திரங்கள்

பேக்கிங் செய்யும் இயந்திரம் (Packing machines)

எண்ணும் இயந்திரம் (counting machine)

காகித கப் உருவாக்கம் இயந்திரம் (Paper cup forming machine)

அச்சிடும் இயந்திரம் (Printing machine)

வெட்டும் இயந்திரம்   (Die cutting machine)

தயாரிக்கும் முறை

நீங்கள் அச்சிடப்பட்ட PE பூசிய காகித தாள்களை வெட்டும் இயந்திரத்திற்குள் செலுத்த வேண்டும், அப்போது அது கப்  வடிவில் அதனை வெட்டி வெளியே அனுப்பும்.

உங்களிடம் அச்சிடும் இயந்திரம் சொந்தமாக இருந்தால் நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வாடிக்கையாளர்கள் விரும்பிய வடிவத்தில் அச்சிட்டுக் கொள்ள முடியும்.

பின்னர் காகித கப் உருவாக்கம் இயந்திரத்திற்குள் செலுத்தவேண்டும் இப்போது பேப்பர் கப் தயாராகி விடும்.

பேப்பர் கப்களை எண்ணும் இயந்திரத்தின் மூலம் எண்ணி அதனை அப்படியே பேக்கிங் செய்ய இயந்திரத்திற்குள் செலுத்த வேண்டும்.

இப்பொழுது பேப்பர் கப் விற்பனை செய்வதற்கு தயாராக உள்ளது.

How to Make paper cups full details 2021

முதலீடு

இந்தத் தொழிலைத் தொடங்கும் ஒரு நபர் கையிலிருந்து 5 சதவிகிதத் தொகையை முதலீடு செய்தால் போதும்.

மீதி 95 சதவிகித தொகையை வங்கிக் கடன் மூலம் பெற்றுக் கொள்ளமுடியும், குறைந்தபட்சம் 7 லட்சம் ரூபாய் முதலீடாகக் கொண்டு இத்தொழிலைத் நீங்கள் தொடங்கலாம்.

மூலப்பொருட்கள்

இதன் முக்கிய மூலப் பொருட்கள் பேப்பர் தமிழ்நாட்டிலே எளிமையாக கிடைக்கிறது.

இந்த பேப்பர் ரோலின் தரத்தைப் பொறுத்துத்தான் பேப்பர் கப்பின் தரமும் இருக்கும், (ஜிஎஸ்எம்) அளவு களைப் பொறுத்தே இதன் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

உற்பத்தித் திறன்

ஆண்டுக்கு குறைந்தபட்சம் நீங்கள் 300 நாட்கள் வேலை செய்தால் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை பார்த்தால் 75 லட்சம் கப்களைத் தயாரிக்கலாம்.

இதற்கான மூலப்பொருட்கள் ஒரு டன் பேப்பருக்கு 75,000/-ரூபாய் செலவாகும்.

சந்தை வாய்ப்புகள்

இதற்கான சந்தை வாய்ப்பு இப்பொழுது அதிகமாக உள்ளது டீக்கடை இதற்கு நல்ல சந்தை வாய்ப்பு உள்ள இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் உட்பட பெரும் பாலான அலுவலகங்களும் பேப்பர் கப்களுக்கு மாறிவிட்டதால் இதற்கான சந்தை வாய்ப்பு இப்பொழுது அதிக அளவில் பிரகாசமாக உள்ளது.

எனவே நீங்கள் புதிதாக தொழில் தொடங்க நினைத்தால் சரியான தேர்வாக இந்த தொழில் இருக்கும்.

இந்த பேப்பர் கப் தயாரிப்பு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்த தொழிலில் நல்ல வளர்ந்து கொண்டிருக்கிறது.

கடன் விவரங்கள் மற்றும் மானியம்

இந்த பேப்பர் கப் தயாரிப்பது சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டம் மூலம் உங்களுக்கு வங்கி கடன் கிடைக்கலாம்.

முதலீட்டுத் தொகையில் நகரம் எனில் 25 சதவீதமும், கிராமம் எனில் 35 சதவீதமும், மானியம் கிடைக்கும்.

உதாரணத்திற்கு நீங்கள் 10 லட்ச ரூபாய் முதலீடு என்றால் 2.5 லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கும்.

இந்த வகை அரிசி உங்களின் வாழ்நாளை அதிகரிக்கும் ஏன் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த மானியத் தொகையை வங்கிக் கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். 4 வருடங்களுக்கு பிறகு இத்தொகையை வங்கி கடனில் கழித்துக் கொள்ள முடியும்.

small business ideas and more profit 2021

வங்கியில் வாங்கியிருக்கும் கடனில் மானியத் தொகை போக மீதமுள்ள தொகைக்கு வட்டி கட்டினால் போதுமானது.

Leave a Comment