How to make washing powder Best tips 2021
சிறுதொழில் டிடர்ஜென்ட் பவுடர் தயாரிப்பது எப்படி வீட்டிலிருந்தே செய்யலாம்.
வீட்டில் இருந்தபடியே தினமும் கணிசமான வருமானம் பெற வேண்டுமென வேலைக்கு செல்லக்கூடிய நபர்கள் அனைவரும் நினைக்கக் கூடிய ஒரு விஷயம் சிறு தொழில்.
அப்படி என்றால் டிடர்ஜென்ட் பவுடர் தயாரித்து எளிய முறையில் வீட்டில் இருந்த விற்பனை செய்யலாம் வீட்டில் இருந்தபடியே குறைந்த செலவில் அதிக லாபம் பெற வேண்டும் என்றால் இந்த தொழிலை கண்டிப்பாக தேர்ந்தெடுக்கலாம்.
ஏனென்றால் தயாரிப்பு செலவு மிகவும் குறைந்த தொழிலாகும் இவற்றைச் செய்வதற்கு வேலையாட்கள் ஒன்றும் தேவையில்லை ஒரு நபர் இருந்தால் போதும்.
டிடர்ஜென்ட் பவுடர், பாத்திரம் துலக்கும் பவுடர் மற்றும் துணி துவைக்கும் லிக்யூட் ஆகியவையும் தயாரித்து விற்பனை செய்தால் அதிகமான லாபத்தை வீட்டில் இருந்து பெற முடியும்.
இதற்கு தேவையான பொருட்கள் பின்வருமாறு
குளோபல் சோடா – 1 கிலோ
வாஷிங் சோடா – 3 கிலோ
பேக்கிங் சோடா – 2 கிலோ
வாசனை திரவம் – உங்கள் தேவைக்கு ஏற்ப
Trisodium Phosphate – ½ கிலோ
Acid Slurry – 1 லிட்டர்
Free Flow salt – 2 ½ கிலோ
டினோபால் – 100 கிராம்
Colour Granules – உங்கள் தேவைக்கு ஏற்ப
டிடர்ஜென்ட் சோப் தயாரிக்கும் செய்யும் முறை
இங்கு குளோபல் சோடாவானது ஒரு கிருமிநாசினி பொருளாக செயல்படுகிறது, இவற்றை பெரிய பிளாஸ்டிக் டப்பாவில் கட்டி நீக்கிவிட்டு அதாவது சல்லடையில் வடிகட்டி பிறகு நிரப்ப வேண்டும்.
பின்பு அவற்றுடன் வாஷிங் சோடாவையும் சேர்க்கவேண்டும் வாஷிங் சோடா காரத்தன்மை உடையது, எனவே உப்பு தண்ணீராக இருந்தாலும் நன்றாக அழுக்குபோகும் என்பதற்காக வாஷிங் சோடாவை இங்கு பயன்படுத்துகிறோம்.
பிறகு அதே போல் பேக்கிங் சோடாவையும் சிறு சிறு கட்டிகளாக சல்லடையில் சலித்து அந்த டப்பாவில் நன்றாக சேர்க்க வேண்டும். பேக்கிங் சோடா எந்த காரணத்திற்காக பயன்படுத்துகிறோம் என்றால்.
துணி நீண்ட காலம் வரை நன்றாக உழைப்பதற்கு பேக்கிங் சோடாவை இந்த செய்முறையில் பயன்படுத்துகிறோம்.
அதற்குப் பின்பு TSP (Trisodium Phosphate) சேர்க்கவேண்டும் எதற்காக பயன்படுத்துகிறோம், என்றால் அனைத்து கரைகளையும் நன்றாக நீக்குவதற்காக TSP (Trisodium Phosphate) கலவையே இவற்றில் பயன்படுத்தியாக வேண்டும்.
அதனைத் தொடர்ந்து Free Flow சோடாவையும் இந்தக் கலவையில் நன்றாக சேர்க்க வேண்டும்.
அதன் பிறகு இந்த கலவைகளை நன்றாக கலக்குவதற்கு உங்கள் கைகளில் பாதுகாப்பு கிளவுஸ் அணிந்து கொள்ள வேண்டும் கட்டாயம், பின்பு அவற்றை உங்கள் கைகளால் நன்றாக கலந்துவிட வேண்டும்.
இதன் பிறகு ஆசிட் சிலரி சேர்க்க வேண்டும் ஆசிட் சிலரி என்ன காரணத்திற்காக பயன் படுத்துகிறோம் என்றால் துணியை எப்போதும் வெளுப்பாக மற்றும் பளிச்சென்று வைப்பதற்கு இந்த ஆசிட் சிலரி பயன்படுத்துகிறோம்.
இந்த கலவையில் சேர்க்கும் பொழுது அதிக காரத்தன்மை நெடி வெளிப்படும் எனவே அப்போது உங்கள் முகத்தில் முகக்கவசம் கட்டிக் கொள்வது மிக நல்லதாக அமையும்.
இந்த கலவைகள் அனைத்தையும் ஒன்றாக நன்றாக கலந்த பிறகு ஒரு குச்சியால் இந்த கலவையை மேலும் நன்றாக சிறிதுநேரம் கலக்கவேண்டும்.
கடைசியாக இந்தக் கலவையில் உங்களுக்கு பிடித்த வாசனைப் பொருளை நன்றாக கலந்து திரும்பவும் குச்சியால் சிறிது நேரம் கலந்து விட வேண்டும்.
பின்பு உங்கள் விருப்பத்திற்கு Colour Granules 50 கிராம் என்ற அளவில் சேர்த்தால் உயர்ந்தwashing powder தயார் இவற்றை பாக்கெட்டில் அடைத்து உங்கள் தேவைக்கேற்ப விற்பனை செய்யலாம் உங்கள் ஏரியாவில்.
அனைத்து கெமிக்கல் கடைகளிலும் இதற்கான மூலப் பொருட்கள் எளிதாக கிடைக்கும், விலை என்பது நீங்கள் வாங்க கூடிய அளவிற்கு குறைந்த அளவில் தான் இருக்கும்.
Homemade chocolate business new ideas 2021
முக்கிய குறிப்பு கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்
கலவைகளை கலக்கும்போது கண்டிப்பாக கைகளில் கிளவுஸ் அணிந்து கொள்ள வேண்டும், அது மட்டுமில்லாமல் முகத்தை மூடும் அளவிற்கு துணிகள் அல்லது முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும்.
Click here to view our YouTube channel
மேலும் ஆசிட் சிலரி சேர்த்த பிறகு கலவைகளை கைகளால் கிளறக்கக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அதற்கு பதில் குச்சிகளால் கிளறவேண்டும்.