How to make washing soap best method 2022
துணி சோப்பு தயாரிக்கும் முறை..!
இன்றைய நம்மளுடைய அவசர உலகத்தில் நகரங்களில் வசிக்கின்ற பெரும்பாலான மக்கள் தங்களது துணிகளை துவைப்பதற்கு வாஷிங் மெஷின் பயன்படுத்துகிறார்கள்.
மெஷினில் துணி துவைக்க வேண்டும் என்றால் அதற்கு வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் கட்டாயம் பயன்படுத்த வேண்டும், வாஷிங்மெஷினில் துவைத்தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ள அழுக்குகள் முழுவதும் போவதில்லை.
இதனால் மீண்டும் துவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது, கிராமங்களை பொறுத்தவரை மக்கள் துவைப்பதற்கு சோப்களையே அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.
என்ன தொழில் செய்யலாம் என்ற சிந்தனையில் இருக்கும் நபர்கள் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்று காத்துக் கொண்டு இருக்கும் நபர்களுக்கு.
இந்த சோப்பு தயாரிக்கும் தொழிலில் அதிக லாபத்தை கொடுக்கும், சுய தொழிலுக்கு இது ஒரு சிறந்த தொழிலாக விளங்குகிறது.
அதுவும் வீட்டில் சலவை சோப் தயாரிக்கும் முறை என்பதால் இவற்றின் மூலம் அதிக லாபம் பெற முடியும்.
தேவையான மூலப்பொருட்கள்
வாஷிங் சோடா -14 கிலோ
சிலரி ஆயில் – 20 கிலோ
டினோபால்பவுடர் -50 கிராம்
தண்ணீர் – 2 லிட்டர்
களிமன் பவுடர் – 5 கிலோ
கால்சைட் – 50 கிலோ
சிலிகேட் – 5 கிலோ
எஸ்டிபிபி – 5 கிலோ
வாசனை திரவியம் சென்ட் – 200 மி.லி
நீலநிற பவுடர் – 50 கிராம்
வாஷிங் சோப்பு தயாரிக்கும் செய்முறை
How to make washing soap சோப்பு தயாரித்தல் முறையில் முதலில் இயந்திரம், கலவை பிளாடர், கட்டிங், ஆகிய 3 பகுதிகளை கொண்டது.
கலவை இயந்திரம் ஓட தொடங்கியதும் அதில் வாஷிங் சோடா -14 கிலோ,சிலரி ஆயில் – 20 கிலோ,டினோபால்பவுடர் -50 கிராம்,தண்ணீர் – 2 லிட்டர் ஆகியவற்றை கொட்டவேண்டும்.
சுமார் 10 நிமிடத்திற்கு பின் களிமன் பவுடர் – 5 கிலோ,கால்சைட் – 50 கிலோ,சிலிகேட் – 5 கிலோ ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக 7 நிமிட இடைவெளிகளில் ஓட்டவேண்டும்.
எஸ்டிபிபி – 5 கிலோ,வாசனை திரவியம் சென்ட் – 200 மி.லி,நீலநிற பவுடர் – 50 கிராம், ஆகியவற்றை கொட்டி 30 நிமிடங்கள் கழித்து இயந்திரத்தை நிறுத்த வேண்டும்.
இப்போது கலவை இயந்திரத்தில் நீல நிறத்தில் பேஸ்ட் உருவாகியிருக்கும், அதை பிளாடரில் செலுத்தினால் அச்சு வழியாக நீளமான சோப் வெளிவரும்.
அது தேவையான அளவு கட் செய்யப்பட்டு வெளியேறும் இவற்றை டிரேயில் அடுக்கி லேபிள் மூலம் கவர் செய்தால் சோப் விற்பனைக்கு தயார் மணிக்கு குறைந்தபட்சம் 150 கிலோ வீதம் உற்பத்தி செய்யலாம்.
மூலப் பொருட்கள் கிடைக்கும் இடம்
வாஷிங் சோடா -கோவை
சிலரி ஆயில் – புதுவை
டினோபால்பவுடர் -மும்பை
களிமன் பவுடர் – கேரளா
கால்சைட் – சேலம்
சிலிகேட் – கோவை
எஸ்டிபிபி,வாசனை திரவியம் சென்ட்,நீலநிற பவுடர் கோவை உள்ளிட்ட இடங்களில் கிடைக்கும் நீங்கள் மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கினால் அதற்கேற்றார்போல் விலையை குறைத்துக் கொள்ளலாம்.
துணி சோப்பு தயாரிக்கும் முறை சந்தை வாய்ப்பு
How to make washing soap சோப்பு தயாரித்தல் முறையில் இந்த சோப்பை சந்தைகளில் விற்பனை செய்யலாம் சிறு சிறு பெட்டி கடைகள், மிகப்பெரிய பலசரக்கு கடை.