How to making paper plate new business 2021
லாபம் தரும் பேப்பர் தட்டு தயாரிக்கும் சுய தொழில் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நமது இணையதள பதிவில் வீட்டில் சுயமாக தொழில் செய்து அதிக அளவில் வருமானம் பெறக்கூடிய பேப்பர் தட்டு தயாரிக்கும் தொழிலை பற்றி பார்க்க போகிறோம்.
நீங்கள் சுற்றுச்சூழலுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படுத்தாத வகையில் சுய தொழில் செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதற்கு இந்த தொழிலை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த சிறந்த எண்ணத்திற்கு பேப்பர் தட்டு தயார் செய்து விற்பனை செய்யலாம் இவற்றின் மூலம் நீங்கள் அதிகமான லாபத்தையும் பெறலாம் அதுமட்டுமில்லாமல் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம்.
தேவையான கட்டிட அமைப்பு
நீங்கள் பேப்பர் தட்டு தயாரிப்பது குறித்து சிறந்த முறையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும், அதன்பிறகு இயந்திரங்கள் நிறுவ குறைந்தது 10 அடி நீள அகலத்திற்கு ஒரு அறை தேவைப்படும். நீங்கள் தயார் செய்த பேப்பர் தட்டுகளை பத்திரமாக வைக்க மற்றொரு அறை உங்களுக்கு தேவைப்படும்.
1.5 ஹெச்பி மின் இணைப்பு இந்த இயந்திரத்திற்கு தேவை இந்த மின் இணைப்பிற்கான முதலீடு குறைந்த பட்சம் 5,000/- ரூபாய் தேவைப்படும்.
பேப்பர் பிளேட் இயந்திரத்தின் விலை (1.5) லட்சம் 5,6,7,8,9,10,11,12 அதனுடைய (Inch) அளவுகளில் வட்டவடிவில் வெட்ட பிளேடுகள் மற்றும் அந்த அளவுகளில் பிளேட் செய்வதற்கான டை 7 (ரூ.60,000/-) என மொத்தம் முதலீடு இதர செலவுடன் சேர்த்து 3 லட்சம் வரை தேவைப்படும்.
உற்பத்தி செய்வதற்கு தேவையான பொருட்கள்
பாலிகோட் ஒயிட் பேப்பர் திக் ரகம் டன் ரூபாய் 80,000/-
நைஸ் ரகம் டன் ரூபாய் 50,000/-
சில்வர் திக் டன் ரூபாய் 40,000/-
சில்வர் நைஸ் டன் ரூபாய் 35,000/-
புரூட்டி பேப்பர் திக் டன் ரூபாய் 60,000/-
நைஸ் ரகம் டன் ரூபாய் 40,000/-
உற்பத்தி செய்ய தேவையான பொருட்கள் கிடைக்கும் இடம்
பேப்பர் பிளேட் மெஷின் சென்னை, கோவை, ஓசூர், உள்ளிட்ட தொழில் நகரங்களில் கிடைக்கிறது, பேப்பர்களில் ஒயிட் சில்வர் திக் ஆகியவை சிவகாசி.
சில்வர் நைஸ் டெல்லி, புரூட்டி பேப்பர் திக், நைஸ், ஆகியவை கேரளாவிலும் மலிவாக கிடைக்கிறது, இதனை நீங்கள் இணையதளம் மூலம் வாங்கிக் கொள்ள முடியும்.
பேப்பர் தட்டு இயந்திரம்
பேப்பர் தட்டு தயாரிப்பு முறை பொருத்தவரை ஒரு நாள் வாடகை, மின் கட்டணம் மற்றும் உற்பத்தி பொருட்கள் 12000/- தயாரிக்க ஆகும் செலவு ரூ 8,000/- ஆகும்.
மாதத்தில் 25 நாட்களில் 2.5 லட்சம் பேப்பர் தட்டு உற்பத்திக்கு ரூபாய் 3/- லட்சம் தேவைப்படும்.
ஒரு பேப்பர் பிளேட்க்கு குறைந்தபட்சம் 30 பைசா லாபம் கிடைப்பதால் தினசரி லாபம் 3000/- ரூபாய் 25 நாளில் 75,000/-ரூபாய் லாபம் கிடைக்கும்.
விற்பனை வாய்ப்பு இருக்கும் இடங்கள்
பேப்பர் தட்டு தயாரிப்பு முறை பொருத்தவரை சமையல் தொழில் நடத்துபவர்கள், விழாக்கள், அன்னதான நிகழ்ச்சிகள், துரித உணவு கடை நடத்துபவர்கள், பேப்பர் பிளேட்களை வாங்குகிறார்கள், அவர்களுக்கு நீங்கள் நேரடியாக சப்ளை செய்யலாம்.
இதன் மூலம் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும், இந்த தொழிலை பொறுத்தவரை நீங்கள் டீலர்ஷிப் வைத்தால் உங்களுடைய லாபத்தில் அவர்களுக்கு பங்கு கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
கடைகளுக்கு நீங்கள் நேரடியாக சப்ளை செய்யலாம், தரம், குறைந்த லாபம், நேரடி அணுகுமுறை, இருந்தால் அதிகமான ஆர்டரை நீங்கள் பெற முடியும்.
பேப்பர் தட்டு தயாரிக்கும் முறை முழுவதும்
பேப்பர் தட்டு தயாரிப்பு முறையில் முதலில் பேப்பர் பிளேட் இயந்திரம் இரண்டு பாகங்களைக் கொண்டது, ஒன்று கட்டிங் மெஷின், இரண்டாவது பேப்பர் பிளேட் டை மெஷின், இரண்டும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய இயந்திரங்கள்.
தயாரிக்க வேண்டிய பிளேட்டின் அளவிற்கு ஏற்ப கட்டிங் வளையத்தை கட்டிங் மெஷினில் பொருத்தவேண்டும். கட்டிங் வளையத்துக்கு கீழ் பிளேட்டுக்குரிய பேப்பரை மொத்தமாக வைத்து இயக்கினால் கட்டிங் செய்யப்படும்.
வட்ட வடிவில் பேப்பர்கள் தனித்தனியாக கிடைக்கும் நைஸ் ரக பேப்பராக இருந்தால் 100 எண்ணிக்கை வரையும், திக் ரகம் என்றால் 30 முதல் 40 வரை கட்டிங் செய்யப்படும்.
கட் செய்த பேப்பர்களை டைம் மெஷினில் உள்ள அச்சின் மேல் வைத்து இயந்திரத்தை இயக்கினால் பேப்பரின் ஓரங்கள் வளைந்து பிளேட்டுகளாக மாறிவிடும்.
பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை
பேப்பரைப் பிளேட்டாக வளைக்க டை மெஷினில் 5 டிகிரி வெப்பம் இருக்க வேண்டும். அதற்கு உற்பத்தியை துவக்கும் முன்பு டை மெஷினை 90 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும்.
எங்கள் YouTube சேனலைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
நிமிடத்திற்கு 30 பிளேட் தயாராகும் 40 பிளேட்டுகளாக பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி, செலோ டேப் ஒட்டி, அழகான முறையில் பேக்கிங் செய்ய வேண்டும். இப்போது பேப்பர் பிளேட் விற்பனைக்கு தயார் ஆகிவிட்டது.
Honey beekeeping business new ideas 3 tips
இந்த பேப்பர் தட்டுகளை அனைத்து விசேஷங்கள் மற்றும் விழாக்களில் அதிகமாக மக்கள் வாங்குகிறார்கள் என்பதால் அதிக விற்பனை மூலம் நீங்கள் அதிக லாபம் பெற முடியும்.