How to measure land full details 2022
ஒரு ஏக்கர் என்பது எத்தனை சதுர அடி எப்படி அளவிடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!
நண்பர்களுக்கு வணக்கம் இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் ஒரு ஏக்கர் என்பது எத்தனை சதுர அடி என்பதை தெரிந்து கொள்ள போகிறோம்.
நிலத்தைப் பற்றிய அளவுகள் என்பது அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ளக்கூடிய தகவல்களில் ஒன்று ஆனால்.
ஒரு சில நபர்களுக்கு மட்டுமே சிறிய தகவல்கள் தெரிந்திருக்கும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை.
நீங்கள் இவற்றையெல்லாம் தெரிந்து வைத்திருந்தால் தெரியாத உங்களுடைய நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லலாம் அல்லது உங்களுடைய சொந்த நிலத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
எதிர்காலத்தில் நிலம் வாங்குவது, விற்பனை செய்வது, நிலம் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும், இந்த தகவல்கள் கட்டாயம் தேவை.
நிலத்தின் அளவைகள்
ஏக்கர் பரப்பளவை அளக்க உதவும் ஆங்கிலம் அழகு ஆகும், அந்தக் காலத்தில் நிலங்களின் அளவுகளை நம்முடைய பண்டைய மக்கள் பெரும்பாலும் குழி, வேலி, ஹெக்டேர்என்று பேச்சுவாக்கில் அளந்து வந்தார்கள்.
இப்பொழுது உள்ள நடைமுறையில் வீடு மனை சதுர அடி கணக்கில் சொல்லி விற்பனை செய்துவிடுகிறார்கள், இது மட்டுமில்லாமல் சென்னை, கோயம்புத்தூர், போன்ற நகர்புறத்தில் கிரவுண்ட் என்றும் அளவீட்டில் நடைமுறையில் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு ஏக்கர் என்பது 100 சென்ட் கொண்டதாகும்
பொதுவாக ஒரு சென்ட் என்பது 435.6 சதுர அடியாக கணக்கிடப்படுகிறது, அதையே சதுர அடியில் ஒரு ஏக்கர் என்பது 43560 சதுர அடிகள் கொண்டதாகும்.
ஒரு குறிப்பிட்ட மனையின் மொத்த சதுர அடி அளவை 435.6 என்ற அளவால் வகுத்தால் கிடைக்கும் அளவானது அந்த மனையின் மொத்த சென்ட் அளவாகும் என இப்போது கருதப்படுகிறது.
அதாவது 1326 சதுர அடி கொண்ட மனையின் அளவை 435.6 என்ற அளவால் வகுத்தால் கிடைக்கும் (3.04)எண்கள் தான் மனையின் (3) சென்ட் அளவாக இப்பொழுது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு கிரவுண்ட் என்பது எத்தனை சதுர அடி
ஒரு கிரவுண்ட் என்பது 2400 சதுர அடிகள் கொண்டதாகும்.
எனவே குறிப்பிட்ட மனையின் மொத்த சதுர அடி அளவை 2400 என்ற அளவால் வகுத்தால் கிடைப்பது, மனைக்கான கிரவுண்ட் அளவாகும்.
எனவே மேற்கண்ட மனையின் மொத்த சதுர அடி அளவானது 1,326 என்பதை 2,400 என்று அளவால் வகுத்தால் வரக்கூடிய (0.55) என்ற என்ற விடை.
அரை கிரவுண்டுக்கு சற்று கூடுதலாக இருக்கும் மனையின் கிரவுண்ட் இப்படி அளவிடப்படுகிறது.
ஒரு ஏக்கரின்,நீளம்,அகலம், அளவுகள் என்ன
ஒரு ஏக்கரின் நீளம் என்பது 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்.
1 ஏக்கரின் அகலம், 1 சங்கிலி,4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்.
ஏக்கர் அளவுகள் என்றால் என்ன
ஒரு ஏக்கர் = 100 சென்ட்
ஒரு ஏக்கர் = 0.404694 ஹெக்டேர்
ஒரு ஏக்கர் = 40.5 ஏர்ஸ்
ஒரு ஏக்கர் = 43560 சதுர அடி
ஒரு ஏக்கர் = 4046 சதுர மீட்டர்
சுவையான சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..!
நிலத்தை அளக்கும் முறைகள் என்ன
உலகில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான நில அளவுகள் பயன்படுத்தப்படுகிறது.
நம்மளுடைய பாரம்பரிய முறை அளவீடு = குழி, மா, வேலி, காணி, மரக்கா.
Girl child benefit scheme full details 2022
பிரிட்டிஷ் முறை அளவீடுகள் = சதுர அடி, சென்ட், ஏக்கர்.
மெட்ரிக் வழக்கு அளவீடுகள் = சதுர மீட்டர்,ஏர்ஸ்,ஹெக்டேர்ஸ்
ஆனால் இப்பொழுது எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவு முறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான், இருக்கின்றன.