How to protect your Aadhaar card Best 3 tips
கர்நாடக மாநிலம் மங்களூரில் சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகளில் வாகனம் ஒன்று திடீரென்று வெடித்து சிதறியது.
இந்த வெடி விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த இருவர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இது குறித்து தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் குக்கர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த குக்கரில் வெடிபொருட்கள் வைத்து வெடிக்க வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில்.
தீவிரமாக இப்பொழுது உளவுத்துறை, தேசிய புலனாய்வுத்துறை, கர்நாடக காவல்துறை, தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.
போலியான ஆதார் வைத்து சிம் வாங்குவது எப்படி
இதுகுறித்து கர்நாடக மாநில டிஜிபி இந்த வெடிவிபத்து சம்பவம் தற்செயலானது இல்லை இது ஒரு திட்டமிட்ட சதி என்று தெரிவித்துள்ளார்.
அதெல்லாம் சரி இந்த சம்பவத்திற்கும் ஆதார் கார்டுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த விபத்தில் காயமடைந்த நபர் ஒருவர் பயன்படுத்திய செல்போன் சிம்கார்டு.
ஊட்டியை சேர்ந்த சுரேந்தர் என்பவரின் ஆதார் கார்டு பயன்படுத்தி வாங்கப்பட்டுள்ளது என்பது தெரிந்துள்ளது.
ஆதார் தவறாக பயன்படுத்துதல் எப்படி
இந்த வெடி விபத்தில் சம்பந்தப்பட்ட நபர் சமீபத்தில் தமிழகத்தில் குறிப்பாக கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இதற்கும் கோயம்புத்தூர் கார் வெடிவிபத்திற்க்கும் சம்பந்தம் ஏதேனும் இருக்கிறதா என்ற கோணத்தில்.
தமிழ்நாடு, கர்நாடகா, காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேசிய புலனாய்வுப் படை, உள்ளிட்ட அமைப்புகளும் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் மையமாக வைத்து சில இயக்கங்கள் இயங்குவதாக உளவுத்துறை மூலம் அறிக்கைகள் மத்திய அரசுக்கு சென்று கொண்டிருக்கிறது.
இதுபோன்ற காலகட்டங்களில் அப்பாவி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.
இதனை எப்படி தடுப்பது உங்களுடைய ஆதார் கார்டை மற்றவர் பயன்படுத்துகிறார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது போன்றவை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி
இன்றைய காலகட்டத்தில் முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது அனைத்து பரிவர்த்தனைகளும் அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும்.
ஒரு நபருக்கு ஆதார் கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது நீங்கள் எந்த ஒரு வாகனம், நிலம், அல்லது முதலீடு என்றாலும் முதலில் கேட்கப்படுவது ஆதார் கார்டு மட்டுமே.
அவ்வளவு முக்கியமான ஆதார் கார்டை மற்றொரு நபர் தவறாக பயன்படுத்தி ஏதாவது செய்துவிட்டால் முதலில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தொலைபேசி எண்ணை கண்டுபிடிப்பது எப்படி
முதலில் https://myaadhaar.uidai.gov.in/verify-email-mobile என்ற இணையதள பக்கத்தில் சென்று அதில் வெரிஃபை மொபைல் நம்பர் அல்லது வெரிஃபை ஈமெயில் ஐடி என்பதே நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
அதனை வெரிஃபை செய்ய வேண்டும் இதை அடுத்து உங்களுடைய ஆதார் எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும் அதனை தொடர்ந்து உங்களுக்கு மொபைல் எண் அல்லது இமெயில் ஐடி பதிவு செய்ய வேண்டும்.
அதன்பிறகு உங்களுடைய மொபைல் எண் அல்லது ஈமெயில் ஐடிக்கு கேப்ட்சா என்ற எழுத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதன்பிறகு ஓடிபி (OTP) வரும் அதை நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும்.
உங்களுடைய ஆதார் கார்டு லாக் செய்வது எப்படி
How to protect your Aadhaar card Best 3 tips ஆதார் லாக் அல்லது பயோமெட்ரிக் வசதியை பயன்படுத்தலாம்.
இதன்மூலம் தேவைப்படும் சமயத்தில் நீங்கள் லாகின் செய்து கொள்ளலாம் இதுவும் உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்துவதை தடுக்க முடியும்.
https://uidai.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று மை ஆதார் என்ற மெனுவை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் ஆதார் சர்வீஸ் கீழே உள்ள Aadhar card lock and unlock services என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
ஆதார் லாக் செய்வது எப்படி
How to protect your Aadhaar card Best 3 tips இப்பக்கத்தில் ஆதார் எண் மற்றும் திரையில் தெரியும் பாதுகாப்பு குறியீட்டு எண் (security code) பெயர் உங்களது பின்கோடு ஆகியவற்றை பதிவு செய்து Send OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட உங்களுடைய தொலைபேசி எண்ணுக்கு OTP என்பது வரும் அதனை நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும்.
How to protect your Aadhaar card Best 3 tips அதன் பிறகு Login என்பதை கிளிக் செய்ய வேண்டும் இதை செய்ததும் உங்களுடைய ஆதார் கார்டு லாக் செய்யப்பட்டுவிடும்.
அதன் பிறகு உங்களுடைய ஆதார் எந்த ஒரு இடத்திலும் பயன்படுத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு தேவையான போது உங்களுடைய ஆதார் கார்டை ஆக்டிவேட் (Activate) செய்ய முடியும் அதற்கும் இதே போன்ற வழி முறையை நீங்கள் பின்பற்ற வேண்டும்.
உங்களுடைய ஆதார் கார்டு பயன்படுத்திய வரலாறு
How to protect your Aadhaar card Best 3 tips உங்களுடைய ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அது எப்போது எங்கு பயன்படுத்தப்பட்டது என்பதையும் நீங்கள் இணையதளம் மூலம் கண்டறியமுடியும்.
How to protect your Aadhaar card Best 3 tips ஆதார் எண்ணை பயன்படுத்திய விதம், தேதி, நேரம், எந்த நிறுவனத்திற்காக ஆதார் எண் பயன்படுத்தப்பட்டது அந்த நிறுவனத்தின் பெயர்.
வங்கிகள், பங்குச்சந்தைகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், போன்ற இடத்தில் பயன்படுத்திய விதம்.
சிம்கார்டு வாங்கிய நேரம், தேதி, போன்றவை தெரிந்து கொள்ளலாம்.
இதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் நீங்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம்.