How to save money your salary best 8 tips
வருமானம் அதிகரித்தாலும் சேமிப்பு இல்லை எங்கே நடக்கும் தவறு எப்படி சமாளிப்பது..!
அனைவருடைய வாழ்க்கையில் இருக்கும் முக்கியமான பிரச்சனை என்றால் பொருளாதாரம்.
ஒரு நபரின் வாழ்க்கையில் பொருளாதாரம் சரியாக இருந்தால் பிரச்சினைகள் இருக்காது வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் ஆனால் அப்படி நடப்பதில்லை.
95% நபர்களுக்கு பொருளாதார பிரச்சினை எப்போதும் இருக்கிறது மாதம் சமாளிப்பது கடினமாக இருக்கிறது.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் மிகப்பெரிய தொகையை எப்படி சேமித்து வைப்பது, எங்கு முதலீடு செய்வது, எப்படி முதலீடு செய்வது, எங்கு முதலீடு செய்தால் பாதுகாப்பாக இருக்கும்.
சரியான நேரத்தில் பணம் வரும் என்று பல்வேறு தகவல்கள் தேவை திடீரென்று செலவுகளை எப்படி சமாளிப்பது.
எந்த செலவு தேவையானது தேவையில்லாத செலவுகளை எப்படி குறைப்பது போன்றவற்றையும் நீங்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த கட்டுரை மூலம் உங்களுக்கு பணம் சேமிப்பு தொடர்பான ஒரு விழிப்புணர்வு கிடைக்கும்.
பணம் சேமிப்பதற்கான டிப்ஸ்
உங்களுடைய வாழ்க்கையில் எந்த ஒரு கால சூழ்நிலையிலும் கட்டாயம் சேமிப்பு வேண்டும்.
நீங்கள் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் உங்களுடைய வருமானத்தில் 30 சதவீதம் சேமித்தால் மட்டுமே.
உங்களால் ஒரு அளவுக்கு உங்களுடைய வாழ்க்கையில் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.
நீங்கள் உங்களுடைய சம்பளத்தை மூன்று விதமாக பிரிக்க வேண்டும்.
அதாவது முதலில் 30% சேமிப்பதற்கு என்று எடுத்து வைத்துவிடுங்கள், அடுத்ததாக 50% உங்களுடைய வாழ்க்கை முறைக்கு மற்றபடி 20% உங்களுடைய கடன்களை அடைப்பதற்கு என்று பிரித்து விடுங்கள்.
மாதம் 30 சதவீதம் வருடத்திற்கு 30 சதவீதம் என்று நீங்கள் சேமித்த பணத்தை வருடக்கணக்கில் சரியான வழியில் முதலீடு செய்தால் அந்த பணம் அடுத்தவருடம் கணிசமான தொகையை உங்களுக்கு கொடுக்கும்.
இந்த நடைமுறையை நீங்கள் மாதம் வருடம் என்று தொடர்ந்து கடைபிடித்தால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு நீங்கள் சேமித்த பணம் மிகப் பெரிய தொகையாக மாறிவிடும்.
சம்பளம் வந்தவுடன் முதலில் 30 சதவீத சேமிப்பதற்கு என்று எடுத்து வைத்துவிடுங்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்த பணத்தை எடுக்கக்கூடாது.
குடும்பச் செலவுகளைச் சமாளிப்பது எப்படி
முக்கியமாக நீங்கள் அல்லது உங்கள் குடும்ப நபர்கள் இணையதளத்தில் பொருட்கள் வாங்குவதை குறைக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தில் பொருட்கள் வாங்குவது என்பது அதிகமாகி வருகிறது.
உங்களுடைய கைப்பேசியில் (Flipkart, Amazon) போன்றவற்றை நீக்கி விடுங்கள் ஏனென்றால்.
இது போன்று (Flipkart, Amazon) இருப்பதால் அவற்றில் சென்று செல்போன்கள், எலக்ட்ரிக் பொருட்கள் பார்ப்பது, ஆடை பார்ப்பது, தேவையில்லாத பொருட்கள் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால் அதை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
முக்கியமாக உங்கள் குடும்பத்திற்கு தேவையான சமையல் பொருட்கள் வாங்குவது கவனத்தில்கொள்ள வேண்டும் ஏனென்றால் இந்த இடத்தில் அதிகப்படியான தொகை செலவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதற்கு நீங்கள் உள்ளூரில் இருக்கும் சந்தைகளில் சிறிய தொகையில் பொருட்கள் வாங்கலாம்.
1,000/- ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் உங்களால் சமாளிக்க முடியும்.
அது மட்டுமில்லாமல் எந்த ஒரு கால சூழ்நிலையிலும் உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் அல்லது மனைவி குழந்தைகள் போன்றவற்றை.
பல்பொருள் அங்கன்வாடிகளுக்கு (supermarket) அழைத்து சென்று விடாதீர்கள், நீங்கள் ஒரு மாதம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஒரு மணி நேரத்தில் கரைத்து விடுவார்கள்.
செலவுகளை அதிகரிக்கக் கூடாது
உங்களுடைய வருமானம் அதிகரிக்க அதிகரிக்க உங்களுடைய செலவுகளை குறைப்பதற்கான வாய்ப்புகளை நீங்கள் தேட வேண்டும்.
முக்கியமாக நீங்கள் தனியாக உட்கார்ந்து தேவையில்லாத செலவுகளை எப்படி குறைப்பது எப்படி என்று நன்கு யோசித்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய முழு வருமானத்தையும் உங்களுடைய வீடு நண்பர்கள் மற்றும் பொதுவெளியில் காண்பிக்க வேண்டாம்.
ஏனென்றால் இதனால் உங்களுக்கு பல்வேறு வகையான பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
செய்யக்கூடாத சில செயல்கள்
எக்காரணம் கொண்டும் இன்றைய காலகட்ட சூழ்நிலையில் உங்களுடைய பணத்தை வட்டிக்கு விடுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.
அதுமட்டுமில்லாமல் உங்களிடம் இருக்கும் பணத்தை பற்றி உங்கள் நண்பரிடம் காண்பித்துக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் உங்கள் நண்பருக்கு பணம் கொடுத்தால் கட்டாயம் அதை மறுபடியும் உங்களால் பெற முடியாது.
திருமணம் மற்றும் திருவிழாக்களை எப்படி சமாளிப்பது
ஒரு சில மாதங்களில் திடீரென்று நண்பர்கள் மற்றும் உறவினர்களின் திருமணம் அதிகப்படியாக நடக்கும் அந்த மாதத்தில் உங்களுக்கு அதிகப்படியான பணம் தேவை வந்துவிடும்.
இதுபோன்ற சூழ்நிலையில் நீங்கள் குறைந்த அளவில் அனைவருக்கும் அன்பளிப்பை வழங்க வேண்டும்.
உங்களுடைய வாழ்க்கையில் குறிப்பிட்ட அளவில் பணம் சேமிக்கும் வரை உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் திருமணங்கள் திருவிழாக்கள் தவிர்ப்பது நல்லது.
ஏனென்றால் உங்களுடைய ஆற்றல் உங்களுடைய பணம் உங்கள் இடத்தில் பணம் இருந்தால் மட்டுமே உங்களால் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்க முடியும்.
நீங்கள் குறிப்பிட்ட அளவில் பணத்தை சேமித்த பிறகு திருவிழாக்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள்.
உங்களிடம் சேமிப்பு இல்லை என்றால் உங்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாரும் உங்களை மதிக்க மாட்டார்கள் இதனை நீங்கள் நினைவில் வைத்துக் கொண்டு பணத்தை சேமிக்கத் தொடங்குங்கள்.
பணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள் அப்பொழுது தான் உங்களுடைய பொருளாதாரம் உயர தொடங்கும்.
பொருளாதாரம் உயர தொடங்கினால் மட்டுமே உங்களால் அடுத்த கட்டத்தைப் பற்றி வாழ்க்கையில் சிந்திக்க முடியும்.
செலவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகள்
உங்களுடைய மனைவி குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை பொது வெளியில் அழைத்துச் செல்லும்போது அவர்களிடம் சில உறுதிமொழிகளை பெற்றுக்கொண்டு அழைத்துச்செல்லுங்கள்.
குறிப்பிட்ட அளவில் மட்டுமே பணம் செலவு செய்ய வேண்டும் என்று கட்டாயம் சொல்லிவிடுங்கள்.
ஏனென்றால் நீங்கள் அவர்களை சுற்றுலா மற்றும் ஆன்மீக இடங்களுக்கு அழைத்து செல்லும்போது திடீரென்று செலவுகளை அவர்கள் ஏற்படுத்தி விடுவார்கள்.
இது போன்ற சூழ்நிலையில் நீங்கள் சிக்கிக்கொண்டால் உங்களால் சேமிக்க முடியாது.
அதனால் குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் அவ்வப்போது உங்களுடைய பொருளாதாரத்தைப் பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லி விடுங்கள்.
வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகள்
How to save money your salary best 8 tips ஒரு வழியில் மட்டுமே உங்களுக்கு வருமானம் வந்தால் கட்டாயம் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க முடியாது.
அதனால் குறைந்தது 3க்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வருவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
எப்பொழுதும் இணையதளத்திலிருந்து வருமானம் வருவதற்கான வாய்ப்புகளை வைத்துக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் எந்த நேரத்திலும் இதனால் பணம் அதிகப்படியாக வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதுமட்டுமில்லாமல் நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1மணி நேரம் அல்லது 2 மணி நேரம் வேலை செய்தால் போதும் இணையதளத்திற்கு.
உங்களுடைய வாழ்க்கைத் துணைவியார் வேலைக்கு சென்றால் அந்த பணத்தை முழுவதும் சேமித்து விடுங்கள் கூடவே உங்களுடைய வருமானத்திலும் 30 சதவீதத்தை சேமித்து விடுங்கள்.
இந்த பழக்கத்தை நீங்கள் குறிப்பிட்ட வருடங்களுக்கு தொடர்ந்து கடைபிடித்தால், கண்டிப்பாக உங்களுக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கும்.
குறிப்பிட்ட இடைவெளி கட்டாயம் தேவை
How to save money your salary best 8 tips இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கைபேசி, மடிக்கணினி, கணினி, காமிரா, வாட்ச், கண் கண்ணாடி,செப்பல், போன்றவற்றிற்கு இன்றைய கால இளைஞர்கள் அடிமையாகி உள்ளார்கள்.
இதுபோன்ற பொருட்கள் கட்டாயம் தேவை அதனால் உங்களுடைய வாழ்க்கையில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொருட்கள் வாங்குவதற்கு என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.
இதனால் உங்களுடைய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கங்கள் ஏற்படாது.
முக்கியமாக உங்களிடத்தில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை உங்களுடைய உறவினர்கள் நண்பர்களிடம் மட்டும் தெரியபடுத்தி விடாதீர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும்.
உங்கள் மனைவியிடம் உங்களுடைய முழு சம்பளத்தை பற்றி தெரிவித்து விடாதீர்கள்.