How to start Maligai Kadai full details 2022

How to start Maligai Kadai full details 2022

How to start Maligai Kadai full details 2022

மளிகை கடை தொடங்குவது எப்படி எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் அதற்கு என்ன உரிமம் பெற வேண்டும்..!

வணக்கம் நண்பர்களே புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

அதாவது இன்றைய பதிவில் மளிகை கடை தொடங்குவது எப்படி மளிகை கடை மூலம் தினந்தோறும் எவ்வளவு வருமானம் பெற முடியும் போன்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

சிறு நிறுவனங்கள், முதல் பெரிய நிறுவனங்கள், வரை பலதரப்பட்ட மக்களும் இந்த தொழிலை தொடங்கி அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் பெற்று இருக்கிறார்கள்.

பொதுவாக இந்தியாவில் மளிகைக் கடைகள் உயிர்நாடியாக இருக்கிறது இப்போது உள்ள காலகட்டத்தில் பெரிய பெரிய பல்பொருள் அங்கன்வாடி, டிபார்ட்மெண்ட் ஸ்டோர், இணையதள விற்பனை என்று நிறைய வந்தாலும்.

ஒவ்வொரு ஊரிலும் தெருவிற்கு தெரு, வீதிக்கு வீதி,இருக்கின்ற ஒவ்வொரு மளிகை கடைக்கு மக்களிடத்தில் அதிக வரவேற்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது.

ஆகவே இப்படிப்பட்ட மளிகை கடை தொடங்குவதன் மூலம் உங்களுக்கு ஒரு சிறப்பான வியாபாரத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் உங்களால்.

அதேபோல் இந்த தொழிலில் மிக முக்கிய மூலதனம் என்று பார்த்தால் அது உங்களது விடாமுயற்சி கடின உழைப்பும் இந்த தொழிலுக்கு மிக முக்கிய மூலதனமாகும்.

சரி இப்போது இந்த தொழிலை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.

How to start Maligai Kadai full details 2022

தேவையான முதலீடுகள்

மளிகை கடை தொடங்குவதற்கு முதலில் சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும், சப்ளையர்கள் மற்றும் ஊழியர்கள் முடிவு செய்யும் போது உங்களுடைய முதலீடுகளை தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.

அதாவது நீங்கள் குறைந்த அளவில் மளிகை கடை ஆரம்பிக்க முடிவு செய்தால், அதற்கேற்ப குறைந்த பணியாளர்கள் மற்றும்  முதலீடு குறைவாக இருக்கலாம்.

நீங்கள் பல்பொருள் அங்கன்வாடி போன்ற பெரிய அளவில் மளிகை கடை தொடங்க நினைத்தால் அதற்கேற்ப முதலீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும்.

தோராயமாக அனைத்து செலவுகளுடன் ஒரு நல்ல மளிகை கடை ஆரம்பிக்க குறைந்தபட்சம் 80,000/- முதல் அதிகபட்சம் 3,00,000/- ரூபாய் வரை தேவைப்படலாம்.

தேவையான மூலப்பொருட்கள்

ரேக்குகள், அரிசி மூட்டை மற்றும் ஸ்டேஷனரி பொருட்களை தங்களது ஏரியாவுக்கு தகுந்தாற்போல் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பிறகு மளிகை கடைகளில் அதிகம் விற்பனை ஆகக்கூடிய சர்க்கரை, பருப்பு வகைகள், தானிய வகைகள், சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், பூண்டு, வெங்காயம், போன்ற பொருட்களையும் குறைந்த அளவு எப்போதும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு சிறிதளவு குழந்தைகள் விரும்பக்கூடிய தின்பண்டங்கள் பிஸ்கட்கள் போன்றவைகளும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே இதுபோன்ற பொருட்கள் மளிகை கடை வைக்க அதிகம் தேவைப்படும் இவையெல்லாம் தவிர்த்து தினமும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருட்கள் என்று பார்த்தால் பால், காய்கறிகள், முட்டை, கீரை வகைகள், இதுபோன்ற பொருட்களையும் தினமும் வாங்கி விற்பனை செய்ய வேண்டியதாக இருக்கும்.

தொடங்கிய ஆரம்ப நிலையில் இது போன்ற பொருட்களை எல்லாம் வாங்கி விற்பனை செய்யுங்கள் அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எந்த பொருட்களை அதிகம் விரும்புகிறார்கள் என்று அந்த பொருட்களை அதிக அளவில் வாங்கி விற்பனை செய்வதை மாற்றிக்கொள்ளுங்கள்.

How to start Maligai Kadai full details 2022

மளிகை கடை தொடங்க தேவைப்படும் அரசு உரிமங்கள்

இந்தியாவில் ஒரு மளிகைக்கடை தொடங்க சில சட்டங்களும் உரிமைகளும் உள்ளன அவை என்ன என்பதை இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

நிறுவன பதிவு (Entry Registration)

கடை மற்றும் ஸ்தாபன பதிவு (Shop and Establishment Registration)

உணவு உரிமம் (Food License)

நீங்கள் பல்வேறு வரி சலுகைகள் பெற மற்றும் ரிவர்ஸ் வரி விதிப்பை தவிர்க்க நீங்கள் உங்கள் வணிகத்திற்கு GST பதிவு செய்ய வேண்டும்.

உங்கள் வருடாந்திர வருவாய் 20 லட்சத்திற்கு மேல் இருந்தால் உங்கள் GSTIN அல்லது உங்களுக்கான 15 இலக்க எண்ணை பொறுத்து கட்டாயமாக்கப்படும்.

சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்

ஒரு தொழிலைப் பொறுத்தவரை முழுமையாக வெற்றி அடைய சரியான இடம் எப்பொழுதும் மூலதனமாக அமைகிறது.

நீங்கள் மளிகை கடை தொடங்க விரும்பினால் முதலில் சரியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும், அதாவது கடை வைக்கும் இடத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கவேண்டும்.

உதாரணத்திற்கு உங்கள் பகுதி ரொம்ப தூரத்தில் இருக்கும் உங்கள் ஏரியாவில் குறைந்தது 150 குடும்பங்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

புதிய கொரோனா ஓமிக்ரானின் அறிகுறிகள் என்ன

அப்போது நீங்கள் மட்டும்தான் இந்த மளிகைக்கடை உங்கள் ஏரியாவில் திறக்கப் போகிறீர்கள் என்றால் கண்டிப்பாக உங்கள் கடையில் வியாபாரம் நன்றாக இருக்கும்.

How to make natural bathing soap in tamil 2021

எனவே கடை வைக்கும் இடத்தை நன்றாக முதலில் தீர்மானித்துக் கொள்வது உங்கள் தொழிலுக்கு நல்ல வெற்றியை கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published.