How to stop drinking best tips in tamil 2022

How to stop drinking best tips in tamil 2022

குடிப்பழக்கத்தை நிறுத்த சித்த வைத்தியம் சொல்லும் எளிய மருந்து குறிப்புகள்..!

இப்பொழுது நம் நாட்டில் நூற்றுக்கு 90 சதவீத நபர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்கள், நம் நாட்டின் ஒரு கலாச்சாரமாக இந்த குடிப்பழக்கம் இப்பொழுது மாறி வருகிறது.

பள்ளி செல்லும் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள், உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகள், முதல் அனைவரும்.

குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள், இதனால் பல்வேறு பிரச்சனைகள் சமுதாயத்தில் தினந்தோறும் நடந்து கொண்டிருக்கிறது.

கல்யாண வீடு, கெடாவெட்டு, கோவில் திருவிழாக்கள், என விசேஷங்களில் பெரும்பாலும் மது அருந்தும் பழக்கம் ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது.

மரணம் நிகழ்ந்த வீட்டில் கூட குடிப்பழக்கம் என்பது ஒரு சாதாரண நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த குடிப்பழக்கம்மானது வேடிக்கையாக, விளையாட்டாக, தொடங்கி மதுபோதை பழக்கம் மெல்ல மெல்ல பழக்கமாகி பின்னர் அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள்.

போதையால் பல்வேறு நபர்களின் வாழ்க்கை மாறியுள்ளது, பல குடும்பங்கள் சின்னாபின்னமாகி சீரழிந்து கொண்டிருக்கிறது மற்றும் சீரழிந்துவிட்டது, இதை நாம் தினசரி நேரில் கூட பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய மது பிரியர்களை திருத்துவது என்பது எப்படி என்று வீட்டில் இருக்கும் நபர்கள் யோசித்து வருகிறார்கள், சரி இந்த கட்டுரையில் தங்களுக்கு உதவும் வகையில் குடியை நிறுத்த சித்த வைத்தியம் சிலவற்றை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

How to stop drinking best tips in tamil 2022

குடியை நிறுத்த வில்வ மரத்து இலைகள்

வில்வ மரத்து இலை குடிப்பழக்கம் போதை மன்னர்களை திருத்த ஒரு அற்புத மருந்தாக பயன்படுத்தப்படுகிறது சித்த மருத்துவத்தில் வில்வ இலையை பயன்படுத்தி.

இந்த குடி பழக்கத்தை எப்படி நிறுத்துவது, என்பதை தெரிந்துகொள்வோம்.கசாயம் செய்ய தேவையான பொருட்கள் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

தேவைப்படும் மூலப் பொருட்கள்

வில்வ இலை – ஒரு கைப்பிடி அளவு

பனை வெல்லம் – தேவையான அளவு

கொத்தமல்லி விதை – ஒரு டீஸ்பூன்

ஏலக்காய் – ஒன்று

தண்ணீர் – 250 மில்லி

கசாயம் செய்யும் முறை

அடுப்பில் சிறிய பாத்திரத்தை வைத்து அவற்றில் 250 மில்லி தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும், பின் ஒரு கைப்பிடி அளவு வில்வ இலையை கொதிக்கும் நீரில் சேர்க்க வேண்டும்.

பிறகு ஏலக்காய் மற்றும் கொத்தமல்லி விதை ஆகிய இரண்டையும் நன்றாக சேர்த்து இடித்துக் கொள்ளுங்கள், இடித்த பொடியை நீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

இந்த கசாயம் நன்றாக கொதித்த பின் அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து குடிப்பழக்கம் உள்ள நபர்களுக்கு கொடுங்கள்.

இவ்வாறு இந்த கஷாயத்தை தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் குடிப்பதை நிறுத்தி விடலாம்.

How to stop drinking best tips in tamil 2022

வில்வ பொடி எப்படி செய்வது

வில்வா இலை பல வகையான உடல் ஆரோக்கிய பிரச்சனைக்கு சிறந்த மருந்து என்று சித்தவைத்தியம் தெரிவிக்கிறது, அதுபோல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.

தொப்பையை எளிதாக குறைக்க எவரும் சொல்லாத ரகசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!

அந்த குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க இது பயன்படுகிறது என்றால், நீங்கள் நம்ப முடியுமா,இது ஒரு அற்புத மருந்து என்று சொல்லப்படுகிறது.

இந்த வில்வ இலையை நன்றாக சுத்தம் செய்து நிழலில் நன்றாக உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள், இந்த பொடியை 200 மில்லி லிட்டர் நீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு தொடர்ந்து கொடுத்துவரவும்.

How to start Maligai Kadai full details 2022

இவ்வாறு தொடர்ந்து குடித்து வந்தால் இந்த கசாயத்தை மது பழக்கத்தை அவர்கள் மறந்து விடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது, அதை மீறி அவர்கள் மது அருந்தினால் அவர்களுக்கு மதுபானம் வாந்தியாக வெளியேறிவிடும்

Leave a Comment