How to take Aavin Milk dealership quickly 2022
ஆவின் பால் டீலர்ஷிப் எடுப்பது எப்படி..!
விற்பனையாளர்கள் அல்லது கடைகளுக்கு தனித்தனியாக அல்லது சிறிய தொகுதிகளாக மறு விற்பனை செய்வதற்கான பொருட்களை மொத்தமாக எடுத்துச் செல்பவர்கள் தான் டீலர்ஷிப் என்று அழைக்கப்படுகிறார்கள்.
டீலர்ஷிப் என்பது பொருட்களை விற்பனை செய்யும் நபர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு தொடர்பு ஏற்படுத்தும் நபர்.
நாம் இன்றைக்கு வியாபாரம் பகுதியில் ஆவின் பால் டீலர்ஷிப் எப்படி எடுப்பது மற்றும் அதற்கான தேவையான ஆவணங்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்படும் நிறுவனம்தான் ஆவின்பால் இப்பொழுது தமிழ்நாடு முழுவதும் சிறு சிறு பெட்டி கடைகள் மூலம் காபி, டீ ,பால், பாதாம் பால்,உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.
இதனை யார் வேண்டுமானாலும் டீலர்ஷிப் எடுத்து விற்பனை செய்து கணிசமான லாபத்தையும் பெற முடியும்.
ஆவின் பால் டீலர்ஷிப் எப்படி எடுப்பது
இந்த டீலர்ஷிப் மூலம் நீங்கள் கண்டிப்பாக ஒரு நல்ல வருமானத்தை உங்களால் பெற முடியும்.
ஏனெனில் இது தமிழக அரசு நடத்தும் ஒரு நிறுவனம் என்பதால் இதற்கு எப்பொழுது மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது, இதனால் விற்பனையும் கண்டிப்பாக அதிகரிக்கும், இதில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த ஆவின் பால் டீலர்ஷிப் எடுப்பதற்கு நீங்கள் கட்டாயம் 12ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
110 square feet இட வசதி தேவைப்படும், கடை சொந்தமாக அல்லது வாடகைக்கு எது வேணாலும் நீங்கள் காண்பிக்க வேண்டும்.
இதற்கு தேவைப்படும் ஆவணங்கள்
ஆவின் பால் டீலர்ஷிப் எடுப்பதற்கு உங்களிடம் இந்திய குடிமகனுக்கு என்று வழங்கப்படும் அடையாள அட்டை இருக்க வேண்டும்.
ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், போன்றவை பயன்படுத்திக்கொள்ளலாம்.
Address Proofக்கு தேவைப்படும் ஆவணங்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பான் கார்டு, போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உங்கள் கடை வாடகை கடையாக இருந்தால் அதற்கு வாடகை ஒப்பந்தம் நகல் தேவைப்படும் அல்லது சொந்தக் கடையாக இருந்தால் மின் இணைப்பு வழங்குவதற்கான நகல்.
கடைக்கு வரி செலுத்தியதற்கான நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கட்டாயம் தேவைப்படும்.
இதற்கு விண்ணப்பிப்பது எப்படி
https://aavinmilk.com என்ற இணையதளத்திற்கு சென்று அங்கு இருக்கும் Aavin Franchise application – ஐ பதிவிரக்கம் செய்து ஒரு பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.
பின் அந்த விண்ணப்பத்தை நீங்கள் பூர்த்தி செய்த அருகிலிருக்கும் ஆவின் நிறுவனத்தில் கொடுக்க வேண்டும்.
உங்கள் விண்ணப்பத்தை அவர்கள் சரிபார்க்க குறைந்தது 3நாட்கள் தேவைப்படும், உங்கள் விண்ணப்பத்தை சரிபார்த்த பிறகு உங்களுக்கு அழைப்பு வரும் நீங்கள் அவர்களை அலுவலகத்தில் சென்று பார்க்கவேண்டும்.
அங்கு Customer Relation Officer இருப்பார் அவர் உங்களுக்கு இந்த டீலர்ஷிப் பற்றிய முழு தகவல்களையும் சொல்லுவார். இந்த டீலர்ஷிப் நீங்கள் எடுப்பதாக இருந்தால்.
சீனா செயலிகள் தடையால் இந்தியாவுக்கு ஏற்பட்ட ஏகப்பட்ட நன்மைகள் என்ன..!
ஒரு ஒப்பந்த பத்திரத்தில் ஒப்பந்தம் போட வேண்டும், இந்த ஒப்பந்தத்தை நீங்கள் கவனமாக படித்த பின்பு நீங்கள் கையொப்பம் இட வேண்டும்.
முதலீடு மற்றும் சில குறிப்புகள்
இதற்கு முதலீடு செய்வதற்கு குறைந்தபட்சம் 1 லட்ச ரூபாய் உங்களுக்கு தேவைப்படும் நீங்கள் புதியதாக டீலர்ஷிப் எடுக்கும் நபராக இருந்தால்.
10 best benefits of eating shrimp in tamil..!
குறைவான பொருட்களை வாங்கி விற்பனை செய்ய தொடங்கி விடுங்கள், ஆவின்பால் கடையில் மற்ற கம்பெனி பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.
அதை மீறி நீங்கள் விற்பனை செய்தால் உங்களுடைய டீலர்ஷிப் தடை செய்யப்படும்.