How to use PAN and Aadhar card safety 2022

How to use PAN and Aadhar card safety 2022

பான், ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு பெரிய மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி..!

ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதன்  மூலம் அடையாளத்திற்கு முதல் ,பணமோசடி வரை, சிக்கிக்கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் அடிக்கடி செய்தித்தாள்கள் அல்லது சமூக வலைதளங்களில் கிராமத்தில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு நபரின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அல்லது அந்த நபருக்கு 10 கோடி முதல் 20 கோடி வரை வருமான வரி கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கும்.

இது போன்ற செய்திகள் இணையதளத்தில் இப்பொழுது அதிக அளவில் உலாவருகிறது இது உண்மையான செய்தி.

ஏழை எளிய மக்களின் சுய தகவல்களை திருடி அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பண மோசடிகள் இணையதளம் மூலம் நடக்கிறது.

இதற்கு வருமான வரி கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் வரும் பொழுது தான் தெரிகிறது அந்த நபர் படிப்பறிவு இல்லாத நபர் என்று.

இதனால் அரசாங்கமும் எதுவும் செய்ய முடியாமல் அதுபோன்று இருக்கும் குற்றவாளிகளை விட்டு விடுகிறது.

How to use PAN and Aadhar card safety 2022

திருட்டு சம்பவங்கள்

ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இந்திய குடிமக்களின் இருக்க வேண்டிய அத்தியாவசியமான ஒன்றாக அரசாங்கத்தால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு நபரின் அடையாளத்தை அறிந்துகொள்வதற்கு ஆதார் கார்டும் அதேசமயம் வருமான வரி செலுத்துதல் மற்றும் வங்கி கணக்குகளுக்கு பான் கார்டு மிக முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது.

ஒரு சராசரி மனிதனின் அத்தனை விவரங்களும் ஆதார் கார்டு மற்றும் பான் அட்டையில் உள்ளது. எனவே இந்த இரண்டு ஆவணங்கள் மட்டும் இருந்தால் போதும் மோசடி பெரிய அளவில் எளிதாக செய்து விடலாம்.

இன்றைய காலகட்டங்களில் ஆதார் எண் வங்கி முதல் அனைத்திலும் கட்டாயம் இணைக்கப்பட்டுள்ளது, எனவே ஆதார் எண் அல்லது பான் கார்டு எண் ஆகியவற்றை வேறு யாராவது கேட்கும் பட்சத்தில் அவர்களிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

How to use PAN and Aadhar card safety 2022

இதனைத் தடுக்க வழிமுறைகள் உள்ளது

முன்பின் தெரியாதவர்களிடம் ஆதார் மற்றும் பான் அட்டை குறித்த விவரங்களை நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

ஒருவேளை கொடுக்கும் பட்சத்தில் அதனை அவர்கள் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்பதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஆதார் மற்றும் பான் அட்டை நகல் எடுக்கும் தரூவாயில் மறக்காமல் மீண்டும் ஆவணங்களை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட கணினி மற்றும் செல்போன்களைத் தவிர வேறு எங்கும் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வைத்திருக்கக்கூடாது.

எப்பொழுதும் ஆதார் மற்றும் பான் அட்டைகளை கைகளில் எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

மாறாக ஸ்கேன் செய்யப்பட்ட நகைகளை மொபைல் போனில் வைத்துக்கொள்வது நல்லது அதற்கும் தனிப்பட்டமுறையில் பாஸ்வேர்ட் வைத்துக்கொள்ளலாம்.

பாகற்காயில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா

சில நபர்கள் மணி பர்ஸ்ல் முக்கிய ஆவணங்களை வைக்கும் பழக்கம் இருக்கும் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

Waffle Business new ideas in tamil 2021

அதேபோல் உங்களுடைய சிபில் ஸ்கோர் எவ்வளவு உள்ளது என்பதை அவ்வப்போது சரி பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமாக இருக்கிறது.

Leave a Comment