சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உணவில் எவ்வாறு அதிக புரதத்தை சேர்க்க முடியும்.(How vegetarians can add Best protein 5 foods)
பெரும்பாலும் சைவ உணவு உண்பவர்களுக்கு பொதுவான ஒரு கவலை என்னவென்றால் எப்படி தங்கள் உணவில் உடலுக்கு தேவையான புரதத்தை சேர்த்துக்கொள்வது.
கண்டிப்பாக சைவ உணவில் பின்வரும் ஊட்டச்சத்து குறைபாடுகள் சிறிதளவு ஏற்படும் கால்சியம், துத்தநாகம், ஒமேகா-3, வைட்டமின் டி,புரதம் மற்றும் இரும்பு. ஆனால் நீங்கள் சைவ உணவில் பின்வரும் உணவுகளை எடுத்துக்கொண்டால் உங்கள் உடலுக்கு தேவையான புரதங்களை பெற முடியும்.
நீங்கள் உண்ணும் முறை நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை பற்றி முழு கவனமாக இருக்க வேண்டும்.
புரதம் நமது உடலில் உருவாக்கப்படுவதில்லை எனவே உடலுக்கு தேவையான புராதத்தை வெளியிலிருந்து நமது உணவிலிருந்து தான் உடல் எடுத்துக்கொள்கிறது. அப்படி நீங்கள் புரதத்தை உடலுக்கு கொடுக்கவில்லை என்றால் உடலில் தசைகள் குறைந்து பல்வேறு பிரச்சினைகள் தோன்ற ஆரம்பிக்கும்.
சோயா பீன்ஸ்.
காய்கறிகள் அல்லது சைவ உணவில் அதிகமான புரதத்தை கொண்டுள்ள உணவு என்றால் அது சோயா பீன்ஸ் மட்டுமே கிட்டத்தட்ட 49% புரதத்தை சோயாபீன்ஸ் கொண்டுள்ளது.
இதை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உங்கள் உடலுக்கு தேவையான புரதம் கிடைத்துக்கொண்டே இருக்கும் மேலும் உடற்பயிற்சி நிலையங்களில் அல்லது மருத்துவமனைகளில் உடலுக்கு தேவையான புரதத்தை பெறுவதற்கு அதிக அளவில் சோயாபீன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள்.
புரதச் சத்து நிறைந்துள்ள பருப்பு.
பருப்புகளில் சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது மேலும் இவைகளை விட புரதச் சத்து அதிக அளவில் உள்ளது இதை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
காய்கறிகளில் உள்ள புரதச்சத்து.
பட்டாணி,ப்ரோக்கோலி மற்றும் கீரை சமைத்த கோப்பையில் 7 கிராம் புரதசத்து இருக்கிறது உருளைக்கிழங்கு, காலிஃபிளவர்,காளான் மற்றும் பிரஞ்சு பீன்ஸ் ஆகியவை சமைத்த கோப்பையில் 5 கிராம் புரதசத்து கொண்டுள்ளது.பீட்ரூட் சமைத்த கோப்பையில் 4 கிராம் புரதசத்து உங்களுக்கு வழங்குகிறது. உங்களிடம் அதிக புரத காய்கறிகள் இருக்கும்போது, இது உங்கள் மொத்த புரதசத்தை உடலுக்கு வழங்குகிறது.
பால் பொருட்கள்.
நெய் வெண்ணை தயிர் மற்றும் பால் உள்ளிட்ட அனைத்து பால் சார்ந்த பொருட்களிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சிறந்த முதலீட்டு திட்டங்கள்.
விதைகள் மற்றும் கொட்டைகள்.
வேர்க்கடலை, பாதாம், முந்திரி, பூசணி விதை, சூரியகாந்தி விதை, மற்றும் ஆளி விதை உள்ளிட்ட விதைகளில் அதிக அளவில் புரதச்சத்து நிறைந்துள்ளது.