Hyderabad Express train passengers robbed
சிக்னலை உடைத்து நடுக்காட்டுக்குள் ரயிலை நிறுத்திய கொள்ளையர்கள்?சென்னை ரயிலில் பயணிகளிடம் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு என்ன நடந்தது..!
சென்னை நோக்கி வந்து கொண்டு இருந்த ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் ரயிலை நடு வழியில் நிறுத்த வைத்த கொள்ளையர்கள்.
பயணிகளிடம் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சி சம்பவத்தை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் குறித்து தற்போது விசாரணை அதிரடியாக நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் வழக்கம் போல ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு நேற்று முன்தினம் வந்து கொண்டு இருந்தது,சென்னை நோக்கி வந்த இந்த ரயிலில் பயணிகள் நூற்றுக்கணக்கானோர் பயணித்தனர்.
இந்த ரயில் அதிகாலை 1:20 மணியளவில் ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் சிங்கராய கொண்ட மற்றும் கபாலி ரயில் நிலையங்களுக்கிடையே வந்து கொண்டு இருந்தது.
ரயில் வேகமாக வந்து கொண்டு இருந்த நிலையில் திடீரென ரயிலுக்கு சிக்னல் கிடைக்கவில்லை,இதனால் நடுவழியில் ரயிலின் லோக்க பைலட் வண்டியை நிறுத்தினார்.
பலரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர் சுற்றிலும் இருட்டு அப்பகுதி காட்சியளித்த நிலையில் திடீரென ரயிலுக்குள் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று புகுந்தது.
ஸ்லீப்பர் வசதி கொண்ட செகண்ட் கிளாஸ் பெட்டிக்குள் அந்த கொள்ளை கும்பல் புகுந்தது திடீரென ரயிலுக்குள் சத்தம் கேட்பதை உணர்ந்த பயணிகள்.
திடுக்கிட்டு விழித்தனர் அப்போது தங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியையும் துப்பாக்கியும் எடுத்து மிரட்டியை கொள்ளையர்கள் பயணிகளிடம் இருந்த தங்க நகைகள் மற்றும் விலை கொண்ட செல்போன், லேப்டாப், பணத்தையும் கொள்ளையடித்தனர்கள்.
இதனால் பயந்து போன பயணிகள் தங்களிடம் இருந்ததை கொள்ளையர்களிடம் கொடுத்து விட்டார்கள் கொள்ளையடித்த கையோடு ரயிலில் இருந்து குதித்து தப்பித்து ஓடினார்கள்.
இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை இதற்கு இடையே அதே வழித்தடத்தில் செகந்திரா பாட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சார்மினார் எக்ஸ்ப்ரஸ் ரயில் வந்து கொண்டு இருந்தது.
இந்த ரயில் சிக்னல் கிடைக்காததால் நடுவழியில் நிறுத்தப்பட்டது, ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலிலும் கொள்ளை அடிக்க திட்டமிட்டது.
இதற்காக அந்த ரயிலிலும் கும்பலாக முயற்சி செய்தார் ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசா இதை கவனித்து கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.
இதனால் உஷாரான கொள்ளையர் கும்பல் இறங்கி ஓடியது மேலும் காவல்துறை கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது கற்களை வீசிவிட்டு தப்பித்து ஓடினார்கள்.
இதனால் ரயில்வே போலீசார் பிடிக்க முடியாமல் திணறினார்கள் இதன்பிறகு இரண்டு ரயில்களும் புறப்பட்ட காவாலி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
அங்கு ரயில்வே போலீஸாரிடம் பயணிகள் கொள்ளை சம்பவ குறித்து புகார் அளித்தார்கள்,இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
சினிமா பாணியில் ரயிலை நிறுத்தி வைத்து கொள்ளை அடித்த கும்பல் முதல் முறையாக செய்துள்ளதால் ரயில்வே காவல்துறை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.
எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்
ஆசை வார்த்தை தெரிவித்து உடலுறவு கொண்ட பிறகு..!