IBPS clerk new job recruitment 2021 in tamil

IBPS clerk new job recruitment 2021 in tamil

வங்கி பணியாளர் தேர்வு வாரியம் தற்போது IBPS இந்தியா முழுவதும் 7,855 கிளர்க் வேலை காலிபணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இப்பொழுது வெளியிட்டுள்ளது.

இதற்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது IBPS இணையதளம் மூலம் என தெரிவித்துள்ளது.

கல்வித் தகுதி, வயது வரம்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தேர்வு செய்யும் முறை, அதிகாரப்பூர்வ இணையதளம், உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த கட்டுரையில் காணலாம்.

07/10/2021 முதல் 27/10/2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

IBPS clerk new job recruitment 2021 in tamil

IBPS வேலைவாய்ப்பை பற்றி முழு விவரம் 2021

இந்தியாவில் உள்ள அரசு வங்கி, தனியார் வங்கி, தனியார் நிதி துறை, உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து வேலைக்கு அமர்த்தும் பணியை வங்கி பணியாளர் தேர்வு வாரியம் ஆண்டுதோறும் செய்து வருகிறது.

இதற்காக இப்போது சுமார் 7,855 கிளார்க் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

IBPS clerk new job recruitment 2021 in tamil

பங்குபெறும் வங்கிகள் விவரங்கள்

பேங்க் ஆப் பரோடா (Bank of Baroda)

கனரா பேங்க் (Canara Bank)

இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் (Indian Overseas Bank)

யூகோ வங்கி (UCO Bank)

பேங்க் ஆப் இந்தியா (Bank of India)

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா (Central Bank of India)

பஞ்சாப் நேஷனல் பேங்க் (Punjab National Bank)

யூனியன் பாங்க் ஆப் இந்தியா (Union Bank of India)

பேங்க் ஆப் மகாராஷ்டிரா (Bank of Maharashtra)

இந்தியன் பேங்க் (Indian Bank)

பஞ்சாப் & சிந்த் வங்கி (Punjab and Sind Bank)

இதில் தமிழ்நாட்டிற்கு என 843 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை விண்ணப்பதாரர்கள் காணலாம்.

கல்வித்தகுதி

இந்த பணியிடத்திற்கு விருப்பமும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு துறையில் கட்டாயம் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும் .

ராணுவ வீரர்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருக்கும் விண்ணப்பதாரர்கள், உள்ளிட்ட அனைத்து நபர்களுக்கும் மத்திய, மாநில, அரசுகளால் கொடுக்கப்பட்டுள்ள வயது சலுகைகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை விண்ணப்பதாரர்கள் காணலாம்.

விண்ணப்ப கட்டணம்

பொதுப் பிரிவு மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.850/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இதனுடன் ஜிஎஸ்டி வரியும் சேர்க்கப்படும்.

SC/ST/PWBD/EXSM/Candidates விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இதனுடன் ஜிஎஸ்டி வரியும் சேர்க்கப்படும்.

சம்பள விவரம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 11,765 முதல் 42,020 வரை மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to view our YouTube channel

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு

ஆவணங்கள் சரிபார்ப்பு

நேர்காணல் முறையில்

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

How to start New E-Sevai Maiyam in Tamil 2021

விண்ணப்பிக்கும் முறை

https://www.ibps.in/ என்ற இணையதளம் மூலம் 27/10/2021 வரை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும் இதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

Leave a Comment