IBPS PO notification 2021 Quick Apply online
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking personnel selection) தற்போது இந்தியா முழுவதும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Probationary Officers / Management Trainees பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு விருப்பமும், தகுதியும்யுடைய, விண்ணப்பதாரர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது இணையதளம் மூலம்.
மொத்த 4135 காலிப்பணியிடங்கள் 20/10/2021 முதல் 10/11/2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியிடத்திற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை, அதிகாரப்பூர்வ இணையதளம், தேர்வு செய்யும் முறை, விண்ணப்பக் கட்டணம்,உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.
வங்கிப் பணியாளர் தேர்வு வேலைவாய்ப்பு 2021
இந்தியாவில் இருக்கும் அரசு வங்கி, பொதுத்துறை வங்கி, நிதி நிறுவனங்கள், மற்றும் தனியார் வங்கிகளுக்கு தேவையான மனித வள ஆற்றலை தேர்வுசெய்து வழங்குவது வங்கி பணியாளர் தேர்வு வாரியம்.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை இந்த வங்கி பணியாளர் தேர்வு வாரியம் உருவாக்கி வருகிறது, அதன்படி இப்பொழுது 4135 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் மத்திய, மாநில, அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு துறையில் கட்டாயம் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
10/11/2021 அன்றைய தேதியின் படி விண்ணப்பதாரர்களின் வயது குறைந்த பட்சம் 20 முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை விண்ணப்பதாரர்கள் காணலாம்.
காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ள வங்கிகள்
பேங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யுசிஓ வங்கி, பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, இந்தியன் வங்கி, பஞ்சாப் சிந்த் வங்கி. போன்ற வங்கிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
தேர்வு செய்யும் முறை
எழுத்துத் தேர்வு
நேர்காணல்முறை
ஆவணங்கள் சரிபார்ப்பு முறையில்
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், மேலும் எழுத்துத் தேர்வு பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
விண்ணப்ப கட்டணம்
SC/ST/PWBD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ175/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Click here to view our YouTube channel
மற்ற அனைத்துப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ 850/- செலுத்த வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் இணையதளம் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
Herbal bathing powder manufacturing new tips 2
விண்ணப்பிக்கும் முறை
20/11/2021 முதல் 10/11/2021 வரை https://ibps.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.