சென்னை வேலைவாய்ப்பு 2021 ஆம் ஆண்டு மாத சம்பளம் ரூபாய் 75,000.( ICF Chennai Job Notification Full Details 2021)
சென்னையில் செயல்படும் ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையிலிருந்து புதிய வேலைவாய்ப்பு வெளிவந்துள்ளது அந்த அறிவிப்பில் Housekeeping assistant, Nurse ,GDMO காலிபணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
மொத்த காலிப்பணியிடங்கள் 39 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்புக்கு கல்வித்தகுதி, சம்பள விவரம் ,வயதுவரம்பு, விண்ணப்பிக்கும்முறை, தேர்வு செய்யும் முறை, உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் காணலாம்.
ICF சென்னை வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம் 2021.

ICF சென்னை தொழிற்சாலையிலிருந்து பணிகளுக்கு 39 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ICF வயது வரம்பு.
Housekeeping assistant: பதவிகளுக்கான வயது வரம்பு 33
Nurse: பதவிகளுக்கான வயது வரம்பு 40
GDMO: பதவிகளுக்கான வயது வரம்பு 53
மேலும் இந்த பணியிடங்களுக்கு வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள சலுகைகளை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
ICF கல்வித்தகுதி.

மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களில் படித்திருக்க வேண்டும்.
Housekeeping assistant: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்
Nurse: GNM தேர்ச்சி அல்லது BSC, (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
GDMO: MBBS டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ICF சம்பள விவரம்.
இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 18,000 முதல் அதிகபட்சம் ரூபாய் 75,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICF தேர்வு செய்யும் முறை.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்கலையும் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு (Interview) நடத்தப்படும் மேலும் இதனைப் பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
ICF பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை.
இந்த பணியிடங்களுக்கு விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் 13/05/2021 தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஸ்புட்னிக் வி ஒற்றைத் தடுப்பூசி அறிமுகம் 80% நல்ல பலன் அளிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தகவல்களையும் நன்றாக படித்து பார்த்து பின்பு விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் ஏனென்றால் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப் படாமல் இருப்பதற்கு.
http://pbicf.in/doctor/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.