தமிழ்நாட்டில் ரூபாய் 78,000 சம்பளத்தில் மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது(IGCAR Technician Recruitment 2021 Last Date)
தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டது இந்த மத்திய அரசு பணிக்கு முதலில் மே மாதம் 14-ம் தேதிவரை கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான அவகாசம் இரண்டாவது முறை நீட்டிக்கப்பட்டுள்ளது இதுவரை விண்ணப்பிக்க தவறிய தகுதியான நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் கொரோனா 2ம் அலை மிகத் தீவிரமாக இருந்த காரணத்தால் மே மாதம் 10ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஜூன் மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது ஆனால் ஜூன் 7-ஆம் தேதி பிறகு ஒருவாரம் ஊரடங்கு சில தளர்வுகள்வுடன் நடைமுறையில் உள்ளது இதனால் மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கு இதுவரை விண்ணப்பிக்க முடியாமல் இருந்த நபர்களுக்கு இப்பொழுது விண்ணப்பிக்க எல்லா வேலைவாய்ப்பு தேதிகளிலும் தேதி மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள இந்த மத்திய அரசு பணிக்கு மொத்தம் 337 காலி பணியிடங்கள் உள்ளது இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் மேலும் வயதுவரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
கல்வி தகுதி பற்றி முழு விவரம்.
Scientific Officer E – Ph.D (Metallurgical Materials Engineering) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் பணி அனுபவம் 4 ஆண்டுகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
Technical Officer E– BE / B.Tech Chemical தேர்ச்சி பணி அனுபவம் 4 ஆண்டுகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
Scientific Officer D – Ph.D பட்டம் முடித்து இருக்க வேண்டும்.
Technical Officer C – BE / B.Tech / MSC / M.Tech விண்ணப்பதாரர்கள் இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Technician B – இந்த பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stenographer – இந்த பணியிடத்திற்கு கண்டிப்பாக 10ம் வகுப்பு 30 WPM in English typing அல்லது 80 WPM in English shorthand தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Upper Division Clerk – ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Driver – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் Driving Licence கண்டிப்பாக 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Security Guard and Work Assistant and Canteen Attendant – இந்தப் பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
Stipendiary Trainee I – Physics & Chemistry அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் கட்டாயம்.
Stipendiary Trainee II– 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு அல்லது ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 10,500 முதல் அதிகபட்சம் ரூபாய் 78,000 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள்
எழுத்துத் தேர்வு
ஆவணங்கள் சரிபார்ப்பு
நேர்காணல் முறையில்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
விண்ணப்ப கட்டணம்.
விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 100 முதல் 300 வரை.
British spies believe wuhan covid-19 lab leak
விண்ணப்பிக்கும் முறை.
விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் 30/06/2021 தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.