Important vitamins that protect the body 2022
உடலின் நலம் மற்றும் அழகை பாதுகாக்க கூடிய இரண்டு விதமான வைட்டமின்கள் உள்ளன ஒன்று கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றொன்று நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் என இரண்டு வகை உள்ளது.
உங்கள் உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும் மிகவும் அழகாக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் ஊட்டச்சத்து சார்ந்த தகவல்களை அதிக அளவில் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதாக அமையும்.
உங்களை சுற்றி அனைத்துவிதமான மகிழ்ச்சிகள் இருந்தாலும் உங்களுடைய உடல் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இல்லையென்றால் நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க முடியாது.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் நம்முடைய கலாச்சாரத்தில் இருக்கக்கூடிய மிகவும் பழமையான பழமொழி.
உடலை எப்போதும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள நீங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
அது மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் இருக்கக்கூடிய மக்கள் இரண்டு விதமான செயல்களுக்கு அதிக அளவில் தங்களுடைய பணத்தை செலவு செய்கிறார்க,ள் ஒன்று மருத்துவம் மற்றும் கல்வி.
கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள்
இந்த வைட்டமின்கள் உடலில் சேமித்து வைக்கப்படுகின்றன தேவைப்படும் பொழுது அவை உடல் பயன்படுத்தப்படுகிறது கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் A,D,E,K,ஆகியவை.
இளமையாகவும் முக சுருக்கங்களை தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது கண்களில் ஏற்படும் கருவளையம் இவை நீக்கிவிடுகிறது.
நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள்
விட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் சி ஆகியவை உடலால் சேமித்து வைக்க முடியாது, அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் வெளியேறிவிடும், இந்த வகை விட்டமின்கள் எவ்வாறு அழகை பாதுகாக்கிறது என்று பார்க்கலாம்.
வைட்டமின் B1 ஊட்டச்சத்து விவரம்
விட்டமின் B1 கொலாஜன் உற்பத்தியை அதிகமாக்கி முகத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்களை நீக்குகிறது.
இந்த விட்டமின்கள் சிவப்பு அரிசி, கோதுமை, சோயாபீன்ஸ், முந்திரிப்பருப்பு, ஓட்ஸ், திராட்சை பழம், சிவப்பு இறைச்சி, போன்றவற்றில்.
அதிகமாக இருக்கிறது எனவே இவ்வகை சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிடுவதால் சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள் மறைந்து விடும்.
வைட்டமின் B2 ஊட்டச்சத்து விவரம்
விட்டமின் B2 உடலில் புதிய செல்களையும், திசுக்களையும், உற்பத்தி செய்கிறது, இதனால் செல் இறப்பு விகிதம் குறைகிறது செல் இறப்பு விகிதம் குறைந்தால் அழகனாதோற்றமுடைய சருமம் கிடைத்துவிடும்.
இந்த வைட்டமின்கள் அதிக அளவில் கல்லீரல், இறைச்சி, முட்டை, பால், தானியங்கள், பச்சை காய்கறிகள், கீரைகளில்,கிடைக்கிறது.
வைட்டமின் B5 ஊட்டச்சத்து விவரம்
உடல் பருமனை குறைக்க வைட்டமின் B5 உணவுகளை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் மேலும் அவை முகத்தில் பருக்கள் வராமல் இருக்க உதவுகிறது.
புரோட்டீனை அதிகரிக்க செய்கிறது, இந்த வைட்டமின் ஊட்டச்சத்து அதிக அளவில் மக்காச்சோளம், முட்டை, சீஸ், தக்காளியில் இருக்கிறது.
நியாசின் என்ற விட்டமின்B3 ஊட்டச்சத்து
விட்டமின் பி3 வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது அதனால் முறையான நச்சுக்கள் மற்றும் கழிவுகள் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது, அதிக அளவில்கோதுமை, சிவப்பு அரிசி, கோழி இறைச்சி, மீன்களில்,கிடைக்கிறது.
போலிக் அமிலம் என்ற வைட்டமின் B9 ஊட்டச்சத்து
ரத்த சோகை மற்றும் இளநரையை தடுக்கும் விட்டமின் இது கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும், இந்த வைட்டமின்கள் பசலைக்கீரை, ஆரஞ்சு ஜூஸ், கருஞ்சீரகம், போன்றவற்றில் கிடைக்கிறது.
இயற்கையான முறையில் ஹேர் டை தயாரிப்பது எப்படி
வைட்டமின் சி ஊட்டச்சத்து விவரம்
வைட்டமின்-சி முகசுருக்கங்களை தடுக்கும், முகப்பரு, கருமையை நீக்கும், இறந்த செல்களை வெளியேற்றும், கண்களுக்கு அழகைத் தரும், இளமையாக வைத்திருக்கும், சருமத்தில் வெள்ளை நிறத்தை ஏற்படுத்தும்.
The Best Benefits of Vitamin C Nutrition 2022
இந்த ஊட்டச்சத்து சிட்ரஸ் பழம், வெள்ளரிக்காய், எலுமிச்சை பழம், ஆரஞ்சு பழம், ஆகியவற்றில் நிறைந்துள்ளது.