Incredible Benefits of Eating Tuna Fish 2021

சூரை மீன் சாப்பிடுவதால் உடலில் ஏற்படக்கூடிய நம்பமுடியாத  நன்மைகள்.( Incredible Benefits of Eating Tuna Fish 2021)

சூரை மீன் ஒரு தனித்துவமான சுவை கொண்ட பிரபலமான உப்பு நீர் மீன். ஒமேகா-3 போன்ற  அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மீனாக உள்ளது.

இதனை சாப்பிடுவதால் அழகான தோல் முதல் இருதயம் ஆரோக்கியம் வரை பல நன்மைகள் கிடைக்கும். இது ஆசியா உணவு வகைகளிலும் ஆஸ்திரேலியா மற்றும் பிற ஐரோப்பிய கண்டங்களிலும் பரவலாக இந்த மீன் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது.

சூரை மீன்களில் பலதரப்பட்ட மாறுபட்ட இனங்கள் உள்ளது. நீல துடுப்பு, மஞ்சள் துடுப்பு, மற்றும் புல்லட் துடுப்பு போன்ற இணங்களில் உள்ளது.

சூரை மீன்கள் ஆயுட்காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை மாறுபடும். சூரை மீன்கள் பொறுத்தவரை பிடிப்பதற்கு எளிதானது.

சூரை மீன்கள் நாடோடிகள் அதாவது இவைகள் வருடம் முழுவதும் இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும். அவை அட்லாண்டிக் பெருங்கடலில் மிதமான மற்றும் வெப்ப மண்டல நீர், கருப்பு நீர் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் எளிதாக காணப்படுகிறது.

உலகின் அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகமாக காணப்படும் மேலும் இவை உலகில் அதிகமாக வேட்டையாடப் படுவதால் ஆபத்தான உயிரின பட்டியலில் சூரை மீன் பெயரை சேர்த்துள்ளார்கள்.

சூரை மீன் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள்.

 Incredible Benefits of Eating Tuna Fish 2021
Tuna Meat

இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து உள்ளதால் இது ரத்த நாளங்களில் சமநிலை கொண்டு வர உதவுகிறது. இதனால் இருதய தமனிகளில் உள்ள கொழுப்பு குறைகிறது எனவே  இருதயம் ஆரோக்கியமாக செயல்பட்டு உடல் முழுவதும் ரத்தத்தை சமமாக அனுப்ப முடிகிறது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்  இருதயத்தில் ஏற்படும் அலர்ஜி விளைவுகளை கட்டுப்படுத்துகிறது இதனால் ரத்த அழுத்தம் ,பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஆகிய வகைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.

நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது சூரை மீனில் துத்தநாகம் வைட்டமின் டி மற்றும் செலினியம் நிறைந்துள்ளது இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

சூரை மீனில் கொழுப்புச் சத்துக்கள் குறைவாகவும் மற்றும் புரதச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் இதனை உணவில் எடுத்துக்கொள்வதால் உடல் எடை என்பது சரியாக பராமரிக்கப்படும்.

நமது உடலில் வைட்டமின் பி எலும்புகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. சூரை மீனில் அதிக அளவு வைட்டமின் பி இருப்பதால் எலும்பு முறிவு போன்ற விடயங்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

 Incredible Benefits of Eating Tuna Fish 2021
Tuna Fish

எலாஸ்டின் என்ற புரதம் உள்ளது இது நம் சருமத்தை மென்மையாக வைத்திருக்கிறது.  உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த நீங்கள் விரும்பினால் அதிகளவில் சூறை மீன் அல்லது ஒமேகா-3 சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளை தேர்ந்தெடுங்கள்.

சிறந்த முடி வளர்ச்சிக்கு நீங்கள் எடுக்க வேண்டிய 5 விட்டமின்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

புற்றுநோயின் ஆபத்தை தடுக்கிறது சூரை மீன் இறைச்சியில் இருந்து வரும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுகிறது.

இதனால் மார்பக புற்று நோய் மற்றும் சிறுநீரக புற்று நோய்  ஏற்படாமல் தடுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது மேலும் உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதால் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

top 10 protein foods increasing body weight

உங்கள் உடலை உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது இது தவிர உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

              Telegram group           Click Here
                   YouTube           Click Here

Leave a Comment