India at top 5 position economics useful tips
உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா..!
அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது குறித்து சில பொருளாதார வல்லுநர்கள் முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்று 8 ஆண்டுகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது மிகவும் அபாரமாக இருக்கிறது.
2012ஆம் ஆண்டு இந்தியா பொருளாதார வளர்ச்சியில் உலக அளவில் 12ஆம் இடத்தில் இருந்தது, ஆனால் 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது உலகில் முதல் 5 இடங்களில் உள்ளது.
இரண்டு ஆண்டுகளாக உலகை பாடாய்படுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையாக உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
இதில் இந்தியாவும் அடங்கும் ஆனால் இப்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது
சமீபத்தில்தான் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி உலகில் 5ம் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் வரும் காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் எப்படி இருக்கும் என பொருளாதார வல்லுனர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.
அதாவது 2030ஆம் ஆண்டில் இந்தியா சர்வதேச அளவில் 3வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.
இதற்கு முக்கியமான காரணம் நமது வெளியுறவுக் கொள்கை சிறப்பாக செயல்படுகிறதுஅதுமட்டுமில்லாமல் மற்ற நாடுகளை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதைப் பொருத்தும் இருக்கிறது என தெரிவித்துள்ளார்கள்.
அசுர வேகத்தில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி
India at top 5 position economics useful tips இந்த ஆண்டு இந்தியா 40 லட்சம் கோடி ரூபாய்க்கான பொருட்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்தது.
இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பை அதிகரிக்கக்கூடும்.
கடந்த 20 முதல் 30 ஆண்டுகளில் நாம் சீனாவை விட மிகவும் பின்தங்கி இருந்தோம் ஆனால் இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது நாம் பிரிட்டனின் பொருளாதாரத்தை மிஞ்சி விட்டோம்.
அமெரிக்கா சீனா, ஜப்பான், ஜெர்மனி, அடுத்ததாக இந்தியா இனி வரும் நாட்களில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது படுவேகத்தில் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
India at top 5 position economics useful tips எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது மிகவும் சிறப்பாக இருக்கிறது.
ஐநா சபையில் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்பொழுது இந்தியாவிற்கு தனி மரியாதை உள்ளது, பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு எந்த ஒரு கொள்கை கொண்டு வந்தாலும் ஆதரவை தருகிறது.