3வது அலை முடிவுக்கு வருகிறதா விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் தெரிவிப்பது என்ன(India coronavirus 3rd wave details release)
உலகில் 70 % மக்களுக்கு தடுப்பூசி போட்டு இருக்கும் பொழுது நிச்சயம் மீண்டும் பழைய இயல்பு வாழ்க்கை திரும்பும் அது எப்படியும் வருகின்ற 2022 இறுதிக்குள் நடக்கும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 4 மாதத்திற்கு முன்பு இருந்த இக்கட்டான சூழ்நிலை இப்போது இல்லை மத்திய அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கட்டுப்பாடுகள் என ஒவ்வொரு விஷயத்திலும் மத்திய மாநில அரசுகள் இப்பொழுது மிக விழிப்புடன் இருக்கிறது.
இப்பொழுது இந்தியாவில் நோய்த்தொற்று 2வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனாலும் நிச்சயம் 3வது அலை வரக்கூடும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகள் எச்சரித்து வருகிறார்கள்.
பாதிப்பு நிலவரம்
இப்பொழுது உள்ள பாதிப்பில் வரும் அக்டோபர் மாதம் இதுவரை இல்லாத அளவிற்கு நாட்டில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை அடையும் என்கிறார்கள் வல்லுனர்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார்.
தொற்று பரவலை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது கொரோனா தொற்றின் மூலம் 2வது அலைகளில் அவ்வளவாக பாதிக்கப்படாத பகுதிகள் மற்றும் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டுடோர் பகுதிகளில் அடுத்த சில மாதங்களில் 3வது அலை பரவ அதிக வாய்ப்புள்ளது.
தடுப்பூசி திட்டம்
அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகில் சுமார் 70 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்பு மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு உலகம் திரும்ப வாய்ப்புள்ளது.
3வது அலைபரவும்போது சிறுவர்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப் படலாம் ஆனால் அது குறித்து கவலைப்படத் தேவையில்லை ஏனெனில் 18 வயதைக் கடந்தவர்கள் உடன் ஒப்பிடும்போது குழந்தைகளுக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகமாகவே உள்ளது.
பெரியவர்களுடன் ஒப்பிடும் போது மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலே குழந்தைகள் உயிரிழந்துள்ளார்கள். இருந்தாலும் குழந்தைகளைச் சேர்க்கும் பிரிவுகளில் குழந்தைகளுக்கு ICU மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கவேண்டும்.
கடந்த மாதங்களில் போல் இப்பொழுது கொரோனா பரவும் நிலை இல்லை மெதுவாகவும், இது ஒரு மகிழ்ச்சியான செய்தி என்று சொல்லலாம். அன்றாட பாதிப்பு எண்ணிக்கை 25,000 கீழ் சென்றுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை அதன் பரப்பளவு மற்றும் பல்வேறு வகையான மக்களால் நோய் எதிர்ப்பு திறன் அளவில் மாறுபட்டு உள்ளது.
Click here to view our YouTube channel
எனவே வைரஸ் பாதிப்பு ஏற்றத்தாழ்வுகளும் தொடரலாம் நாட்டில் கொரோனா நோய்தொற்று இனி எப்போதும் இதுபோல் சிறுசிறு ஏற்ற இறக்கங்களை மட்டுமே கண்டு விட்டு நிரந்தரமாக இருக்கும் சூழலை எண்டமிக் என்பார்கள்.
What are the 5 symptoms of colorectal cancer
எந்த பகுதியில் எல்லாம் முதல் 2 அலைகளில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை, எங்கெல்லாம் தடுப்பூசி செலுத்தவில்லை அங்கெல்லாம் 3வது அலை தாக்கம் அதிகமாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.