India new nozzle spray for covid 19 Vaccine
மூக்கின் வழியே செலுத்தினால் போதும் புதிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளது..!
இந்தியாவில் மூக்கின் வெளியே செலுத்தும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இந்த மருந்து குறித்து பல்வேறு முக்கிய அம்சங்கள் இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தற்போது வரை உலகம் முழுவதும் 3 அலைகளாக தாக்கியுள்ளது தற்போது அனைத்து மாநிலங்களிலும் பாதிப்பு குறைந்து வந்தாலும்.
அவ்வப்போது பலி எண்ணிக்கை மற்றும் குறிப்பிட்ட சில பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது இது ஒரு வருத்தமான ஒரு விஷயமாக இப்பொழுது மாறியுள்ளது.
செயல்பாட்டில் உள்ள தடுப்பூசிகள்
கொரோனா வைரஸ்க்கு எதிராக கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி, உள்பட பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த ஸ்ரீராம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியும்.
இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது, இதுவரை இந்தியாவில் 170.9 கோடி டோஸ் தடுப்பு ஊசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து
இந்தநிலையில் கொரோனா வைரஸை அழிக்கும் வகையில் புதிய மூக்கின் வழியாக செலுத்தும் தடுப்பு மருந்தை மும்பையை சேர்ந்த கிளையின்மார்க் நிறுவனம் கனடாவின் சானோடைஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த மருந்தை கொரோனா வைரஸ் பாதித்த 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தலாம் இது இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்ய.
இந்திய பொது மருந்து கட்டுப்பாடு மற்றும் முறைப்படுத்துதல் ஜெனரலிடம் இருந்து இந்த நிறுவனத்திற்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளது.
இந்த மருந்தின் சிறப்பு என்ன
இந்த மருந்து தொடர்பான முக்கிய அம்சங்கள் பின்வருமாறு நைட்ரிக் ஆக்சைடு நசல் ஸ்பிரே என இந்த மருந்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மருந்து பாபி ஸ்பிரே என விற்பனை செய்யப்பட இருக்கிறது மூக்கின் வழியே மருந்து செலுத்திய பின் உடலில் கரோனா வைரசுக்கு எதிரான ரசாயன மாற்றங்கள் உருவாக்கும்.
மேலும் சுவாசப் பாதையின் துவக்கத்தில் கரோனா வைரஸ்சை அழிக்கும் இதன் மூலம் நுரையீரலுக்கு வைரஸ் செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டு விடும்.
இதற்கான சரியான ஆதாரம் இல்லை
இருப்பினும் அந்த நிறுவனம் புதிய மருந்து தொடர்பான எந்த பரிசோதனை முடிவுகளின் ஆதாரங்களையும் இன்னும் வெளிப்படையாக வெளியிடவில்லை.
ஆனால் அதற்குள் ஐரோப்பிய யூனியனில் மருந்துக்கான CE குறியீடு வழங்கப்பட்டுள்ளது, இது மருந்து விற்பனை செய்வதற்கான ஒரு முக்கியமான அங்கீகாரமாகும்.
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து விவரங்கள்.
இதுதவிர பக்ரைன், இஸ்ரேல், போன்ற நாடுகளிலும் இந்த மருந்து விற்பனை செய்யப்பட உள்ளது.
99 சதவீதம் பாதுகாக்கும்
மருந்து குறித்து அந்த நிறுவனம் தெரிவிக்கையில் நைட்ரிக் ஆக்சைடு நசல் ஸ்பிரே மருந்தின் 3ம் கட்ட பரிசோதனை முடிவுகள் ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது.
Coir mat business full details in tamil 2022
24 மணி நேரத்தில் கொரோனா வைரஸின் சுமார் 94 சதவீதத்தையும் 48 மணிநேரத்தில் 99% அழித்துவிடுகிறது, இந்த மருந்து கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு மிகவும் பாதுகாப்பான மருந்து என அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.