indian Ayush Best food list COVID-19 against
மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள உணவு பரிந்துரைகள்.( indian Ayush Best food list COVID-19 against)
கொரோனா வைரஸ் வராமல் இருப்பதற்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க.
நடைமுறையில் உள்ள வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் மேலும் கொரோனா வைரஸ் பாதிப்புஏற்படாமல் இருப்பதற்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.
வீட்டில் இருப்பவர்கள் ஆயுர்வேத மூலிகை சாறுகள் மற்றும் யோகப்பயிற்சிகள் ,மூச்சு பயிற்சிகள் செய்து உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படத்தலாம்.
இது தொடர்பான விளக்கம் ஒன்றை மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது அதில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ளுவதற்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வழிமுறிகளை வெளிட்டுள்ளது.
இந்த வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
வெதுவெதுப்பான நீரை அடிக்கடி குடிக்க வேண்டும்.
உங்கள் அன்றாட உணவில் மஞ்சள், கொத்தமல்லி, சீரகம், இஞ்சி மற்றும் பூண்டு போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினந்தோறும் நெல்லிக்காய் மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.
சூடான உப்பு நீரில் மஞ்சள் தூள் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவை வைத்துகொள்ளுகள் அவை எளிதில் ஜீரணமாகக் கூடிய தாக இருக்க வேண்டும்.
தினந்தோறும் குறைந்தது 30 நிமிடங்கள் யோகா, பிராணாயாமா தியானம் ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது.
குறைந்தது ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் இரவில் தூங்க வேண்டும் இதனால் உங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலம் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்கும்.
பகலில் தூங்குவதை தவிர்த்துவிடுங்கள்.
ஆயுர்வேத முறையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த.
காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் நாசி பகுதியில் தேங்காய் எண்ணெய் எள் எண்ணெய் அல்லது பசுநெய் இதில் ஏதாவது ஒன்றை தடவிக் கொள்ளுங்கள்.
மஞ்சள் கலந்த பாலை தினமும் ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்கலாம் அல்லது அஸ்வகந்தா மாத்திரை 500 MG ஆகியவற்றை உணவுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது மூலிகை டீ எடுத்துக் கொள்ளலாம் அதாவது 4 துளசி இலையை, 2 இலவங்கப்பட்டை, 2 இஞ்சி பட்டை, மிளகு சிறிதளவு ஆகியவற்றின் மூலம் வீட்டிலேயே மூலிகை டீ தயாரித்து குடிக்கலாம் தேவையான அளவு சர்க்கரை வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம்.
ஆயில் புல்லிங் தெரபி சிகிச்சை செய்யலாம். ஒரு டீ ஸ்பூன் எள் தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் வாயில் ஊற்றி குடிக்கக்கூடாது மூன்று நிமிடங்களுக்குமேல் தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும் பின்னர் சூடான நீரில் வாயை சுத்தம் செய்ய வேண்டும் தினமும் இருமுறை செய்யலாம்.
வறட்டு இருமல் மற்றும் தொண்டை புண் குணமாக.
தினந்தோறும் சூடான நீரில் புதினா இலை, கற்பூரம், கேரவே விதைகள் ஆகியவற்றை கொண்டு நீராவி பிடிக்க வேண்டும்.
நாள் ஒன்றுக்கு குறைந்தது 3 முறை எடுத்துக் கொள்ளுங்கள் சர்க்கரை, தேனுடன் கலந்த கிராம்பு ஆகியவற்றை தொண்டை எரிச்சல் இருந்தால் மட்டுமே.
மேற்கூறிய அனைத்து வழிமுறைகளும் சாதாரண வரட்டு இருமல் மற்றும் தொண்டை புண்ளுக்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது பிரச்சினை தீவிரமாக இருந்தால் உடனடியாக அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளை தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் தூக்கத்தை மேம்படுத்த உதவும் முதல் உணவுகள்.
How vegetarians can add Best protein 5 foods.