Indian covid-19 vaccine niti ayog full details
இந்தியாவில் இந்த ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் நிதி ஆயோக் (Indian covid-19 vaccine niti ayog full details)
எந்த ஒரு நோயாக இருந்தாலும் அல்லது வைரஸ்யாக இருந்தாலும் அதற்கு அதிக அளவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் மையமாக இந்தியா உள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் 2ம் அலையில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது இதனை தடுப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி மட்டுமே இதுவரை இந்தியாவில் 179,298,584 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2ம் அலையின் தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது புதிய உருமாற்றம் அடைந்த இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவினால் இந்த உலகத்திற்கு ஆபத்தாக மாறக்கூடும் என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் இந்த வைரஸசை இந்திய அரசு கட்டுப்படுத்த தவறினால் வரும் காலங்களில் இந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து தடுப்பூசிகள் கூட பயனற்றுப் போய்விடும் என்று பல்வேறு அறிக்கைகளை உலக சுகாதார மையம் வழங்கியுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அனைத்து மக்களுக்கும் இந்த ஆண்டிற்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே.பாஸ் தெரிவித்துள்ளார் வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் 216 கோடி தடுப்பூசி கிடைக்கும் என அவர்தெரிவித்தார்.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசி கோவிஷீல்ட் 75 கோடி டோஸ்களும் கோவாக்சின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியே செலுத்தும் மருந்துகளை 10கோடி தயார் செய்யவும் திட்டமிட்டு வருவதாக அவர் கூறினார்.
பயாலஜிக்கல் -இ-நிறுவனம் 30 கோடி டோஸ்களும் கேடில நிறுவனம் 5 கோடி டோஸ்களும் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது ஜெனோவா நிறுவனம் 6 கோடி டோஸ்களும் ரஷ்யாவின் தடுப்பூசி ஸ்புட்னிக் வி15 தயாரிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பாதுகாப்பு மேம்பாட்டு மையம் அறிவித்துள்ள பவுடர் வடிவிலான மருந்து அடுத்த மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்கள்.
இந்த கொரோனா நோயை முற்றிலும் உலகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு உலகில் உள்ள முன்னணி நிறுவனங்களும் விஞ்ஞானிகளும் பல்வேறு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள்.
தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டம் அட்டை பெறுவது எப்படி?
கடந்த 15 மாதங்களாக உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் இந்த நோய் பரவியுள்ளது இதனால் மக்களின் பொருளாதாரம் பெரும் பாதிக்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டு அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், இத்தாலி, சீனா, பிரேசில், போன்ற சக்தி வாய்ந்த நாடுகள் இந்த கொரோனா வைரஸ்யால் பாதிக்கப்பட்டன அப்பொழுது இந்தியா மட்டுமே உலகில் உள்ள பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு மருந்துகளை அதிக அளவில் அனுப்பி உதவி செய்து கொண்டிருந்தது.
இந்த ஆண்டு இந்தியா மட்டும் கொரோனா வைரஸ் பிடியில் மாட்டிக்கொண்டு உள்ளது ஆனால் கூடிய விரைவில் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தி மக்களின் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.