மத்திய அரசின் இந்தத் திட்டத்தில் உங்களுக்கு 10,000 ரூபாய் கிடைக்கும்.!!!(Indian government announced amazing scheme2020)
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலை இழந்துள்ளார்கள் மற்றும் சிறு குறு வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டம் மூலம் உங்களுக்கு எளிதாக 10,000 ரூபாய் கடன் உதவி கிடைக்கும்.
ஊரடங்கு படிப்படியாக தளர்வுகள் செய்யப்பட்டாலும் அதில் பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டதால் கடுமையாக நடைபாதை வியாபாரிகள் பாதிக்கப்பட்டார்கள்.
இந்த வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் வேகத்தை அதிகரிக்க ஏழை-எளிய தொழிலாளர்களுக்கு தெருவோர வியாபாரிகள், குறு வணிக நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. அதன் வகையில் மத்திய அரசின் ஸ்வநிதி யோஜனா திட்டம் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
மத்திய அரசின் ஸ்வநிதி யோஜனா திட்டம்.
இந்த திட்டம் நடைபாதை வியாபாரிகள் அல்லது சிறு வியாபாரிகளுக்கு கொண்டுவரப்பட்டது இவர்களுக்கு பொருளாதார நடவடிக்கைகளில் புதிய உத்வேகம் அளிப்பதை மத்திய அரசு இந்த திட்டம் மூலம் உறுதி செய்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் 10,000 ரூபாய் பெற்று உங்கள் சொந்த தொழிலை தொடங்கலாம் பொருளாதார கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இந்த வகையான தொழில் தொடங்க ஆரம்ப முதலீடு 10,000 போதுமானது எனவே இந்த திட்டத்தில் நீங்கள் 10,000 ரூபாய் பெற முடியும்.
இதுவரை இந்த திட்டத்தில் 27,33,497 பேர் விண்ணப்பித்துள்ளனர். மற்றும் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன 7 லட்சத்துக்கும் மேற்பட்ட கடன்கள் தேவைப்படுபவர்கள் இடையே கடன் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிக்க படுவது.
இந்தத் திட்டத்தில் நீங்கள் எளிதாக இணையலாம் மற்றும் நீங்கள் நடைப்பாதை வியாபாரியாக இருந்தால் அதற்கான அடையாள அட்டை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் உங்கள் தொலைபேசியில் கூகிள் பிளே ஸ்டோரில் சென்று SVANindhi மொபைல் ஆப் பை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் நன்மைகள் தமிழில் 2020.
www.pmsvanidhi.mohua.gov.in என்ற இணையதளம் மூலம் இந்த திட்டம் பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். மேலும் இந்த வலைத்தளத்தை நீங்கள் பார்வையிட்ட பிறகு உங்களிடம் உங்கள் வணிகம் பற்றி சில தகவல்கள் கேட்கப்படும் அதனை பூர்த்தி செய்த பிறகு இந்த திட்டத்தை பயன்படுத்த நீங்கள் தகுதித் பெறுவீர்கள். மற்றும் உங்கள் தொலைபேசி எண்ணை உங்கள் ஆதார் அட்டையுடன் கண்டிப்பாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த வலைதளத்தை தொடர்ந்து பார்வையிடலாம்.