இந்திய அரசால் கொண்டுவரப்பட்ட சிறந்த திட்டங்கள்Indian government in5 best project for peoples
இந்தியா அரசால் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் உங்கள் குடும்பம் மற்றும் தொழிலை நிச்சயம் பாதுகாக்கும்.
அரசு கொண்டுவந்துள்ள சிறந்த திட்டங்கள் பெரும்பாலும் மக்களைச் சென்றடைவதில்லை பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் நேரத்தில் மக்கள் தங்கள் வேலை மற்றும் பணத்தை இழக்க நேரிடுகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு கொண்டுவந்த இந்த திட்டத்தின் மூலம் தொழில்துறை, பெண் குழந்தை, இளைஞர்கள் மற்றும் விபத்து காப்பீடு போன்ற அனைத்தும் மக்களுக்காக பாதுகாக்கப்படுகிறது
பிரதான் மந்திரி முன் யோஜனா
இந்தியாவில் தொழில்துறையை ஊக்குவிக்கும் விதமாக நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு சுயத்தொழில் தொடங்க மற்றும் வேலைவாய்ப்பினை அதிகரிக்க இந்த திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 8 தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் கொண்டுவரப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் குறுந்தொழில் முனைவோர் தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்ளவும் வங்கிக்கடன் மானியத்துடன் வழங்கப்படுகிறது.
தருண் திட்டத்தின் மூலம் 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை குறுந்தொழில் முனைவோர் வங்கியில் கடன் பெறலாம்.
கிஷோர் திட்டத்தின் மூலம் 50,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வங்கியில் கடன் வழங்கப்படுகிறது. மற்றும் சிசு திட்டத்தின் மூலம் குறைந்ததாக 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.
தேசிய சுகாதார காப்பீடு திட்டம் (RSBY)
ஆண்டுதோறும் இந்தியாவில் மருத்துவமனைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது மற்றும் உடல் உறுப்பு செயலிழப்பு இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்திய மக்கள் அதிகமாக மருத்துவமனைகளுக்கு தங்களின் சேமிப்பு பணத்தை செலவு செய்கிறார்கள் இதனை கருத்தில் கொண்டு இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் நடுத்தரக் குடும்பம் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு பெரும் உதவி புரிகிறது.
இந்தியா அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சரகம் தேசிய சுகாதார காப்பீட்டு திட்டத்தை தொடங்கியது. இந்தத் திட்டத்தின் மூலம் ரூபாய் 30,000 வரை காப்பீடு கிடைக்கிறது. மருத்துவமனை கட்டணத்தை அரசே நிர்ணயித்துள்ளது பெரும்பாலான சிகிச்சைகளுக்கு.
குடும்பத் தலைவன், தலைவி அவர்களை சார்ந்த மூன்று நபர்கள் மொத்தம் ஐந்து பேருக்கு காப்பீடு வழங்கப்படுகிறது. பயனாளிகளின் பதிவு கட்டணம் மற்றும் புதுப்பிப்பு கட்டணம் ஆண்டிற்கு 30 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை நிர்வகிப்பதற்கான நிர்வாக மற்றும் பிற தொடர்புடைய செலவுகளை அந்தந்த மாநில அரசுகள் ஏற்கும்.
இந்தத் திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு அரசால் வழங்கப்படுகிறது.
தேசிய சமூக உதவி திட்டம்
தேசிய சமூக உதவி திட்டம் திட்டத்தின் மூலம் முதியோர், கணவனை இழந்த பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 3கோடி அதிகமானவர்களுக்கு அரசு நேரடியாக மானிய மாற்றத்தை விரிவுபடுத்த உறுதிசெய்துள்ளது.
இறப்புக்கு 5000 மானியம் மற்றும் இயற்கையான இறப்பு அல்லது தற்செயலாக ஏற்படும் இறப்புக்கு ரூபாய் 10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் அனைவரின் விவரங்களையும் கணினி மயமாக்கப் பட்டுள்ளன.
இந்த திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://nsap.nic.in/nsap/aboutus.pdf
செல்வமகள் சேமிப்பு திட்டம்.
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்ய இந்திய அரசின் மூலம் கொண்டுவரப்பட்டது. பெண் குழந்தை இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும், 10 வயதுக்குள் மற்றும் ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் நிதி வைக்க வேண்டும் மற்றும் அதே வருடத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை டெபாசிட் கொள்ள வழிவகை செய்துள்ளது இந்திய அரசு.
தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைகள்
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து 21 ஆண்டுகள் பெண் குழந்தைகளுக்கு செயல்படும்.twitter
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு தனது தேர்தல் அறிக்கையில் நாட்டிலுள்ள ஏழைகளுக்கு இலவசமாக வங்கி கணக்கு தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி அவர் ஆட்சிக்கு வந்தவுடன் சுமார் ஏழரை கோடி மக்களுக்கு இலவசமாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டது, பொதுவாக இந்த வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை, இதற்கு ஆதார் கார்டு மட்டும் பயன்படுத்தப்பட்டது. வங்கி கணக்கு தொடங்கப்பட்ட நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு செய்யப்பட்டது.