நீங்கள் மாத சம்பளம் வாங்குபவரா வருகின்ற ஏப்ரல் 1 புதிய விதி அமலுக்கு வருகிறது கவனமாக இருங்கள்.( Indian govt Pf new rules 2021 in Tamil)
இந்தியாவில் இருக்கும் ஊழியர்கள் தங்களின் ஓய்வூதியத்திற்கு அல்லது வருங்கால நலன்கருதி சேமிக்க கருதப்படும் ஒரு திட்டம் வருங்கால வைப்பு நிதியாகும்.
அரசாங்கம் கொண்டு வந்த இந்த திட்டத்தின் மூலம் ஊழியர்களின் நலன் கருதி ஊழியர்களும் நிறுவனமும் கணிசமான ஒரு தொகையை இந்த திட்டத்தில் பங்களிக்க செய்கின்றன.
இந்த திட்டத்தில் வரிச்சலுகை இருப்பதால் ஊழியர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் பணத்தை சேமித்து வைக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
புதிய விதியை அமல் படுத்தியது மத்திய அரசு.
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் வருங்கால வைப்பு நிதிக்கு வரி சலுகை இனிமேல் அளிக்கப்படாத என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இது வருடத்திற்கு 2.5 ரூபாய்க்கு மேல் சேமிக்கக் கூடிய நபர்களுக்கு பொருந்தும்.
புதிய விதிமுறைகளால் எத்தகைய பாதிப்பு ஏற்படும்.
அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளால் அதிகமாக சம்பளம் வாங்கப்படும் நபர்கள் வரியை கட்டாயம் கட்டக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
பெரும்பான்மையான ஊழியர்கள் இந்த திட்டம் மூலம் வட்டி விகிதம் அதிகம் மற்றும் வரி சலுகை இருப்பதால் அதிகமாக சேமித்தார்கள் புதிய விதிமுறை அமல் படுத்துவதால் வருங்காலங்களில் சேமிக்கக்கூடிய தொகையின் மதிப்பு குறையலாம்.
ஓய்வூதிய தொகை குறையும்.
இந்த திட்டம் அமலுக்கு வந்தால் ஊழியர்கள் சேமிக்கும் பணத்திற்கு வரி கட்டாயம் கட்டியாக வேண்டும்.
ஒரு நபர் தொடர்ந்து இந்த திட்டத்தில் பணத்தைச் சேமிக்கத் தொடங்கினால் ஓய்வு பெறும் போது கட்டாயம் வரி காட்டியாக வேண்டும்.
எப்படி இருந்தாலும் கண்டிப்பாக ஓய்வூதியத் தொகையில் ஒரு தொகையை வரியாகச் செலுத்த கூடிய நிலைமை ஊழியர்களுக்கு ஏற்படும்.
உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் முறையில் எப்படி டவுன்லோட் செய்வது.
வரியை எப்படி குறைக்கலாம்.
ஒரு ஊழியரின் ஓய்வூதிய தொகை அதிகரிக்க அதிகரிக்க வருங்கால வைப்பு நிதி தொகை அதிகரிக்கும் கூடவே வரித் தொகை அதிகரிக்கும் ஆகவே இதனை கருத்தில் கொண்டு ஊழியர்கள் தங்களின் முதலீட்டு திட்டங்களை மாற்றலாம்.
அரசின் இந்த திட்டம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது பெரிய தொகையாக சம்பளம் வாங்கும் நபர்கள் வருடத்திற்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருங்கால வைப்பு நிதி வைக்கிறார்கள்.
173,608 மேல் மாதத்திற்கு அடிப்படை சம்பளம் வாங்கும் நபர்களுக்கு இது பொருந்தும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் டுவிட்டர் பக்கத்தை லைக் செய்யுங்கள்.
ஊழியர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
ஒருவரின் அடிப்படை சம்பளம் 173,608 குறைவாக இருந்தாலும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு செய்தாள் அவர்களின் மொத்த பங்களிப்பு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் மட்டுமே இந்தப் புதிய நடைமுறை அவர்களை பாதிக்கும் எனவே ஊழியர்கள் கவனமுடன் செயல்படுவது நன்றாக அமையும்.