Indian Penal Code 420 Amazing Full Details
இந்திய தண்டனைச் சட்டம் 420 ஐபிசி முழு விவரங்கள் தெரிந்துக் கொள்ளுங்கள்..!
நம் பாரத நாட்டில் இருக்கும் சட்டம் என்பது ஒரு அகிம்சை சார்ந்த சட்டமாகும், இதனால் சில நேரங்களில் பல்வேறு நன்மைகளும், சில நேரங்களில் அதிகப்படியான பிரச்சனைகளும் சந்திக்க வேண்டிய சூழ்நிலைகளில் மக்கள் இருக்கிறார்கள்.
நம் நாட்டில் இருக்கும் சட்டங்களை பற்றிய நீங்கள் முழுமையாக தெரிந்து கொண்டால், எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கலாம்.
உங்கள் வாழ்க்கையில் திடீரென்று நிகழும் அசம்பாவிதம் அல்லது ஏதோ ஒரு தீய செயல்களுக்கு நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் சட்டத்தில் அதனை எளிமையாக தீர்க்கலாம்.
கட்டாயம் சட்டத்தைப் பற்றி ஒரு நாட்டில் இருக்கும் குடிமக்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும்,இதனை பற்றி முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ள, நம்முடைய இணைய தளத்தை தொடர்ந்து பின்பற்றலாம்.
சட்டம் என்பது ஒரு நிறுவன அமைப்பு முறையால், அந்த நிறுவன ஆளுகை எல்லைக்குள், வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் ஒரு விதி என்று சொல்லலாம்.
இவ்வாறான ஒழுங்குபடுத்தல் மூலம் ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், நல்லொழுக்கத்தையும், சமத்துவத்தையும், அடைய இதற்கு உறுதி செய்வதற்கு.
சட்டம் எப்போது துணை நிற்கும், சட்டத்தின் முன் அனைவரும் சமம், என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் அவ்வாறு இருக்கிறதா என்பதில் கருத்துவேறுபாடுகள் பலவகை இருக்கிறது.
இத்தகைய சட்டத்தில் பலவகை பிரிவுகளில் இருக்கிறது, ஒவ்வொரு பிரிவுகளும், ஒவ்வொரு வகையான குற்றத்திற்கான தண்டனையும் அபராதமும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த கட்டுரையில் Indian Penal Code 420 IPC என்றால் என்ன? இந்த சட்டத்தின் குற்றவாளிகளுக்கு என்ன மாதிரியான தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படுகிறது, போன்ற தகவல்களை இங்கே படித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்திய தண்டனை சட்டம் 420 என்றால் என்ன?
ஒரு நபரை ஏமாற்றி அதன் மூலம் சட்டத்திற்கு விரோதமாக அவரை தூண்டி ஒரு சொத்தை பிறருக்கு விற்கும்படி செய்தாலும் அல்லது ஒரு மதிப்புள்ள காப்பீட்டை உருவாக்கும்படி அல்லது மாற்றும்படி அல்லது அளிக்கும்படி செய்தாலும்.
அல்லது மதிப்புள்ள காப்பீடாக கையெழுத்திட்டு முத்திரையிட்டு பயன்படுத்துவதற்கு ,அவ்வாறு உருவாக்க மற்ற அல்லது அளிக்கதக்க செயல் செய்தாலும்.
அத்தனை செயல்கள் செய்தவருக்கு 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக விதிக்கப்படும்.