Influenza fever on the in Madurai best 2022

Influenza fever on the in Madurai best 2022

கதிகலங்க வைக்கும் காய்ச்சல் நிரம்பி வழியும் மருத்துவமனைகள் என்ன செய்வது எப்படி பாதுகாத்துக் கொள்வது..!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சாதாரண காய்ச்சல் முதல் டெங்கு, வைரஸ் காய்ச்சல்,இன்ஃப்ளுயன்சா என மக்கள் கூட்டம் இப்போது அலைமோதி வருகிறது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு 100 படுக்கை வசதியுடன் வார்டு தயார் நிலையில் வைத்து இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது இன்ஃப்ளுயன்சா என்ற புதிய வகை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி, தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி, உடல் சோர்வு, ஆகியவை காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் என்று மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இது குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Influenza fever on the in Madurai best 2022

இன்ஃப்ளுயன்சா காய்ச்சல்

இது போன்ற அறிகுறிகளுடன் பொதுமக்கள் வந்தால் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசு அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

லேசான அறிகுறிகள் கொண்டவர்களை 48 மணி நேரத்திற்கு மருத்துவமனை கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அனைத்து மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உடனடியாக சிகிச்சை தேவை

Influenza fever on the in Madurai best 2022  குறிப்பாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 5 அல்லது 5 வயதிற்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள்.

தீவிரமான சுவாச பிரச்சனை கொண்டவர்கள், சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடிய நபர்களுக்கு.

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Influenza fever on the in Madurai best 2022

தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

Influenza fever on the in Madurai best 2022  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 2 தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திடீரென்று அதிகரித்துள்ளது.

நேற்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரே நாளில் மருத்துவமனையில் இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் அறிகுறிகளுடன் பரிசோதனைக்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

72 District secretaries best election of DMK

இதனால் சுதாரித்துக்கொண்ட தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் இப்பொழுது ஒரு சுற்று அறிக்கை அனுப்பியுள்ளது.

போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக இருங்கள்.

திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறதா

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதி, அவசர சிகிச்சைக்கான வசதி, என அனைத்தும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

மக்களை அதிக அளவில் பரிசோதனை செய்யுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment