INS Vikrant new warship useful details 2022
18 மாடி, 16 மருத்துவமனை பிரமாண்ட சமையலறை இந்தியாவின் புதிய ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் விலை என்ன தெரியுமா..!
பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொச்சியில் இந்தியாவின் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட புதிய ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பாதுகாப்பு துறையில் தன்நிறைவு பெறும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல் மிக பிரம்மாண்டமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் 16 மாடிகள் 16 மருத்துவமனைகள் ஒரே தளத்தில் 10 ஆயிரம் சப்பாத்திகள் செய்யும் அளவுக்கு பிரம்மாண்டமான சமையல் அறை ஆகியவை உள்ளன.
இந்தியாவின் கடின உழைப்பிற்கு அர்ப்பணிப்பு
இந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி பேசியபோது இன்று கேரளாவின் கடற்கரையில் ஒவ்வொரு இந்தியனும் ஒரு புதிய எதிர்காலத்தில் சூரிய உதயத்தை காண்கிறார்.
ஐஎன்எஸ் விக்ராந்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு இந்தியாவின் எழுச்சி உணர்வுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
விக்ராந் ஒரு போர்க் கப்பல் மட்டுமல்ல 21ம் நூற்றாண்டின் இந்தியாவின் கடின உழைப்பு, திறமை, செல்வாக்கு மற்றும் அர்ப்பணிப்புக்கு இது ஒரு மிகப்பெரிய சான்று என்று தெரிவித்தார்.
இந்திய வரலாற்றில் புதிய மைல் கல்
இந்திய கடற்படை உள்நாட்டுப் போர் கப்பல் வடிவமைப்பு பணியகத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ஐஎன்எஸ் விக்ராந்த் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்டது.
இந்தியாவின் கப்பல் கட்டும் வரலாற்றில் இதுவரை கட்டப்பட்ட கப்பல்களில் மிகப் பெரியது மற்றும் பிரம்மாண்டமானது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டிற்கு மிகப்பெரிய பாதுகாப்பு
ஐஎன்எஸ் விக்ராந்த் பெரிய தொழில் துறை நிறுவனங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட MSME சிறு குறு நிறுவனங்களை உள்ளடக்கியது.
பெரிய அளவிலான உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
விக்ராந்த் இயக்குவதன் மூலம் இந்தியாவில் இரண்டு செயல்பாடு விமானம் தாங்கி கப்பல்கள் இருக்கும் என்பது இது நாட்டின் கடல் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும்.
கப்பலின் நீளம் எவ்வளவு
INS Vikrant new warship useful details 2022 ஐஎன்எஸ் விக்ராந்த் இந்திய கடற்படையின் கூற்றின்படி 262 மீட்டர் நீளம் கொண்டது மேலும் இது 45,000 டன்களை சுமக்கும் திறன் கொண்டது.
மேலும் 16 தளங்களைக் கொண்டுள்ளது இந்த கப்பலில் சுமார் 1500 வீரர்களை ஏற்றிச் செல்ல முடியும் கப்பலின் சமையலறையில் சுமார் 10,000 சப்பாத்திகள் தயாரிக்கப்படுகின்றன.
கப்பலின் முழு விவரம்
INS Vikrant new warship useful details 2022 இந்தக் கப்பல் 4 எரிவாயு விசையாழிகாளால் இயக்கப்படுகிறது மொத்தம் 85 மெகாவாட் சக்தி மற்றும் அதிகபட்ச வேகம் 28 நாட்ஸ் சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட.
இந்த போர்க்கப்பலில் 16 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை 250 டேங்கர் எரிபொருள் மற்றும் 2400 பெட்டிகள் உள்ளன.