Jan dhan yojana scheme full details 2022
ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு தொடங்குவது எப்படி..!
இந்த ஜான் தான் திட்டம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் கடந்த 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் நாள் அன்று புதுதில்லியில் துவங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் நோக்கம்மானது வீட்டுக்கு ஒரு வங்கி கணக்கு வகையில் தூக்கப்பட்டது.
திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத 7 1/2 கோடி குடும்பத்தினருக்கு, காப்பீட்டு வசதிகளுடன் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது.
நாடு முழுவதும் மாநில தலைநகரங்களிலும் மற்றும் முக்கிய மாவட்ட தலைநகரங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை இருந்தால் மட்டும் போதும் வேறு எந்த ஆவணமும் கேட்கப்படுவதில்லை.
இந்த வங்கிக் கணக்கு தொடங்குவது எப்படி, யாரெல்லாம் இந்த வங்கி கணக்கை தொடங்க முடியும், இதற்கு தகுதி, வயது மற்றும் இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய வேண்டும்
இந்த பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கை தொடங்க பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா https://pmjdy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று.
அங்கு விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும் அல்லது உங்கள் ஏரியாவில் உள்ள பொதுத்துறை அல்லது தனியார் வங்கிகளில் இதற்கான விண்ணப்பத்தை நீங்கள் பெற முடியும்.
வங்கி கணக்கு தொடங்குவது எப்படி
ஆதார் அட்டை அல்லது ஆதார் எண் தங்களிடம் இருந்தால் போதும் அதனை பயன்படுத்தி நீங்கள் இந்த வங்கிக் கணக்கு தொடங்க முடியும்.
ஒருவேளை முகவரி மாறி இருந்தால் தற்போதைய முகவரி சான்றிதழ் போதுமானது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்று வைத்து வங்கி கணக்கை நீங்கள் தொடங்க முடியும்.
வாக்காளர் அடையாள அட்டை
ஓட்டுநர் உரிமம்
பான் அட்டை
பாஸ்போர்ட் அல்லது நீங்கள் வசிக்கும் முகவரி சான்றிதழ் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி இந்த வங்கி கணக்கை தொடங்க முடியும்.
ஒருவேளை ஆதார் அட்டை இல்லை என்றால் அவர்கள் முதலில் அதற்காக பதிவு செய்த பின்னரே சமர்ப்பிக்கவேண்டும்.
விண்ணப்பத்துடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் சமர்ப்பிக்கவேண்டும்.
இதற்கான வயது வரம்பு
இந்திய குடிமகன் யாராக இருந்தாலும் 18 வயது முதல் 65 வயது வரை உள்ள அனைவரும் இந்த கணக்கை தொடங்கலாம்.
இந்த வங்கி கணக்கில் சிறப்பம்சங்கள் என்ன
ஜன்தன் யோஜனா திட்டத்தில் வங்கி கணக்கு தொடங்கினால் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்கத் தேவையில்லை.
இந்த திட்டத்தில் வங்கி கணக்கு தொடங்கினால் 2,00,000/-ரூபாய் விபத்து காப்பீடு தொகை மத்திய அரசால் வழங்கப்படும்.
இந்த வங்கி கணக்கை தொடங்கி ஆறு மாத காலம் உரிய பண பரிவர்த்தனைகள் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10,000/- ரூபாய் ஓவர் ட்ராப்ட் வசதி வங்கிகளால் அளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஓய்வூதியம் மற்றும் மற்ற காப்பீட்டு சேவைகளை எளிமையாக பெறலாம்.
இந்த வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஒருவேளை உயிரிழந்தால் பயனாளர்களுக்கு 30,000/- ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் பயன்கள் என்ன
இந்த வங்கி கணக்கை தொடங்கியவர்களுக்கு வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் அரசின் மானியம் பெற முன்னுரிமை அளிக்கப்படும்.
தாய்ப்பாலை அதிகரிக்கும் சிறந்த 10 உணவுகள்
இதர அரசின் திட்டங்கள் கீழ் பயனாளிகளுக்கு அனைத்து துறைகளும் சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் நேரடியாக தொகை செலுத்தப்படும்.
10 amazing health benefits of Sunflower oil
இந்த திட்டத்தின் மூலம் சேமிப்பு, கிரடிட் காப்பீடு, ஓய்வூதியம், குறைந்தபட்ச வருமானம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு பல்வேறு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது.