Jasmine Flower Best Health 5 Benefits in tamil

மல்லிகை மலர் சிறந்த ஆரோக்கியம் 5 தமிழில் நன்மைகள்(Jasmine Flower Best Health 5 Benefits in tamil)

மல்லிகைப் பூவின் வாசனை இந்த உலகத்தில் மயங்காத மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இதனுடைய தனித்துவமான வாசனை அனைவருக்கும் பிடித்துவிடும்

மல்லிகைப் பூக்களை தலையில் சூடிக் கொள்வது பெண்களுக்கு அழகு என்பார்கள் மல்லிகைப் பூக்கள் காதல் விஷயத்தில் முதன்மையாக இருக்கிறது மேலும் பாலியல் உணர்ச்சியை தூண்டி விடுகிறது மனிதர்களுக்கு

இந்த மூன்று காரணங்கள் பொதுவாக நாம் அறிந்தவரை தான் ஆனாலும் யாரும் எதிர்பாராத வகையில் மல்லிகைப் பூவிற்கு பலவித மருத்துவ குணங்கள் உள்ளது

பால்வினை நோய் குணமாக மல்லிகைப் பூவின் மொட்டுக்களை மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும் மல்லிகைப்பூக்கள் சிறுநீரகம் கண் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது

மல்லிகைப் பூக்களை சுடுநீரில் கொதிக்க வைத்து அந்த நீரை பனங்கற்கண்டு சேர்ந்து குடித்து வந்தால் கண்களில் ஏற்படும் சதை வளர்ச்சி குறைய ஆரம்பிக்கும்

Jasmine Flower Best Health 5 Benefits in tamil

பழங்காலத்தில் மன்னர்கள் பயன்படுத்திய சிகிச்சை முறையை இன்றைக்கு இருக்கும் தம்பதியர்கள் பயன்படுத்தலாம் அதாவது குழந்தை இல்லாத தம்பதிகள் மல்லிகைத் தோட்டத்தில் இரவு வேளைகளில் உலவி வந்தால் அதன் நறுமணம் மூலம் உடலில் பலவித மாற்றங்கள் ஏற்படும்

இதன் மூலம் குழந்தை பெறுவது எளிமையாக நடைபெறும் என்று நம் முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள் பொதுவாக இரவில் மல்லிகை பூ மலர்வது அதன்மூலம் வாசனை அதிகமாக வெளிப்படுவது இயல்பான ஒரு நிகழ்வு

மல்லிகைப் பூக்களை தைலமாக மாற்றி அந்த வாசனை திரவியத்தை உங்கள் படுக்கை அறையில் தலையணை பெட்ஷீட் உள்ளிட்டவை  மீது தடவிவந்தால் உங்கள் அறை முழுவதும் நல்ல வாசனை நிகழும்

இதனால் உங்களுடைய மனது அமைதியாகும் மேலும் உங்கள் உடலில் ரத்த ஓட்டம் சீராக நடைபெறும் மல்லிகைப்பூக்களை நன்றாக அரைத்து உடலில் வீக்கம் ஏற்பட்ட பகுதி மீது தடவிவந்தால் வீக்கம் குறைய ஆரம்பிக்கும்

மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி அதனை பொடி போல் செய்து சுடுநீர் அல்லது பாலில் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் கரையும் மேலும் உடலில் பித்தம் குறைய ஆரம்பிக்கும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்கும்

நமது குடலில் பாதிப்புகளை ஏற்படுத்தும் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கி விடும் இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும்

MOST READ   கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சத்து

Jasmine Flower Best Health 5 Benefits in tamil

இந்த குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை பூக்களை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் குடல் புழுக்கள் விரைவில் நீங்கும் இது பழங்கால வைத்திய முறை அதேபோல் உங்களுக்கு ஜீரணக் கோளாறுகள் இருந்தாலும் மல்லிகைப் பூ சுடு தண்ணீர் போட்டு குடித்து வரலாம்

மல்லிகைப் பூக்களை அடிக்கடி நீங்கள் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும் எப்போதும் மனிதர்களுக்கு தொல்லையை கொடுக்கும் சளியினால் ஏற்படும் மூக்கடைப்பு இருமல் போன்ற தொந்தரவுகள் நீங்க மல்லிகைப் பூக்கள் உதவி செய்கின்றன

எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க

மல்லிகை மொட்டுக்களை எடுத்து புண்கள் காயம்பட்ட இடங்கள் கொப்புளங்கள் வீக்கங்கள் போன்றவற்றிற்கு அரைத்து பூசினால் விரைவில் குணமடையும்

The best 7 ways to stay close in life for love

இன்றைய காலகட்டத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை என்றால் அது மன அழுத்தம் மற்றும் உடல் சூடு போன்றவை இதை எளிதில் போக்க உங்கள் வீடு சுற்றி மல்லிகை தோட்டம் அமைக்கலாம்

உங்களுக்குப் பிடித்தமான இடத்தில் ஒன்று அல்லது இரண்டு மல்லிகைச் செடிகளை நட்டு வைத்தால் அதன் பூவிலிருந்து வரும் வாசனை உங்களுக்கு நல்ல அமைதியும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிப்பதால் நீங்கள் நேர்மையாக சிந்திக்கலாம் இதனால்  உங்கள் உடல் சூடு குறைய ஆரம்பிக்கும்

Leave a Comment