சத்தமே இல்லாமல் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய சலுகைகள்.(Jio announced new recharge offer for covid-19)
ஜியோ நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட குறைந்த பட்ஜெட் விலையில் அதிக டேட்டா தரும் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம் மேலும் டேட்டா நன்மை தவிர பல்வேறு கூடுதல் சலுகைகளும் வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம்.
இந்தியாவில் நிலவி வரும் இந்த பேரிடர்காலத்தில் மக்களுக்கு உதவும் வகையில் ஜியோ நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு அட்டகாசமான சலுகை வழங்கியுள்ளது இந்த சலுகை பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2ம் அலை காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த பெருதொற்று காரணமாக மக்களுக்கு உதவிடும் வகையில் ரீச்சார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ளும் வகையில் சிறப்பான சலுகையை ஜியோ நிறுவனம் இப்பொழுது அறிவித்துள்ளது அதற்காக இந்நிறுவனம் ரிலையன்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்துள்ளது.

ஜியோ நிறுவனம் அளித்துள்ள முதல் சலுகை இந்த பெருந்தொற்று காலம் நீடிக்கும் வரை ஜியோ போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 300 நிமிடங்கள் இலவசமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.
ஜியோ நிறுவனம் அளித்துள்ள இரண்டாவது சலுகை என்னவென்றால் ஜியோ போன் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு ரீசார்ஜ் திட்டத்தை வாங்கினாலும் அதே மதிப்பிலான கூடுதலான திட்டம் அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனம் அளித்துள்ள இரண்டாவது சலுகை பற்றி விரிவாக பார்ப்போம் ஜியோ போன் வைத்திருக்கும் ஒரு நபர் ரூபாய் 75 க்கு ரீசார்ஜ் செய்தால் அதே மதிப்பீட்டில் அவருக்கு கூடுதலாக ரூபாய் 75 ரூபாய்க்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த பெருந்தொற்று காலம் முடியும்வரை ரீசார்ஜ் செய்ய இயலாத நிலையில் இருக்கும் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 10 நிமிடங்கள் அடிப்படையில் ஒரு மாதத்திற்கு 300 இலவச நிமிடங்களை தருகிறது ஜியோ நிறுவனம் கண்டிப்பாக இந்த சலுகை கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்று தான் கூற வேண்டும்.

ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் இப்பொழுது நிலவிவரும் இந்த கடுமையான சூழ்நிலைகளில் பல்வேறு வகையில் மக்களுக்கு உதவி வருகிறது ஒரு நாளைக்கு ஒரு லட்சம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை இந்நிறுவனம் நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு வழங்கிவருகிறது.
விலை குறைவுதான் சிறப்பம்சங்கள் அதிகம் விரைவில் வெளிவருகிறது ரெட்மி நோட் 10 ப்ரோ 5 ஜி.
கொரோனா வைரஸ் 1 அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது இந்நிலையில் தற்போது மீண்டும் 2வது அலை முதல் அதை விட பல மடங்கு வேகமாக பரவி வருகிறது குறிப்பாக வட மாநிலங்களில் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது.
மேலும் முதல் அலையில் பரவி கொரோனா வைரஸ் இப்போது புதிதாக உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் மக்களை எச்சரித்துள்ளார்கள்.