விரைவில் ஜியோ மின்வாகன சார்ஜிங் மையம் மொபைல் பில் போலவே மலிவான கட்டணத்தில் சார்ஜ்க் செய்து கொள்ளலாம்(Jio electric vehicle new charging station 2021)
இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் மிகப் பெரிய ஒரு புரட்சியை ஏற்படுத்திய ஜியோ நிறுவனம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துடன் கூட்டணி தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டு இணைவின் வாயிலாக நாடு முழுவதும் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
மலிவு கட்டண இணையவழி சேவை மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றிற்கு பெயர் போன நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இருக்கிறது.
இந்தியாவை மையமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் மிக சமீபத்தில் நாட்டில் மிகவும் பிரமாண்டமான மின் வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி ஆலையை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து மின் வாகன இயக்கத்தில் மேலும் தீவிர காட்டும் வகையில் இன்னும் சில புதிய நடவடிக்கைகளை இந்நிறுவனம் எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் உள்ள முக்கிய பகுதிகளில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் இந்த நிறுவனம் அதிரடியாக இறங்கியுள்ளது.
இதற்காக தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துடன் கூட்டணி தொடங்கியிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிறுவனங்களில் கூட்டணியில் ப்ளூஸ்மார்ட்-எம் மேலும் ஒரு நிறுவனமாகவும் சேர்ந்து இருக்கிறது, இவர்கள் மூவரும் இணைந்து மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டு வர இருக்கிறார்கள்.
இன்னும் சில ஆண்டுகளில் இந்த நிறுவனங்களின் கூட்டணி வடிவில் உருவாக்கப்படும் மின்சாதனங்கள் பயன்பாட்டிற்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் செயல்பாடு அனைத்தும் இந்த நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள தகவலின்படி நமது நாட்டின் தலைநகரத்தில் இந்த கூட்டணி முதல்கட்ட சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் குறைந்தது 30 மின் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வகையில் இந்த வசதியை ஏற்படுத்த திட்டமிட்டு உள்ளார்கள்.
உலக அளவில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் அமைக்கும் முன்னணி நிறுவனமாக இருக்கும் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் தற்போது இந்தியாவிலும் விரைவில் கால்பதிக்க இருக்கிறது.
இதன் மூலம் ஆங்காங்கே மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் மிக விரைவில் இந்தியாவில் அமைக்கப்படும் பெட்ரோல் பங்க் போல.
தற்போது இந்தியாவில் போதிய அளவு மின் வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்பாட்டிற்கு மாற மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள்.
Click here to view YouTube channel
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியாவில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை உற்பத்தி செய்வது அதிகரித்துள்ளது அதுமட்டுமில்லாமல் பல முன்னணி நிறுவனங்கள் உற்பத்தியை படுவேகமாக தொடங்கியுள்ளது.
Top 10 Health Benefits of Eating Fish in tamil
இதற்கான சார்ஜிங் மையங்கள் அமைக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகிறது மிக விரைவில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் அதிக அளவில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படும் என்பது ஒரு உண்மையான விஷயமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.