JIO மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் செப்10 முதல் விற்பனைக்கு வரவிருக்கிறது சிறப்பு அம்சங்கள் வெளியீடு(JIO launch a new smartphone from sep 10)
இந்தியாவில் தொலைத் தொடர்புத் துறையில் மிகப் பெரிய ஒரு புரட்சியை ஏற்படுத்திய முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தற்போது மறுபடியும் தொலைத்தொடர்பு துறையில் இந்திய மக்கள் பயனடையும் வகையில் குறைந்த விலையில் ஸ்மார்ட் போனை வழங்குவதற்கு இப்போது தயாராகிக்கொண்டிருக்கிறது
ஜியோ நிறுவனம் தொலைதொடர்பு துறையில் கால்பதிக்க முன்பு இந்தியாவில் ஒரு ஜிபி இன்டர்நெட் அதிகபட்ச விலையாக 250 ஆக இருந்தது
ஜியோ நிறுவனம் வந்த பிறகு மாதத்திற்கு 200 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் போதும் தினமும் குறைந்தது 1.5 ஜிபி இன்டர்நெட் கிடைக்கும் மேலும் பல்வேறு சலுகைகள் பயனாளர்களுக்கு வாரி வழங்கியுள்ளது இதனால் இந்தியாவில் இப்பொழுது முதன்மையான நிறுவனமாக உள்ளது
உலகில் குறைந்த விலையில் இன்டர்நெட் சேவையை வழங்கும் ஒரே நிறுவனம் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் மட்டுமே
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் 44வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் இந்தியாவில் குறைந்த விலையில் புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கடந்த ஆண்டு அறிவித்தது போல் ஆண்ட்ராய்ட் வசதிகள் கொண்ட ஒரு புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது
முகேஷ் அம்பானி மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை இருவருக்குமிடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது
அந்த ஸ்மார்ட் போனில் கூகுள் பிளே ஸ்டோர் அணுகுதல் வாய்ஸ் அசிஸ்டன்ட் திரையில் தோன்றும் செய்திகளை தானாக படித்தல் மற்றும் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது
இதுகுறித்து பொதுக்கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி இந்தியாவில் இன்றும் கூட பல லட்சம் ஏழை மக்கள் 2ஜி இணைய வசதிகளை மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிவித்தார் இன்று வரையும் ஒரு அடிப்படை 4ஜி ஸ்மார்ட் போனை இந்த ஏழை மக்களால் வாங்க முடியாத சூழ்நிலையில் உள்ளார்கள்
கூகுள் மற்றும் ஜியோவின் அடுத்த தலைமுறையில் அதிக சிறப்பம்சங்கள் நிறைந்த மலிவு விலையில் ஸ்மார்ட் போனை உருவாக்குவது பற்றி சுந்தர் பிச்சை அவர்களிடம் பேசினோம்
இந்த ஸ்மார்ட்போன் இப்பொழுது இந்தியாவில் நிகழும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக அதன் வெளியீட்டு தேதி செப்டம்பர் 10 என முடிவு செய்யப்பட்டுள்ளது
MOST READ கோவாக்சின் VS கோவிஷீல்ட் எது நல்லது தடுப்பூசி
ஆனால் இந்த தொலைபேசியின் விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை இந்த தொலைபேசி இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் மிகவும் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் ஆக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக உள்ளது
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
ரிலையன்ஸ் ஜியோ தொலைபேசியை இந்தியாவில் அறிமுகப்படுத்தினால் இப்பொழுது முன்னணியில் இருக்கும் சாம்சன், ரியல்மீ, ஷியோமி போன்ற நிறுவனங்களின் விற்பனை கடுமையாக பாதிக்கும் என்பது உறுதியான ஒரு விஷயம்
அழகான பளபளப்பான முகம் மற்றும் சருமம்
ஜியோ நிறுவனம் 2016ஆம் ஆண்டு தொலைத்தொடர்புத் துறையில் ஏற்படுத்திய புரட்சியை போன்று மறுபடியும் தொலைபேசியில் புரட்சியை ஏற்படுத்தும் என்பது ஒரு உண்மையான விஷயமாக உள்ளது
Covid-19 Infection Make Strong Immunity
குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் மட்டுமில்லாமல் தரமான பொருளாகவும் இது இருக்கும் என்பது இந்திய மக்களால் நம்பப்படுகிறது