Jio next new smartphone launch date 2021

Jio next new smartphone launch date 2021

இந்தியாவுக்காக, இந்தியர்களால், இந்தியாவில், உருவாக்கப்பட்ட ஜியோ போன் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி அறிமுகம்.

2021 ஆம் ஆண்டிலும் இந்தியாவில் 2ஜி சேவை பிரிவில் கிராமப்புறங்களில் அதிக அளவிலான மக்கள் இருக்கிறார்கள் இவர்களை 4ஜி சேவை பிரிவிற்கு மாற்ற வேண்டும்.

அது மட்டுமில்லாமல் இந்தியாவில் அதிக அளவில் தொலைபேசிகளை விற்பனை செய்வதற்கு ஜியோ நிறுவனம் ஒரு தொலைநோக்கு திட்டத்தை வைத்துள்ளது.

இன்று இந்தியாவில் இணையதள சேவைகள் தான் மிகப்பெரிய வர்த்தகமாக மாறியுள்ள வேலையிலும் இந்த வாடிக்கையாளர்களை அதிக அளவில் தக்க வைத்துக் கொள்வதற்கு.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த ஸ்மார்ட் போனுக்கு கிராமம் மற்றும் சிறிய நகர்ப்புற பகுதிகளில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் நிலையில், அதிக அளவிலான மக்கள் வருகின்ற காலத்தில் ஜியோ போன் நெக்ஸ்ட் உபயோகப்படுத்துவார்கள்.

Jio next new smartphone launch date 2021

முகேஷ் அம்பானியின் திட்டம்

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், கூகுள், குவால்காம், ஆகிய இரு நிறுவனங்கள்யுடன் கூட்டணி வைத்து இந்தியாவில் கிராமப்புற மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் தினமும் பயன்படுத்தும் வகையில் மிகவும் குறைந்த விலையில் உருவாக்கப்பட்ட போன் தான் ஜியோ நெக்ஸ்ட் போன்.

ஜியோ போன்

இந்த ஜியோ நெக்ஸ்ட் போன் கடந்த விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது இந்தியாவில் பிரமாண்டமாக அறிமுகம் செய்ய ரிலையன்ஸ் குழுமம் முடிவு செய்திருந்தது.

இந்த நிலையில் போதுமான சிப் இல்லாத காரணத்தால் இந்திய முழுவதும் விற்பனை செய்யும் அளவிற்கு போதுமான தொலைபேசி தயாரிப்பு மற்றும் இருப்பு இல்லை இதனால் அறிமுகம் செய்யும் நாளை அந்த நிறுவனம் மாற்றியுள்ளது.

Jio next new smartphone launch date 2021

தீபாவளி பண்டிகை

வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது, அதனால் ஜியோ போன் நெக்ஸ்ட் விற்பனை சந்தைக்கு அறிமுகம் செய்தால்.

ஒரே நாளில் அதிக அளவில் மக்களிடத்தில் இந்த போனை பற்றி தகவல்கள் கொண்டு சேர்க்க முடியும் என ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்

கடந்த காலங்களில் கூகுள் நிறுவனம் கணிசமான தொகையை ஜியோவில் முதலீடு செய்தது இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.

இந்த முதலீட்டிற்கு பின்பு மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போன் உருவாக்குவதற்கு கூகுள் நிறுவனம் இந்தியர்களுக்காகவே தனது ஆண்ட்ராய்டு செயலில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது.

அறிமுகம் செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 215 மூலம் இயங்க கூடியது

டிஜிட்டல் டெக்னாலஜி இந்தியாவில்

இவை அனைத்திற்கும் மேலாக இந்த ஜியோ போன் இந்தியர்கள் பயன்படுத்தும் விதத்திற்கு, இந்தியர்களால், இந்தியாவுக்காக, உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனுடைய விலை

இந்த ஜியோ ஸ்மார்ட்போன் வெறும் 3,499 ரூபாய் விலையில் கிடைக்கும் காரணத்தால் ஏழை எளிய மக்கள் இதனை வாங்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

இதோடு இந்த ஒரு போன் அறிமுகத்தின் மூலம் ஜியோ அதிகப்படியான வாடிக்கையாளர்களை, இந்தியாவில் மேலும் பெற உள்ளது என குறிப்பிடத்தக்கது.

Click here to view our YouTube channel

இதனால் ரிலையன்ஸ் நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளுக்கு தனது கட்டணத்தை உயர்த்தாமல் அப்படியே வைத்திருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

6 best small business ideas in tamil

இதனால் ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையாகவும் வர்த்தக பெரும் பாதிப்பாக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

Leave a Comment