kadai valarpu business full details 2021
சிறு தொழில் காடை வளர்ப்பு மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ 30,000/-
கால்நடை வளர்ப்பு தொழிலில் இந்தியாவில் பரவலாக வளர்க்கப்படுவது காடை வளர்ப்பு தான், அதிகம் பறக்க இயலாத தரை பறவை எது என்றால் அது காடைதான்.
வேளாண் சார்ந்த தொழிலை முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும், நாடு முழுவதும் காடை வளர்ப்பு தொழில் செய்து வருகின்றனர் இறைச்சியும் முட்டையும் மிகவும் சுவையானது மட்டுமில்லாமல் அதிக ஊட்டச் சத்து நிறைந்ததாகவும் இருக்கிறது.
காடை வளர்ப்பு தொழில் என்பது இப்பொழுது நல்ல லாபம் கொழிக்கும் தொழிலாக மாறி உள்ளது ஏனெனில் இந்த சிறிய காடை இயற்கையான சூழ்நிலையில் மட்டுமே வளரக்கூடியது.
கோழி வளர்ப்பு தொழில் போல் காடை வளர்ப்பு இல்லை கோழிகள் வேகமாக வளர்வதற்கு ஊசிகள் செயற்கையான முறையில் போடப்படும்.
காடை வளர்ப்பில் எந்த ஒரு வேதிப்பொருட்களும் அதிகமாக சேர்க்க முடியாது ஏனென்றால் காடை மிகவும் உணர்ச்சிகரமான ஒரு சிறிய பறவை.
காடை வளர்ப்பின் ரகங்கள்
தற்போது 18 காடை இனங்கள் வளர்ப்புக்கு ஏற்றதாக கூறப்படுகிறது இவற்றில் சில இறைச்சி உற்பத்திக்கும் சில முட்டை உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது.
உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு முட்டைக்கான இனம் என்றும் இறைச்சிக்கான இனம் என்றும் இது பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் முட்டை மற்றும் இறைச்சிக்கனா இனங்கள் என்று தனித்தனியே கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் பார்க்கலாம்.
இறைச்சிக்கான இனங்கள்
இளம் குஞ்சு பராமரிப்பு – (Brooding)
பாப் ஒயிட் – Bob white (American)
ஒயிட் ப்ரெஸ்டெட் – White Breasted (Indian)
முட்டைக்கான இனங்கள்
டாக்ஸி – Tuxedo
பாரோ – Pharaoh
பிரிட்டிஷ் – British Range
இங்கிலீஷ் ஒயிட் – English white
மஞ்சூரியன் கோல்டன் – Manchurian Golden
காடை வளர்ப்பு குறித்து சில ஆலோசனைகள்
காடை வளர்ப்பு பற்றி நன்கு தெரிந்தவர்களிடம் ஆலோசனை பெற்று காடை வளர்ப்பு தொழிலை துவங்குவது நல்ல சிறந்ததாக அமையும்.
குறிப்பாக தோராயமாக 500 காடை வளர்ப்பு முறைக்கு தரைப்பகுதியில் சிமெண்டில் தளங்கள் போட்டு பின்பு செட் அமைக்க வேண்டும் அல்லது கம்பி வலையில் சுவர் எழுப்ப வேண்டும் இவ்வாறு செய்தால் தான் காடை வெளியே செல்லாமல் தடுக்க முடியும்.
காடைகளை வளர்க்க தேவையான முதலீடு
நீங்கள் செட் அமைப்பதற்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும் அதன் பிறகு அவற்றில் காடை வாங்க வேண்டும் காடையை பொருத்தவரை அனைத்து இடங்களிலும் நிலையாக விற்கப்படும் விலை 1000 காடை வாங்கினால்.
ஒரு காடைவிலை 7 ரூபாய்க்கு குறைவாக விற்கப்படுகிறது, அதாவது ஒரு காடைவிலை 6.50 ரூபாய் அல்லது 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
உதாரணத்திற்கு ஒரு காடையின் விலை குறைந்த பட்சம் 6 ரூபாய் என்றால் 1,000/- காடையின் விலை ரூபாய் 6,000/- காடை வளர்ப்பு கால்நடை தீவன செலவு ரூபாய் 7,500/-
இதர செலவுகள் தோராயமாக ரூ 4,000/-
எனவே காடை வளர்ப்புக்கு குறைந்தபட்சம் ரூ 35,000/-ரூபாய் தேவைப்படும்.
இளம் குஞ்சு பராமரிப்பு முறைகள்
குஞ்சு பொரித்த பின் முதல் மூன்று வாரம் வரை இளம் குஞ்சு பராமரிப்புக் காலமாக இருக்கிறது கடும் குளிர் காலத்தில் இளம் குஞ்சு பராமரிப்புக் காலமானது நான்கு வாரம் வரை கூட நீடிக்கலாம்.
இளம் குஞ்சு பராமரிப்புக் காலத்தில் சராசரி குஞ்சு இறப்பு விகிதம் 6 முதல் 10 சதவீதம் வரை கூட இருக்கக் கூடும், இறைச்சிக் கோழியின் இளம் குஞ்சுகளை பராமரிப்பதை விட இளம் குஞ்சுகளைப் பராமரிப்பது மிக கடினம்.
இளம் காடைக் குஞ்சுகள் பராமரிப்பில் குஞ்சுகளுக்கு வெப்பம் வழங்கும் முறை முக்கிய பங்கு இருக்கிறது, நன்கு காய்ந்த மணல் கீழாகவும் ஈரத்தை உறிஞ்ச கூடிய காய்ந்த தென்னை நார்க் கழிவுகள் அல்லது நிலக்கடலை சக்கைகள் மேலாகவும் இருக்கவேண்டும்.
சுமார் 5 முதல் 10 சென்டி மீட்டர் உயரத்திற்கு இருக்க வேண்டும் காடைகளை கம்பிவலை கூண்டுகளில் வளர்ப்பதாக இருந்தால் முதல் வாரத்தில் கூண்டில் அடிப்பகுதியில் கெட்டியான அட்டைகளை இருக்க வேண்டும்.
இன்குபேட்டரில் இருந்து வெளிவரும் காடைக் குஞ்சுகளுக்கு முதல் வாரத்துக்கு 35 டிகிரி வெப்பம் இருக்குமாறு,தொடர்ந்து அடுத்த வாரத்தில் 3.5 டிகிரி கொடுத்தும் வளர்க்கலாம்.
நான்காவது வாரத்தில் குஞ்சுகளின் இறக்கைப் பகுதி நன்கு வளர்ந்து விடுவதால் அதன் பின் கடைகளுக்கு அறை வெப்பநிலை போதுமானதாக இருக்கும்.
முதல் நான்கு வார காலத்திற்கு தீவனத்தொட்டி 2 முதல் 3 சென்டி மீட்டர் உயரத்திலும் தண்ணீர் தொட்டி 1 முதல் 2 சென்டி மீட்டர் உயரத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு குஞ்சுக்கு 7.5 சதுர சென்டி மீட்டர் பரப்பளவு இடம் இருக்குமாறு கட்டாயம் இடம் வசதி செய்து தரவேண்டும்.
மூன்று வாரம் வரை இடம் வசதி சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே வர வேண்டும், இப்படி இடவசதியை அதிகரிப்பது என்பது குளிர், வெப்பம், காற்றின் வேகம், ஈரப்பதம், போன்றவற்றை அனுசரித்து மாறுபடும்.
காடை முட்டை உற்பத்தி குறிப்புகள்
அதிகப்படியான முட்டை உற்பத்திக்கு வெளிச்சம் மிக அவசியமாக தேவைப்படுகிறது முட்டையிடும் காடை 14 முதல் 18 மணி நேரம் வெளிச்சம் இருப்பதை விரும்பும் அதற்கு ஏற்ப முன் இரவு நேரத்தில் மின்சார வெளிச்சத்தை ஏற்படுத்தி முட்டை உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
பெண் காடையானது 7வது வாரத்தில் முட்டையிடத் தொடங்கும் 8வது வாரத்தில் 50 சதவீத முட்டை உற்பத்தி துவங்கிவிடும் பெண் காடை 16 முதல் 24 மணி நேரத்திற்கு ஒரு முட்டை வீதம் இடும்.
8 முதல் 12 மாதங்களில் அதிகமாக முட்டையிடும் மாலை வேளைகளில் தான் முட்டைகள் இடும் காடைகள் 22 மாதம் வரை முட்டை இடும்.
ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்
காடை சந்தை வளர்ப்பு முறை
இவ்வாறு 28 நாட்கள் வளர்க்கப்பட்ட ஒரு காடையின் சந்தை விலை கறிக்காக ரூபாய் 30 இதை நேரிடையாக நுகர்வோரிடம் விற்பனை செய்தால் ரூபாய் 35 என்று கூட விற்பனை செய்யலாம் இதன் மூலம் மாதம் குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பெறலாம்.
Waffle Business new ideas in tamil 2021
காடை வளர்ப்பு தொழிலை பொறுத்தவரை நஷ்டம் இல்லாத தொழில் தான் இந்த தொழில் மீது அதிக ஆர்வம் உள்ளவர்கள் இதற்கான ஆலோசனைகள் பெற்று தயக்கமில்லாமல் இந்த தொழிலை தொடங்கலாம்.